பணம் வைக்குற இடத்துல இந்த தவறுகளை செய்யாதீங்க.. இல்லன்னா உங்க வீட்டுல பணமே சேராது...

Vastu Tips In Tamil: நாம் அனைவரும் நமது நிதி நிலையை உயர்த்தவே விரும்புவோம். அதற்காக அல்லும் பகலும் கஷ்டப்பட்டு உழைத்துக் கொண்டிருக்கிறோம். ஒருவர் நல்ல வசதியான மற்றும் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ வேண்டுமானால், அதற்கு பணம் மிகவும் அவசியம். கையில் போதுமான அளவில் பணம் இருந்தால் தான் நாம் விரும்புமாறான வாழ்க்கையை வாழ முடியும்.

ஆனால் நாம் எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்தாலும், நம் கைக்கு வரும் பணம் வந்த வேகத்திலேயே செலவாகிவிடும். இதற்கு முக்கிய காரணம் வீட்டில் நாம் பணத்தை சரியான இடத்தில் முறையான வாஸ்து விதிகளைப் பின்பற்றி வைக்காமல் இருப்பது தான். ஒருவர் வீட்டில் தவறான இடத்தில் பணத்தை வைத்தால், அந்த பணம் வீட்டில் நிலைத்திருக்காது.

Vastu Mistakes To Avoid While Keeping Money At Home In Tamil

எனவே வீட்டில் பணம் பெருக மற்றும் நிலைத்திருக்க விரும்பினால், வாழ்க்கையில் செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவியின் அருள் முழுவதும் கிடைக்க வேண்டுமானால், பணம் வைக்கும் இடத்தில் பின்வரும் தவறுகளை செய்வதைத் தவிர்த்திடுங்கள். இப்போது அந்த தவறுகள் என்னவென்பதைக் காண்போம்.

கிழிந்த பணம்

பணம் கழிந்து போனால் அந்த கிழிந்த பணத்தை சேமித்து வைக்கும் பழக்கம் பெரும்பாலானோருக்கும் இருக்கும். ஆனால் கிழிந்த நோட்டுகளை எப்போதும் பணம் சேமித்து வைக்கும் இடத்தில் வைத்திருக்கக்கூடாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஒருவேளை இப்படி கிழிந்த நோட்டுகள் உங்களிடம் இருந்தால், அவற்றை உடனே செலழித்துவிடுங்கள். செலவழிக்க முடியாவிட்டால், வங்கிக்கு சென்று மாற்றிக் கொள்ளுங்கள்.

எதிர்மறை பொருட்கள்

நம் வீட்டில் பணத்தை பீரோவில் வைக்கும் போதெல்லாம், அந்த பணம் பெருக வேண்டுமென்றே விரும்புவோம். ஆனால் அப்படி பணம் வைக்கும் இடத்தில் எதிர்மறை பொருட்களை வைத்திருந்தால், அது அப்பணத்தை தேவையில்லாமல் செலவழிக்க வைத்துவிடும். எனவே பணம் வைக்கும் இடத்தில் நீதிமன்ற வழக்கு ஆவணங்கள் அல்லது பிரச்சனை நிறைந்த சொத்து பத்திரங்கள் போன்றவற்றை வைத்திருப்பதைத் தவிர்த்திடுங்கள்.

பணத்துடன் மருந்துகள்

வீட்டில் மருந்துகளை ஒரே இடத்தில் வைத்து பயன்படுத்தும் பழக்கம் பெரும்பாலானோரிடம் இருக்காது. கிடைத்த இடத்தில் மருந்துகளை வைத்து தான் நிறைய பேர் பயன்படுத்துவார்கள். ஆனால் நீங்கள் பணம் வைக்கும் இடத்தில் மருந்துகளையும் வைப்பவராயின், முதலில் அப்பழக்கத்தைக் கைவிடுங்கள். பணம் வைக்கும் இடத்தில் உள்ள மருந்துகளை உடனே அப்புறப்படுத்துங்கள். இல்லாவிட்டால், அது மருத்துவ செலவுகளை அதிகரித்து, வாழ்க்கையில் நிறைய பண பிரச்சனையை சந்திக்க வைக்கும்.

நிறங்களை கவனிக்கவும்

வீட்டில் பணத்தை பாதுகாப்பாக வைத்திருக்கும் போது, அந்த பணம் வைக்கும் இடத்தை அழகாக வைத்துக் கொள்ள பலவண்ணங்களைப் பயன்படுத்துவோம். ஆனால் வீட்டில் பணம் பெருக வேண்டுமானால், பணம் வைக்கும் பகுதியானது உலோக நிறங்களை கொண்டிருக்க வேண்டும். அதுவே மங்களகரமானதாக கருதப்படுகிறது. அதுவும் வெள்ளி, கோல்டன் அல்லது வெளிர் நிற கிரே போன்ற நிறங்களைப் பயன்படுத்துவது நல்லது. ஆனால் கருப்பு, அடர் சிவப்பு போன்ற நிறங்களை பயன்படுத்தக்கூடாது.

சரியான இடம்

வீட்டில் பணம் அதிக பணம் சேர வேண்டுமானால், பணம் வைக்கும் இடத்தை கவனிக்க வேண்டும். உங்கள் வீட்டில் பணத்தை அலமாரியில் வைப்பீர்களானால், அந்த அலமாரி வடக்கு திசையை பார்த்தவாறு இருக்க வேண்டும். அதோடு அந்த அமாரிக்கு முன் வேறு எந்த ஒரு கதவும் இருக்கக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதோடு, முக்கியமாக அலமாரிக்கு எதிரே கழிவறையின் கதவு இருக்கக்கூடாது. அப்படி இருந்தாலும், பணம் வீட்டில் சேராது.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Desktop Bottom Promotion