Latest Updates
-
செப்டம்பரில் நிகழும் குரு-செவ்வாய் சேர்க்கை: இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க.. -
Krishna Janmashtami 2026: கிருஷ்ண ஜெயந்தி எப்போது வருகிறது? வீட்டில் எப்படி பூஜை செய்யணும் தெரியுமா? -
ராகி மாவும், பச்சை பயறும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி கொழுக்கட்டை செஞ்சு குடுங்க.. விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியன்-புதன்-கேது நட்சத்திரம் ஒரே நட்சத்திரத்தில் இணைவதால் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
உங்களுக்கு புற்றுநோய் வரக்கூடாதா? அப்ப அமெரிக்க டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
பரங்கிக்காயை இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் புளிக்கறி செஞ்சு பாருங்க - சாதத்தோட சாப்பிட அருமையா இருக்கும் -
ஒரு லிட்டர் பெட்ரோல் விற்றால் பெட்ரோல் பங்க்-க்கு எவ்வளவு ரூபாய் லாபம் கிடைக்கும் தெரியுமா? -
ரக்ஷா பந்தன் அன்று உங்க அண்ணன் ராசிக்கேற்ற நிறத்தில் ராக்கி கட்டுங்க.. நல்ல அதிர்ஷ்டத்தை தரும்.. -
கொள்ளு தோசையும், பூண்டு தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 26 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு பணமும், புகழும் தேடிவரும் நாளாக இருக்குமாம்
உங்க டாய்லெட்டில் மஞ்சள் கறை போகமாட்டீங்குதா? அப்ப இத வெச்சு க்ளீன் பண்ணுங்க.. புதுசு போல ஜொலிக்கும்..
Toilet Cleaning Tips In Tamil: ஒரு வீட்டில் கழிவறை மிகவும் முக்கியமான அறையாகும் மற்றும் வீட்டிலேயே எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டிய அறையும் இது தான். ஏனெனில் இந்த அறையில் கிருமிகள் அதிகம் பெருக்கமடைய வாய்ப்புக்கள் உள்ளன. நாம் சிறிது அஜாக்கிரதையாக இருந்தாலும், வீட்டில் உள்ளோர் நோய்த்தொற்றுகளுக்கு ஆளாகக்கூடும்.
அதுவும் நாம் மலம் கழிக்கும் டாய்லெட் பௌல் அசுத்தமாக இருந்தால், அதன் மூலை முடுக்குகளில் பாக்டீரியாக்கள் அதிகம் வளர்ச்சியடைவதோடு, கழிவறை மிகுந்த துர்நாற்றத்துடன் இருக்கும். கழிவறையில் உள்ள அழுக்குகளை நீக்கவும், கழிவறையை நல்ல மணத்துடனும் வைத்துக் கொள்ளவும் கெமிக்கல் கலந்த பல்வேறு க்ளீனிங் பொருட்கள் கடைகளில் விற்கப்படுகின்றன.

ஆனால் அந்த கெமிக்கல் கலந்த பொருட்களைக் கொண்டு சுத்தம் செய்யும் போது, சிலருக்கு அந்த கெமிக்கல்களில் இருந்து வெளிவரும் புகை சுவாச பிரச்சனைகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இந்நிலையில் இயற்கை பொருட்களைக் கொண்டு சுத்தம் செய்தால், பண செலவும் குறையும், ஆரோக்கியமும் பாதுகாப்பாக இருக்கும். முக்கியமாக சுத்தம் செய்ய ஈஸியாகவும் இருக்கும்.
தரையை முதலில் சுத்தம் செய்யவும்
உங்கள் வீட்டில் வெஸ்டர்ன் டாய்லெட் என்றால், அதைச் சுற்றியுள்ள தரைப் பகுதியை அடிக்கடி நன்கு சுத்தம் செய்ய வேண்டும். ஏனெனில் அந்த பகுதியில் கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்கள் அதிகம் பெருக்கமடைய வாய்ப்புள்ளது. இந்த பகுதியில் உள்ள கறையை எளிதில் நீக்க, நம் வீட்டு சமையலறையில் உள்ள வினிகர் பெரிதும் உதவி புரியும்.
அதற்கு 2:1 என்ற விகிதத்தில் வினிகரையும், நீரையும் எடுத்து கலந்து கொள்ள வேண்டும். நல்ல நறுமணம் வேண்டுமானால், அதில் சிறிது டிஷ் வாஷ் திரவத்தை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். அதன் பின் அதை மூலை முடுக்குகளில் ஊற்றி சில நிமிடங்கள் ஊற வைத்து, பின் பிரஷ் பயன்படுத்தி தேய்த்து கழுவ வேண்டும்.
டாய்லெட் பௌலில் உள்ள ப்ரௌன் நிற கறைகளை நீக்க...
பெரும்பாலானோர் தங்கள் டாய்லெட் பௌலில் ப்ரௌன் நிற கறைகள் இருப்பதைக் காணலாம். இப்படிப்பட்ட கறைகளை நீக்க குறைந்தது 1 அல்லது 2 லிட்டர் வினிகர் தேவைப்படும். இந்த வினிகரை இரவு தூங்கும் முன் டாய்லெட் பௌலில் ஊற்றி இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் அதை தேய்த்து கழுவினால், ப்ரௌன் நிற கறைகள் நீங்கும்.
ஒருவேளை நீங்கள் அமரும் இருக்கையில் கறைகள் படிந்திருந்தால், உப்பை வினிகர் சேர்த்து பேஸ்ட் செய்து, அதை இருக்கையில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் தேய்த்து கழுவினால், அந்த கறைகள் மாயமாய் மறைந்துவிடும்.
டாய்லெட் பௌலில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்க...
டாய்லெட் பௌலில் உள்ள மஞ்சள் கறைகள், கழிவறையின் அழகை கெடுப்பதோடு, நோய்த்தொற்றுக்களின் அபாயத்தை அதிகரிக்கும். இப்படிப்பட்ட மஞ்சள் கறைகளி எளிதில் நீக்க வேண்டுமானால், பேக்கிங் சோடா மற்றும் வினிகரைப் பயன்படுத்த வேண்டும். அதுவும் முதலில் பேக்கிங் சோடாவை டாய்லெட் பௌலில் தூவி, அதன் பின் வினிகரை தெளித்து, குறைந்தது 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். அதன் பின் பிரஷ் கொண்டு டாய்லெட் பௌலில் தேய்த்து கழுவினால், டாய்லெட் பௌலில் புதிது போன்று மின்னும்.
நீர் கறைகளைப் போக்க...
சிலரது வீட்டு வெஸ்டர்ன் டாய்லெட்டைப் பார்த்தால், நீர் கறைகளைக் காணலாம். இம்மாதிரியான நீர் கறைகளைப் போக்க 1 கப் பேக்கிங் சோடா மற்றும் 1 கப் வினிகரை கலந்து, அதை நீர் கறைகள் உள்ள பகுதியில் ஊற்றி 15 நிமிடம் ஊற வைத்து, பின் பிரஷ் கொண்டு தேய்த்து கழுவ வேண்டும். இப்படி அடிக்கடி செய்தால், அந்த நீர் கறைகள் மறைந்து, டாய்லெட் புதிது போன்று காணப்படும்.



Click it and Unblock the Notifications