Latest Updates
-
பஞ்சாபி சிக்கன் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 30 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு சவால்கள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (30 August - 05 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களின் பண பிரச்சனை முடிவுக்கு வரும்! -
மூட்டு வலி அதிகமா இருக்கா? அப்ப இந்த உளுந்து கஞ்சியை தினமும் காபி, டீ-க்கு பதிலா குடிங்க.. -
செப்டம்பர் மாத சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டிப் பறக்கப்போறாங்க.. -
உங்ககிட்ட இந்த 5 காலை பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. அது உடம்பில் கெட்ட கொழுப்பை அதிகரிக்கும்! -
டக்குன்னு சமையலை முடிக்கணுமா? அப்ப தயிர் இருந்தா, 10 நிமிஷத்துல இப்படி குழம்பு செய்யுங்க.. -
12 ஆண்டுகள் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் குருபகவான்: அக்டோபர் முதல் இந்த 3 ராசிகளின் கஷ்டங்கள் தீர போகுது! -
இன்றைய ராசிபலன் 29 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம் -
பூரிக்கு ஒருவாட்டி இந்த பக்குவத்துல உருளைக்கிழங்கு மசாலா செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்!
உங்க ஆடைகளில் இருக்கும் விடாப்பிடியான கறைகளை ஈஸியா நீக்கணுமா? இந்த டிப்ஸை பாலோ பண்ணுங்க... புதுசா மாறிடும்!
ஒருவரின் தோற்றத்தை மேம்படுத்தி காட்டுவதில் அவர்கள் அணிந்திருக்கும் உடை முக்கியமான பங்கு வகிக்கிறது. இந்த சூழ்நிலையில் மஞ்சள் நிற கறை உள்ள ஆடைகள் மிகவும் மனஉளைச்சலை ஏற்படுத்தக்கூடியவையாகும். மஞ்சள் கறையுடன் கூடிய வெள்ளை துணியின் பிரச்சனை பெரும்பாலும் தொடர்ச்சியான வியர்வை கறைகளால் ஏற்படுகிறது.
மஞ்சள் நிற கறைகள் படிந்த ஆடையை அணிவது மிகவும் கடினம், அந்த கறையை நீக்குவது என்பதும் மிகவும் கடினம். குறிப்பாக வெள்ளை சட்டையில் மஞ்சள் கறை பட்டுவிட்டால் அதற்குப்பின் அந்த சட்டை அணிய முடியாததாக மாறிவிடுகிறது.

இந்த பிரச்சினையை சமாளிக்க மஞ்சள் கறைகளை நீக்க உதவும் சில வழிகளை நோக்கி செல்ல வேண்டும். இந்த பதிவில் மஞ்சள் கறையை போக்கும் சிறந்த வழிகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.
ஷாம்பு அல்லது பாத்திரம் கழுவும் திரவம்
ஷாம்பு அல்லது பாத்திரம் கழுவும் திரவத்தைப் பயன்படுத்தி மஞ்சள் நிற கறைகளை அகற்ற உதவும். வியர்வை மற்றும் அழுக்கு மஞ்சள் கறைகள் மீது ஷாம்பு அல்லது பாத்திரம் கழுவும் திரவத்தைத் தடவி 30 நிமிடம் ஊறவிடவும், அதன்பின் வழக்கம் போல் சுத்தம் செய்தால், உடைகள் புதியது போல மாறும்.
பேக்கிங் சோடா
பேக்கிங் சோடாவை பல விஷயங்களுக்காக பயன்படுத்தலாம், அதில் கறைகளை நீக்குவதும் ஒன்றாகும். இது காலரில் உள்ள மஞ்சள் கறைகளை நீக்குகிறது. கறைகளை நீக்க 4 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவை 1⁄2 கப் தண்ணீரில் கலந்து, நன்கு கிளறி, பின்னர் கறை படிந்த இடத்தில் தடவி மெதுவாக தேய்த்து, சுமார் 20 நிமிடம் கழித்து துவைக்க வேண்டும்.
உப்பு
உப்பு உணவின் சுவைக்கு மட்டுமல்ல ஆடைகளில் இருக்கும் விடாப்பிடியான கறைகளை நீக்கவும் உதவும். 1 கப் தண்ணீருக்கு 1 டேபிள் ஸ்பூன் உப்பைக் கலந்து கரைசலை உருவாக்கவும். பின்னர் அந்த கலவையில் நனைத்த பஞ்சை பயன்படுத்தி ஆடையில் உள்ள மஞ்சள் கறை மறையும் வரை மெதுவாக தேய்க்கவும். பின்னர் அதை துவைக்கவும்.
அம்மோனியா
அம்மோனியா மற்றும் தண்ணீரை சம அளவில் கலந்து மஞ்சள் கறை மீது ஊற்றவும். அதை நன்கு உலர விடவும் அதன்பின் சட்டையைத் துவைக்கவும். ஒருவேளை அம்மோனியா இல்லாவிட்டால், ஹைட்ரஜன் பெராக்சைடை பயன்படுத்தப்படலாம்.
ஆக்ஸி கிளீன்
ஆக்ஸி கிளீனை எடுத்து சிறிது தண்ணீர் சேர்த்து கலக்கவும். பின்னர் மஞ்சள் கறையின் மீது தேய்த்து, பழைய டூத் பிரஷ்ஷைப் பயன்படுத்தி கறையின் மீது நன்கு தேய்க்கவும், சில நிமிடங்கள் உலர வைக்கவும், ஒருவேளை கனமான கறையாக இருந்தால், 2 மணி நேரம் ஊற வைத்து, வழக்கம் போல துவைக்கவும். இது சிறந்த பலன்களை அளிக்கும்.
எலுமிச்சைச் சாறு
துணிகளை துவைக்கும் முன், சம அளவு எலுமிச்சை சாறு மற்றும் தண்ணீரை கலந்து கறைகளின் மீது தேய்க்கவும். பின்னர், மெதுவாக கறை நீக்கப்படும் வரை ஸ்க்ரப் செய்து அதன்பின்னர் துவைக்கவும். சட்டை சுத்தமாகவும் வெள்ளையாகவும் மாறும்வரை இதனை மீண்டும் செய்யலாம்.
வோட்கா
இது கொஞ்சம் காஸ்ட்லியான வழியாகும், சம அளவு ஓட்காவை தண்ணீரில் கலக்கவும். கறை மீது அவற்றைத் தெளிக்க ஒரு ஸ்ப்ரே பாட்டிலை பயன்படுத்தி கறையின் மீது தெளிக்கவும். சிறிது நேரம் அப்படியே விட்டுவிட்டு, வழக்கம் போல் துணிகளை துவைத்தால் துணி புதியது போல மாறும்.



Click it and Unblock the Notifications
