Latest Updates
-
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
உங்கள் வெள்ளை நிற ஆடையில் இருக்கும் விடாப்பிடியான கறையை ஈஸியா நீக்கணுமா? இதில் ஒன்றை யூஸ் பண்ணுங்க...!
வெள்ளை நிற ஆடைகள் என்பது அனைவருக்கும் மிகவும் பொருந்தக்கூடிய அழகான நிறமாகும். ஆனால் பெரும்பாலான மக்கள் இந்த நிறத்தை தவிர்ப்பதற்கு காரணம் இந்த நிற ஆடைகளில் எளிதில் கறைகள் ஒட்டிக்கொள்ளும் மற்றும் அவற்றை போக்குவது என்பது மிகவும் சவாலான காரியமாக இருக்கும்.
உங்கள் வெள்ளை ஆடைகள், படுக்கை விரிப்புகள் மற்றும் குளியல் துண்டுகளை துவைக்க முயற்சிக்கும் போது, நாம் குளோரின் அல்லது ஆக்ஸிஜன் ப்ளீச் பயன்படுத்துகிறோம். ஆனால் துணிகளை வெண்மையாக்க வேறு வழிகள் உள்ளன. இந்த மாற்று பொருட்கள் பெரும்பாலானவை பருத்தி அல்லது கைத்தறி போன்ற இயற்கை இழைகளில் சிறப்பாகச் செயல்படுகின்றன.

நீங்கள் கடையில் வாங்கும் பொருட்களை முற்றிலுமாகத் தவிர்க்க விரும்பினால், எலுமிச்சை மற்றும் வெள்ளை வினிகர் போன்ற பொருட்களைப் பயன்படுத்தி உங்கள் வெள்ளை நிற ஆடைகளை பளிச்சென்று வெள்ளை நிறமாக மாற்றலாம்.
வெள்ளை வினிகர்
தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து அதில் வெள்ளை வினிகரை சேர்க்கவும். கலவையில் வெள்ளை துணியை நனைத்து, இரவு முழுவதும் ஊற வைக்கவும், பின்னர் வழக்கம் போல் துவைக்கவும். வெள்ளை அல்லது மற்ற நிற ஆடைகளை துவைக்கும்போது வெள்ளை வினிகர் உபயோகிப்பது கறைகளை நன்றாக நீக்கும்.
எலுமிச்சை
எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் துணிகளை ப்ளீச் செய்து பருத்தி, கைத்தறி மற்றும் பாலியஸ்டர் இழைகளை வெண்மையாக்க நன்றாக வேலை செய்கிறது. ஒரு பாத்திர வெந்நீரில் அரை கப் எலுமிச்சை சாறைக் கலக்கவும். எலுமிச்சை நீரில் வெள்ளை துணியைச் சேர்த்து, குறைந்தது ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். நன்றாக வெண்மையாக்க, இரவு முழுவதும் நன்றாக ஊறவைக்கவும். பின்னர் வழக்கம் போல் துவைக்கவும்.
பேக்கிங் சோடா
ஒரு பாத்திர கொதிக்கும் நீரில் ஒரு கப் பேக்கிங் சோடாவைசேர்த்து கொதிக்க வைத்து, ஆறிய பின் அதில் வெள்ளை ஆடையை ஊறவைக்கவும். குறைந்தபட்சம் ஒரு மணிநேரம் அல்லது ஒரே இரவு முழுவதும் ஊறவைக்கவும். சோடியம் பைகார்பனேட் பருத்தி ஆடைகளில் கறையை நீக்க உதவும், நன்றாக ஊறியவுடன் வழக்கம்போல துவைக்கவும்.
ஹைட்ரஜன் பெராக்சைடு
ஹைட்ரஜன் பெராக்சைடு ஒரு சக்திவாய்ந்த கறை நீக்கியாகும், இதை உங்கள் வெள்ளைத்துணியை துவைக்க பாதுகாப்பாக பயன்படுத்தப்படலாம். இது கடுமையான உணவுக் கறை மற்றும் இரத்தக் கறைகளை நீக்குகிறது. நீங்கள் துணியை ஊறவைக்கும் நீரில் இதனை கலந்தோ அல்லது கறை இருக்கும் பகுதி மீது இந்த கரைசலை பூசியோ வெள்ளை நிற ஆடையில் இருக்கும் கறைகளை நீக்கலாம்.
பவுடர்
எண்ணெய் கறைகளை அகற்றுவது என்பது கடினமான ஒன்று, ஆனால் பேபி பவுடர் மற்றும் சோள மாவு அதை மிகவும் எளிதாக்குகிறது. கறை எவ்வளவு விரைவில் கண்டறியப்படுகிறதோ அதனை நீக்குவது அவ்வளவு எளிது. கறைகளின் மீது பவுடர் அல்லது சோள மாவை தேய்த்து நன்கு ஊறவைக்கவும். அதன்பின் வழக்கம்போல துவைக்கவும்.
சூரியஒளி
சூரியனின் புற ஊதா கதிர்கள் மற்ற நிற ஆடைகளை மங்கச் செய்யலாம், ஆனால் அவை வெள்ளை நிற ஆடைகளை பிரகாசமாக்குகின்றன. புற ஊதா கதிர்கள் துணியை ப்ளீச் செய்வது மட்டுமல்லாமல், பல வகையான கிருமிகளைக் கொன்று, துணிகளை கிருமி நீக்கம் செய்ய உதவுகின்றன. வெள்ளை பெட் ஷீட்கள் அல்லது டவல்களை நேரடி சூரிய ஒளியில் தொங்கவிட்டு, உலர அனுமதிக்கவும்.



Click it and Unblock the Notifications
