Latest Updates
-
புதன் உதயத்தால் தொழில் வாழ்க்கையில் புதிய உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
November Matha Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. நவம்பர் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
2 கப் சுண்டல் இருந்தா இந்த மாதிரி கொண்டைக்கடலை மசாலா வடை செய்யுங்க - மொறுமொறுனு சூப்பரா இருக்கும் -
Hair Care Tips: முடி ராக்கெட் வேகத்தில் வளரணுமா? அப்ப இந்த விதைகளில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க -
மீந்து போன சாதம் இருக்கா? அப்ப அத வெச்சு பஞ்சு போல சாப்ட்டான சப்பாத்தி செஞ்சு சாப்பிடுங்க.. -
சிம்ம ராசியில் குரு-கேது சேர்க்கை: இந்த 4 ராசிக்காரர்களுக்கு பேன்க் பேலன்ஸ் டபுள் ஆகப்போகுது! -
இந்த 4 ராசி பெண்கள் ரொம்ப ரொம்ப பிடிவாதக்காரர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
அக்குள் கருமையை போக்கணுமா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணி பாருங்க.. -
வாஸ்து படி கேஸ் அடுப்பு அருகில் வைக்கக்கூடாத பொருட்கள் - இது துரதிர்ஷ்டம் மட்டுமல்ல ஆபத்தும் கூட -
ஆயுத பூஜைக்கு வாங்குன பொரி இருக்கா? அப்ப ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு சாப்பிடுங்க..
தோசை மாவை நீண்ட காலம் புளிக்காமல் ப்ரெஷாக வைச்சிருக்கணுமா? அப்ப இந்த ஒரு பொருளை அதில் போட்டு வையுங்க...!
தோசை தென்னிந்திய சமையலில் ஒரு முக்கிய உணவு மட்டுமல்ல, இது ஒரு மிருதுவான, அனைத்து தரப்பு மக்களாலும் விரும்பப்படும் சுவையான உணவாகும். தென்னிந்தியா முழுவதும் அனைத்து வீடுகளிலும் எப்போதும் தோசை மாவு ஸ்டாக் இருக்கும்.
தயாரிக்க எளிதாகவும், சுவையில் எந்த குறையும் இல்லாமல் இருப்பதாலும் அனைவரும் தோசையை பிரதான உணவாக உட்கொள்கின்றனர். தோசை மாவில் உள்ள முக்கியப் பிரச்சினை என்னவென்றால் சிறிது நாட்களில் அது மிகவும் புளித்துவிடும்.

எனவே அதிகளவில் அதனை அரைத்து ஸ்டாக் வைக்க இயலாது. ஆனால் கவலைப்பட வேண்டாம், உங்கள் தோசை மாவை ஃப்ரெஷ்ஷாகவும் சுவையாகவும் நீண்ட காலம் வைத்திருக்க சில வழிகள் உள்ளன. அவை என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
வெற்றிலை தந்திரம்
நொதித்தல் தோசை மாவை நீங்கள் விரும்புவதை விட வேகமாக புளிப்படையச் செய்யலாம். உங்கள் மாவு சீக்கிரம் கசப்பாக மாறாமல் இருக்க, ஒரு வெற்றிலையை அதன் தண்டுடன் போட்டு மூடி வைக்கவும். இந்த எளிய தந்திரம் உங்கள் மாவை அந்த சரியான சுவையை இழக்காமல் ஒரு வாரம் வரை சேமிக்க உதவும்.
காற்று புகாத கொள்கலன்
தோசை மாவை சேமிக்கும் போது காற்று புகாத கொள்கலனில் சேமிப்பது சிறந்த பலன்களைத் தரும். உங்கள் மாவை நீங்கள் அரைத்தவுடன், காற்று குமிழ்களை போக்க நன்கு கலக்கவும், பின்னர் அதை உங்கள் காற்றுப்புகாத கொள்கலனுக்கு மாற்றவும். அதை இறுக்கமாக மூடி, குளிர்சாதன பெட்டியில் வைக்கவும். இது மாவை மிருதுவாகவும், அடுத்தமுறை தோசை சுடுவதற்கு தயாராகவும் வைத்திருக்கும்.
தேங்காய்ப்பால் சேர்க்கவும்
அரைத்து நீண்ட நாட்களான தோசை மாவு ஏன் மிகவும் புளிப்பாகவும், சுவை மோசமாகவும் மாறுகிறது என்று சிந்தித்து உள்ளீர்களா? சேமித்து வைப்பதற்கு முன் சிறிதளவு தேங்காய்ப்பாலை மாவு மீது தெளிக்கவும். இது மாவு விரைவில் புளிப்பதைத் தடுக்கிறது மற்றும் நீங்கள் அதை அடுத்த முறை பயன்படுத்தும் போது உங்கள் தோசைகளுக்கு கூடுதல் சுவையை சேர்க்கிறது.
ஜிப் லாக் பேக்-ல் சேமிக்கவும்
எளிதான சேமிப்பக தீர்வுக்கு, ஜிப் லாக் பையை பயன்படுத்தலாம். தோசை மாவை நிரப்பி, முடிந்தவரை காற்றை அதிலிருந்து வெளியேற்றிவிட்டு, இறுக்கமாக மூடவும். குளிர்சாதனப்பெட்டியில் பையை சேமித்து வைக்கவும், இதன்மூலம் நீங்கள் எப்போதும் தயாராக இருக்கக்கூடிய மாவைப் பெறுவீர்கள், அது புதியது மட்டுமல்ல, குறைந்த இடமே அதற்குத் தேவைப்படும்.
கறிவேப்பிலை
கறிவேப்பிலை தென்னிந்திய சமையலில் மிகவும் பிரதானமானது, ஆனால் அவை தோசை மாவை சேமிப்பதற்கும் சிறந்ததாகும். உங்கள் மாவில் ஒரு துளிர் கறிவேப்பிலையை மட்டும் போடவும். இந்த சிறிய தந்திரம் தோசை மாவின் ஆயுளை நீட்டிக்க உதவுகிறது மற்றும் மாவை சுவையாக வைத்திருக்க உதவுகிறது.
அறை வெப்பநிலையில் வைக்கக்கூடாது
அறை வெப்பநிலையில் தோசை மாவை விடக்கூடாது, ஏனெனில் இது நொதித்தல் வேகத்தை அதிகரிக்கும். பயன்பாட்டிற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு எப்போதும் அதை குளிர்சாதன பெட்டியில் இருந்து வெளியே எடுத்து வைக்கவும், அது சாதாரண வெப்பநிலைக்கு வரட்டும். இந்த எளிய வழிகள் மூலம், உங்கள் மாவு ஒரு வாரம் முழுவதும் சுவையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications

