Latest Updates
-
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை
மளிகை சாமான் வாங்கும்போது இப்படி வாங்குனா நிறைய ஆரோக்கியத்தையும், பணத்தையும் சேமிக்கலாம்...!
உங்கள் ஷாப்பிங் அனுபவத்தை உபயோகமானதாக மாற்ற, உங்களுக்குத் தேவையான பொருட்களின் பட்டியல் மற்றும் பட்ஜெட்டைத் தயாரிப்பது முக்கியம்.
வீட்டிற்கு மளிகை சாமான் வாங்குவது என்பது பொதுவாக மிகவும் சவாலான மற்றும் வேடிக்கையான ஒரு வேலையாகும். இது தினசரி அடிப்படையில் வீட்டிற்குத் தேவைப்படும் உணவு மற்றும் பிற வீட்டுப் பொருட்களை சரியாக எதுவும் மிஸ் பண்ணாமல் வாங்குவதைப் பற்றியது. இது எவ்வளவு வேடிக்கையானதாக இருக்கிறதோ அதே அளவிற்கு ஒரு கடினமான பணியாகவும் இருக்கலாம், குறிப்பாக உங்களிடம் தெளிவான திட்டம் அல்லது பட்ஜெட் இல்லை என்றால் இது மேலும் கடினமானதாகும்.

உங்கள் ஷாப்பிங் அனுபவத்தை உபயோகமானதாக மாற்ற, உங்களுக்குத் தேவையான பொருட்களின் பட்டியல் மற்றும் பட்ஜெட்டைத் தயாரிப்பது முக்கியம். மளிகை சாமான் ஷாப்பிங்கை மிகவும் பயனுள்ளதாக மற்றும் எளிதாக மாற்ற சில வழிகள் உள்ளன. அவை என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
வாராந்திர திட்டங்களை தயார் செய்யுங்கள்
உங்களுக்கு வாரம் அல்லது மாதம் முழுவதிற்கும் தேவையான மளிகைப் பொருட்களை ஒரே தடவையில் வாங்குவது சிறந்தது. உங்கள் சமையலறைக்கு ஒரு பேப்பருடன் சென்று என்னென்ன பொருட்களை வாங்க வேண்டுமென்ற பட்டியலை தயார் செய்யுங்கள். இந்த செயல் உங்களுக்கு தேவையான பொருட்களின் பட்டியலை தயாரிக்க உதவுவதோடு அதற்கான பட்ஜெட்டை தயாரிக்கவும் உதவும்.
லேபிள்களை படிக்க தவறிவிடாதீர்கள்
நீங்கள் எந்த பொருளை வாங்கினாலும் அதிலிருக்கும் லேபிளை படிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். லேபிள்கள் நீங்கள் வாங்கும் பொருளைப் பற்றிய மிகவும் பயனுள்ள சில முக்கிய தகவல்களைக் கொண்டிருக்கும். உற்பத்தி தேதி மற்றும் காலாவதி தேதி போன்ற மிக முக்கியமான தகவல்களை சோதிக்க மறந்து விடக்கூடாது. அதன்பின் அதிலுள்ள பொருட்களின் கலவையைப் பார்க்க வேண்டும். சில பொருட்கள் உங்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தினால், அந்த குறிப்பிட்ட பொருட்களை அடையாளம் காண லேபிள்கள் உங்களுக்கு உதவும்.
பருவகால பொருட்களை வாங்கவும்
உறையவைக்கப்பட்ட மற்றும் பருவத்திற்கு தொடர்பில்லாத பழங்கள் மற்றும் காய்கறிகளை வாங்குவதற்குப் பதிலாக அந்தந்த பருவகால பழங்கள் மற்றும் காய்கறிகளை வாங்குங்கள். கோடை அல்லது குளிர்காலம் எதுவாக இருந்தாலும், ஒவ்வொரு பருவத்திற்கும் குறிப்பிட்ட பழங்கள் மற்றும் காய்கறிகள் உள்ளன. அந்தந்த பருவகால உணவுகளை சாப்பிடுவது உடலுக்குத் தேவையான அனைத்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களையும் கொடுக்கும். பருவகால காய் எனும்போது அது உங்கள் பட்ஜெட்டிற்குள்ளும் இருக்கும்.
கெட்டுப்போகும் பொருட்களை வாங்கி சேமிக்காதீர்கள்
கெட்டுப்போகும் பொருட்களை அதிகம் வாங்குவது உங்கள் ஆரோக்கியத்திற்கும், பணத்துக்கும் கேடு. விரைவில் கெட்டுப்போகும் பொருட்களை சிறிய அளவில் வாங்குவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள், அதனால் அவற்றை விரைவில் பயன்படுத்தலாம்.
மொத்தமாக வாங்க வேண்டிய பொருட்கள்
சில பொருட்களை அதிகமாக வாங்கக்கூடாது என்பது போல சில பொருட்களை அதிகமாக வாங்குவது உங்களுக்கு சேமிக்க உதவும். ஏனெனில் சில பொருட்களை அதிகம் வாங்கும்போது உங்களுக்கு தள்ளுபடி கிடைக்க வாய்ப்புள்ளது. சோப்பு, பாடி லோஷன், பருப்பு, கோதுமை மற்றும் துணி துவைக்கும் பொருட்கள் போன்ற நீண்ட நாட்கள் கெட்டுப்போகாத பொருட்களை அதிகளவில் வாங்குவது சேமிப்பை ஊக்குவிக்கும்.



Click it and Unblock the Notifications

