Latest Updates
-
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்..
வீட்டில் இருக்கும் பொருட்களை ஈஸியாக சுத்தம் செய்ய சில ட்ரிக்ஸ்!
Summer Cleaning Tips In Tamil: கோடைகாலத்தில் வீட்டில் இருக்கும் பொருட்களை சுத்தம் செய்வது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. வீட்டில் இருக்கும் ஏர்கண்டிஷனர் முதல் ஃபேன் வரை நிறைய விஷயங்களை சுத்தம் செய்ய வேண்டியிருக்கும்.
வீட்டில் இருக்கும் எலக்ட்ரானிக் பொருட்களில் உள்ள தூசிகளை அவ்வப்போது நீக்குவது இந்த கோடை காலத்தில் வெப்பத்தை தணிக்க உதவியாக இருக்கும். ஃபேன்களில் அதிக தூசி படிந்து இருந்தால் சரிவர காற்று வராது.

எனவே கோடை காலத்தில் ஃபேன்கள், ஏர் கண்டிஷனர்கள், ஜன்னல்கள் இவற்றை தூசி இல்லாமல் துடைத்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த கோடை காலத்தில் உங்கள் வீட்டில் உள்ள பொருட்களை எப்படி சுத்தம் செய்ய வேண்டும் என்பது பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம்.
ஃபேன்களை சுத்தம் செய்யும் முறை
உங்கள் வீட்டு ஃபேன்களில் அதிகப்படியான தூசி படிந்து இருந்தால் சரிவர காற்று வராது. எனவே இந்த கோடைகாலத்தில் ஃபேன்களை நன்றாக சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் வீட்டில் உள்ள சீலிங் ஃபேன்களை சுத்தம் செய்ய முதலில் மைக்ரோஃபைபர் துணி மூலம் சுத்தம் செய்ய வேண்டும்.
இந்த மைக்ரோஃபைபர் துணி எளிதாக ஃபேன்களை சுத்தம் செய்ய உதவுகிறது. இந்த மைக்ரோஃபைபர் துணியில் சில சொட்டுகள் க்ளீனர் சேர்த்துக் கொள்ளுங்கள். இப்பொழுது இந்த துணியைக் கொண்டு உங்கள் வீட்டில் உள்ள அனைத்து ஃபேன்களையும் எளிதாக சுத்தம் செய்யலாம். அதிக அழுத்தம் கொடுக்காமல் அதன் பிளேடுகளையும், இறக்கைகளையும் சுத்தம் செய்யலாம்.
உங்கள் பர்னிச்சர்களை சுத்தம் செய்யுங்கள்
கோடைகாலத்தில் உங்கள் வீட்டிற்குள்ளும் வெளியே இருக்கும் மரச்சாமான்கள் வெயிலால் கடுமையாக பாதிப்படைய வாய்ப்பு உள்ளது. எனவே கோடைகாலத்தில் வாரத்திற்கு ஒரு முறையாவது உங்கள் வீட்டில் உள்ள பர்னிச்சர்களை சுத்தம் செய்யுங்கள்.
உங்கள் மர பர்னிச்சர்களில் விரிசல் விடாமல் இருக்க ஸ்காட்ச் கார்டை பயன்படுத்தி வரலாம். இந்த ஸ்காட்ச் கார்டை கொண்டு உங்கள் பர்னிச்சர்களை கவர் செய்து விடுங்கள் .மேலும் உங்கள் வீட்டில் உள்ள சோபாக்கு என்று தயாரிக்கப்பட்ட ஸ்லிப் கவரை பயன்படுத்தி வரலாம். இது அழுக்கு மற்றும் வெளிப்புற தூசிகளில் இருந்து உங்கள் சோபாக்களை காப்பாற்றும். ஸ்லிப் கவர்கள் உங்கள் சோபாக்களை தூசி, அழுக்கில் இருந்து காக்கிறது.
ஏர் கண்டிஷனரை சுத்தம் செய்யும் முறை
கோடை காலத்தில் ஏர் கண்டிஷனரில் உள்ள வடிகட்டியை (filter) சுத்தம் செய்வது அவசியம். ஏனெனில் வடிகட்டியில் உள்ள துளைகள் அழுக்கால் அடைபட்டு இருந்தால் உங்களுக்கு குளிர்ந்த காற்று வராது. அது உங்கள் ஏசியின் செயல்திறனைக் குறைக்க வாய்ப்பு உள்ளது.
எனவே அவ்வப்போது ஏர் கண்டிஷனரில் உள்ள வடிகட்டியை முறையாக சுத்தம் செய்யுங்கள். மேலும் ஏர் கண்டிஷனரை சுத்தம் செய்யாமல் இருப்பது அதன் ஆயுளைக் குறைக்க வாய்ப்பு உள்ளது. எனவே ஏர் கண்டிஷனரில் உள்ள ஃபில்ட்டரை சயசசசயசசயசசயச்ச
முதலில் எடுத்து வெதுவெதுப்பான நீர் மற்றும் டிஷ் சோப்பில் ஊற வைக்க வேண்டும். பிறகு அந்த வடிகட்டியை சுத்தம் செய்து உலர விட்டு ஏர் கண்டிஷனரில் மாட்டி விடுங்கள். அழுக்கு மற்றும் தூசிகள் நீங்கின பிறகு ஏர் கண்டிஷனர் உங்களுக்கு நல்ல குளிரைத் தரும்.
ஜன்னல்களை அழகாக சுத்தம் செய்யுங்கள்
கோடை காலத்தில் வீட்டிற்குள் காற்றோட்டமான வசதி இருப்பது மிகவும் அவசியம். எனவே ஜன்னல்களை அழகாக சுத்தம் செய்யுங்கள். ஜன்னல்களில் தூசிகள் அழுக்குகள் இருந்தால் வீட்டினுள் காற்று சரி வர வராது. மேலும் உங்களுக்கு ஜன்னல்களை திறந்து வைப்பது சிரமமாகவும் இருக்கும்.
எனவே ஜன்னல்களை நன்றாக துடைத்து சுத்தம் செய்து வையுங்கள். வெதுவெதுப்பான நீரில் டிஷ் சோப்பு கலந்து அதில் துணியை நனைத்து ஜன்னல்களை சுத்தம் செய்யலாம். ஜன்னல்களில் உள்ள கண்ணாடியை துடைக்க மைக்ரோ ஃபைபர் துணியை நீங்கள் பயன்படுத்தி வரலாம்.
திரைச்சீலைகளை நன்றாக சுத்தம் செய்யுங்கள்
திரைச்சீலைகளில் அழுக்குகள் இருந்தாலும் வீட்டினுள் தூசிகள் எளிதாக வந்து விடும். எனவே அவ்வப்போது திரைச்சீலைகளை அகற்றி வினிகர் மற்றும் தண்ணீரில் ஊற வைத்து துவையுங்கள். பிறகு வெயிலில் நன்றாக உலர வைத்து பிறகு ஜன்னல்களில் மாட்டுங்கள்.
கிச்சன் சிங்க் மற்றும் குப்பைகளை சரியாக அகற்றுங்கள்
கோடைகாலத்தில் அதிகப்படியான வெப்பம் மற்றும் ஈரப்பதம் இருப்பது உங்கள் வீட்டில் உள்ள வடிகால்களில் அடைப்பை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. மேலும் குப்பையில் உள்ள பொருட்கள் அழுகி துர்நாற்றம் வீச வாய்ப்பு உள்ளது. எனவே முடிந்த வரை வீட்டில் உள்ள குப்பைகளை அவ்வப்போது அகற்றி விடுங்கள். ஏனெனில் குப்பைகள் இருப்பது ஈக்கள் மற்றும் கொசுக்களை அதிகளவில் ஈர்க்க வாய்ப்பு உள்ளது.
உங்கள் வீட்டில் உள்ள வடிகால்களை சுத்தம் செய்ய 30 விநாடிகளுக்கு சூடான நீரை வடிகால்களில் ஊற்றி விடுங்கள். பிறகு ஒரு கப் பேக்கிங் சோடாவை அதில் சேருங்கள். பிறகு இரண்டு கப் வினிகரை சேருங்கள். இதை ஒரு மணி நேரம் வாய்க்காலில் அப்படியே விட வேண்டும். பிறகு உங்கள் வடிகால்களில் சூடான நீரை ஊற்ற வேண்டும்.
பிரிட்ஜை சுத்தம் செய்யும் முறை
உங்கள் பிரிட்ஜில் அழுக்குகள் மற்றும் ஈரப்பதம் சேர்வதால் காலப்போக்கில் அழுக்குகள் பிடிக்க வாய்ப்பு உள்ளது. இது உங்கள் பிரிட்ஜின் செயல்திறனை பாதிக்க வாய்ப்புள்ளது. எனவே அவ்வப்போது உங்கள் பிரிட்ஜ்ஜை சுத்தம் செய்வது அவசியம். வினிகர் கொண்டு நன்றாக பிரிட்ஜ்ஜை சுத்தம் செய்யுங்கள். தேவையற்ற பொருட்களை தூக்கி வெளியே வீசுங்கள். வினிகர் பிரிட்ஜ்ஜில் உள்ள துர்நாற்றத்தை நீக்க உதவுகிறது.



Click it and Unblock the Notifications