Latest Updates
-
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க..
பிஸ்கெட் நமத்துபோகமால் நீண்ட நாள் மொறுமொறுன்னு இருக்க... நீங்க இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணா போதுமாம்!
Biscuits And Cookies In Tamil: தினமும் காலை, மாலை இருவேளைகளிலும் டீ, காபி சாப்பிடுவது பெரும்பலான மக்களின் வழக்கமாக உள்ளது. டீ, காபியோடு பிஸ்கெட் மற்றும் குக்கீகளையும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுகிறார்கள். மொறுமொறுவென இருக்கும் பிஸ்கெட்டை டீயில் நனைத்து சாப்பிடுவது என்பது மிகவும் அலாதியானது.
எல்லா பிஸ்கெட்டுகளையும் குக்கீகளையும் நம்மால் ஒரே நேரத்தில் சாப்பிட முடியாது. தினமும் பிஸ்கெட் சாப்பிடுவதால், அதை சமையலறையில் அல்லது அலமாரியில் நாம் சேமித்து வைத்திருப்போம். எந்த பருவகாலமாக இருந்தாலும், பிஸ்கெட் நமத்துபோக ஆரம்பிக்கும். குறிப்பாக மழைக்காலத்தில் விரைவாக நமத்துபோகும்.

மொறுமொறுவென இருக்கும் பிஸ்கெட்டுகளை சாப்பிடதான் நாம் எல்லாரும் விரும்போம். நமத்துபோன பிஸ்கெட்டுகளை யாரும் விரும்பி சாப்பிட மாட்டார்கள். பிஸ்கட் மற்றும் குக்கீஸ் பாக்கெட்டுகளை பிரித்து பரிமாறிய பிறகும் அவற்றின் புத்துணர்ச்சியையும் மிருதுவான தன்மையையும் அப்படியே இருக்க வேண்டும் என்று நீங்களும் விரும்புகிறீர்களா?
பிஸ்கட் மற்றும் குக்கீகள் நமத்துபோகாமல் இருக்க, அவற்றின் மொறுமொறுப்பான தன்மையைத் தக்கவைக்க உதவும் சில ஸ்மார்ட் ஹேக்குகள் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
டிஷு பேப்பரால் மூடி வைக்க வேண்டும்
பிஸ்கெட் மற்றும் குக்கீகளை சேமிப்பதற்கான மற்றொரு வழி, டிஷு பேப்பரால் அவற்றை மூடி வைப்பது. பிஸ்கெட் மற்றும் குக்கீகளை டிஷு பேப்பரால் சுத்தி காற்று புகாத கொள்கலனில் ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கி வைக்க வேண்டும்.
இதேபோன்று கொள்கலன் முழுக்க பிஸ்கெட்டுகளை டிஷு பேப்பரால் மூடி அடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் பிஸ்கெட் மற்றும் குக்கீகளின் புத்துணர்ச்சியையும் மிருதுவான தன்மையையும் தக்க வைத்துக் கொள்ளலாம்.
குளிர்சாதன பெட்டியில் சேமிக்க வேண்டும்
குக்கீகள் மற்றும் பிஸ்கெட்களை சேமிப்பதற்கான மற்றொரு அற்புதமான வழி, அவற்றை ஜிப் லாக் பேக்கில் வைத்து குளிர்சாதனப் பெட்டியில் வைப்பது. இது பிஸ்கெட் மற்றும் குக்கீகளின் அமைப்பைத் தக்கவைக்க உதவுகிறது மற்றும் நீண்ட நேரம் புதியதாக இருக்க உதவுகிறது.
சரியான கொள்கலன்
குக்கீகள் மற்றும் பிஸ்கெட்களின் புத்துணர்ச்சி மற்றும் அமைப்பைத் தக்கவைக்க எளிதான வழி, அவற்றை காற்று புகாத கொள்கலனில் சேமித்து, குளிர்ந்த மற்றும் உலர்ந்த இடத்தில் சேமிப்பது வைப்பதுதான். சரியான கொள்கலனில் நீங்கள் சேமிக்கும்போது, அவை நமத்துபோகாமலும் புதிதாகவும் மொறுமொறுவென்றும் இருக்கும்.
மீண்டும் பேக்கிங் செய்வது
நமத்துபோன குக்கீகள் அல்லது பிஸ்கெட்டை அடுப்பில் அல்லது ஏர்பிரையரில் 5-10 நிமிடங்கள் பேக்கிங் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும்போது, பிஸ்கெட்டின் மிருதுவான தன்மையை மீண்டும் கொண்டு வந்து, மொறுமொறுப்பான அமைப்பைத் தக்க வைத்துக் கொள்ளலாம். ஏனெனில் இந்த செயல்முறை ஈரப்பதத்தைப் பிரித்தெடுக்க உதவுகிறது.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள டிப்ஸ்களை பின்பற்றி பிஸ்கெட் மற்றும் குக்கீஸை நமத்துபோகாமல் அப்படியே வைத்திருங்கள்.



Click it and Unblock the Notifications

