வீட்டில் செல்வம் பெருகணுமா? அப்ப பைரைட் பிரமீடை வாங்கி.. வீட்டின் இந்த இடத்தில் வையுங்க போதும்...

Pyrite Crystal Pyramid: தற்போதைய உலகில் நாம் நல்ல செழிப்பான வாழ்க்கையை வாழ்வதற்காக பணம் சம்பாதிக்க அல்லும் பகலும் கஷ்டப்பட்டு உழைத்துக் கொண்டிருக்கிறோம். இப்படி கஷ்டப்படும் அனைவருமே எதிர்பார்த்த பலனைப் பெற முடிவதில்லை. இந்நிலையில் அதிர்ஷ்டத்திற்காக ஏதாவது ஒன்றை நம்முடன் வைத்துக் கொள்ள நினைப்போம். அவை தான் நவரத்தினங்களும், கற்களும். இந்த நவரத்தினங்களும், கற்களும் இயற்கையாகவே பூமிக்கு அடியில் விளைந்து பெறப்படுகின்றன.

பொதுவாக பூமியில் விளையும் கற்கள், பொருட்களுக்கு மதிப்பும், சக்தியும் அதிகம். அப்படியொரு சக்தியையும், அதிர்ஷ்டத்தை ஈர்க்கும் ஆற்றலையும் கொண்ட ஒரு சக்தி வாய்ந்த பொருள் தான் பைரைட் கற்கள். இந்த பைரைட் கற்களானது மிகவும் பழங்கால கற்கள். இது தங்கத்தைப் போன்றே பளபளவென்று ஜொலிக்கும் வகையில் இருக்கும்.

வீட்டில் செல்வம் பெருக சரியான ரத்தினக்கல்லைத் தேடுகிறீர்களா? இங்கே கிளிக் செய்யுங்கள்..

Pyrite Crystal Pyramid Know Its Benefits And Where To Keep It At Home And Office

பைரைட் என்பது இயற்கையாகவே விளையும் இரும்பு டைசல்பைட் கனிமமாகும். இது பார்வைக்கு மட்டுமல்ல, நம்பிக்கையை அதிகரிப்பதில் இருந்து செழிப்பை ஈர்ப்பது வரை பல்வேறு நன்மைகளையும் தருவதாக கருதப்படுகிறது. இப்போது பைரைட் கல் ஒருவரது வாழ்க்கையில் எப்படிப்பட்ட அதிசயத்தை ஏற்படுத்தும் என்பதைக் காணலாம்.

பைரைட் கல் என்றால் என்ன?

தங்கம் போன்ற தோற்றத்திற்கு பெயர் பெற்ற பைரைட் கல், இயற்கையாகவே விளையும் இரும்பு டைசல்பைடு கனிமமாகும். உண்மையான தங்கத்துடன் குறிப்பிடத்தக்க ஒற்றுமை காரணமாக இது பெரும்பாலும் "Fool's Gold" என்று குறிப்பிடப்படுகிறது. பைரைட் கல் அதன் உலோக பளபளப்பு மற்றும் மின்னும் தங்க நிறத்தால் பல நூற்றாண்டுகளாக மக்களை கவர்ந்து வருகிறது. "பைரைட்" என்ற பெயர் கிரேக்க வார்த்தையான "பைர்", அதாவது "நெருப்பு" என்பதிலிருந்து பெறப்பட்டது. ஏனென்றால் இது வரலாற்று ரீதியாக உலோகத்திற்கு எதிராகத் தாக்கும் போது தீப்பொறிகளை உருவாக்கப் பயன்படுத்தப்பட்டது.

பைரைட் கல்லின் சிறப்பு

பழங்காலத்தில் மக்கள் இந்த பைரைட் கற்களை ஒரு அதிர்ஷ்ட கல்லாக உணர்ந்துள்ளார்கள். இதனால் வணிகத்தின் போது நல்ல அதிர்ஷ்டத்திற்காக இந்த கல்லையும் உடன் எடுத்து சென்றுள்ளார்கள். இதனால் வணிகம் செழிப்பாக இருப்பதாகவும், செல்வமும் பெருகுவதாகவும் உணர்ந்துள்ளார்கள்.

இது தவிர இந்த பைரைட் கற்கள் ஹீலிங் பண்புகளைக் கொண்டுள்ளது. இது உடலின் குறிப்பிட்ட சக்கரங்களை செயல்படுத்தி, மனம் மற்றும் உடல் இரண்டிற்கும் சமநிலையையும் ஆற்றலையும் கொண்டு வரும். அதனால் ஹீலிங் செய்யும் போது, இந்த பைரைட் கற்களை அருகில் வைத்துள்ளார்கள். ஏனெனில் பைரைட் கற்கள் நமது உடலின் இதய சக்கரத்துடன் தொடர்புடையதாக கூறப்படுகிறது.

எனவே இந்த ஹீலிங் செய்பவர் இந்த கல்லை அருகில் வைத்திருக்கும் போது, அந்த பைரைட் கற்கள் தைமஸ் சுரப்பியைத் தூண்டி, உடலின் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி, விரைவில் குணமாக உதவுகிறது. மொத்தத்தில் பைரைட் கல்லை அருகில் வைத்திருந்தால், ஆரோக்கிய பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். இப்படிப்பட்ட பைரைட் கல்லை நாம் பலவாறு நம்முடன் வைத்து பயன்படுத்தலாம். அதில் பைரைட்டை வெறும் கல்லாகவோ, பிரேஸ்லெட்டுகளாகவோ அல்லது பிரமீடு வடிவத்திலோ கூட பயன்படுத்தலாம்.

பைரைட் பிரமீடு வைத்திருப்பதால் பெறும் நன்மைகள்

பைரைட் கற்கள் பணத்தை ஈர்க்கும் ஒரு சக்தி வாய்ந்த காந்தமாக கருதப்படுகிறது. இப்படி செழிப்பு மற்றும் செல்வத்துடன் பைரைட் கற்கள் தொடர்புடையதால், அவற்றை பிரமீடு வடிவத்தில் வீட்டில் வைத்திருப்பது இன்னும் நல்லது. ஏனெனில் பிரமீடு வடிவம் இதன் ஆற்றலை மையப்படுத்தி இயக்குவதன் மூலம், செல்வத்தை பெருக்குகிறது. அதுவும் இந்த பைரைட் பிரமீடை வீட்டில் மட்டுமின்றி, அலுவலகத்திலும் வைத்துக் கொள்ளலாம். இப்போது பைரைட் பிரமீடு வழங்கும் நன்மைகளைக் காண்போம்.

* பைரைட் கல்லை பிரமீடு வடிவத்தில் வைத்திருக்கும் போது, அது இந்த கல்லின் ஆற்றலைப் பெருக்கி, பணத்தை ஈர்ப்பதற்கும், நிதி வாய்ப்புக்களை மேம்படுத்துவதற்கும் உதவுகிறது.

* பைரைட் பிரமீடை வீட்டிலோ, அலுவலகத்திலோ வைத்திருந்தால், அது பண காந்தமாக செயல்படும். அதாவது இது செல்வத்தை ஈர்த்து, நிதி நிலையை மேம்படுத்த உதவுகிறது. பற்றாக்குறையை விட மிகுதியில் கவனம் செலுத்த ஊக்குவிக்கிறது.

* பைரைட் பிரமீடின் ஆற்றல் மனதை எப்போதும் தெளிவாகவும், நேர்மறையாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது. இதனால் இந்த பிரமீடை அலுவலகத்தில் அல்லது வீட்டில் வைக்கும் போது, வணிகம், முதலீடுகள் அல்லது தனிப்பட்ட விஷயங்களில் எந்த முடிவையும் தெளிவாக எடுக்க உதவுகிறது.

* பைரைட் பிரமீடு மனதையும், உடலையும் உற்சாகப்படுத்தி, மன உறுதியை அதிகரித்து, இலக்குகளை நோக்கி விடாமுயற்சியுடன் தொடர்ந்து செயல்பட தூண்டி, வாழ்வில் முன்னேற்றத்தைக் காண உதவுகிறது.

எனவே நல்ல செழிப்பான, வளமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ விரும்பினால், பைரைட் பிரமீடை உங்கள் வீட்டில் வாங்கி வைத்து பயன்பெறுங்கள்.

வாஸ்துப்படி பைரைட் பிரமீடை எந்த இடத்தில் வைக்க வேண்டும்?

வாஸ்துப்படி வீட்டில் எந்த ஒரு பொருளை வைப்பதாக இருந்தாலும், அதை சரியான இடத்தில், திசையில் வைத்தால் தான், அந்த வீட்டில் நேர்மறை ஆற்றல் ஓட்டம் சிறப்பாக இருக்கும். அந்த வகையில் பைரைட் பிரமீடை வீடு அல்லது அலுவலகத்தில் வைப்பதாக இருந்தால், சரியான இடத்தில், திசையில் வைக்க வேண்டும். இப்போது பைரைடு பிரமீடை எந்த இடத்தில் எல்லாம் வைக்கலாம் என்பதைக் காண்போம்.

* வாஸ்துப் படி, வீடு அல்லது அலுவலகத்தின் தென்கிழக்கு மூலை செல்வம் மற்றும் மிகுதியுடன் தொடர்புடையது. எனவே பைரைட் பிரமீடை தென்கிழக்கு திசையில் வைத்தால், நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும்.

* அலுவலகத்தில் பைரைட் பிரமீடை வைப்பதாக இருந்தால், அதற்கு சிறந்த இடம் அலுவலக மேஜை தான். அதுவும் கம்ப்யூட்டர் அல்லது பைல்கள் வைக்கும் இடங்களில் இந்த பிரமீடை வைத்தால், உற்பத்தி திறன் அதிகரிக்கும் மற்றும் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்களும் கிடைக்கும்.

* வியாபாரம் செய்பவர்கள், பைரைட் பிரமீடை பணம் வைக்கும் இடத்தில் வைத்தால், அது நிதி வளர்ச்சியை ஊக்குவிக்கும் மற்றும் வருவாயைப் பாதுகாக்கும்.

* வீட்டில் பைரைட் பிரமீடு வைப்பதாக இருந்தால், அதை வீட்டின் ஹால் அல்லது நுழைவாயிலுக்கு அருகில் வைப்பது நல்லது. இதன் மூலம் வீட்டில் நேர்மறை ஆற்றலை வரவேற்கப்படும் மற்றும் வீட்டில் உள்ளோருக்கு வளமான சூழலை உருவாக்கும்.

* இது தவிர பைரைட் பிரமீடை வீட்டின் பூஜை அறையிலும், வடகிழக்கு மூலையான குபேர மூலையிலும் வைக்கலாம். இதனால் வீடு செல்வ செழிப்போடு இருக்கும்.

நீங்கள் உங்கள் வீட்டின் செல்வத்தை அதிகரிக்க இந்த பைரைட் பிரமீடு வாங்கி வைக்க விரும்பினால், ஆஸ்ட்டோ டாக் தளத்தில் வெறும் ரூ.999-க்கு வாங்கி பயன் பெறுங்கள்.

Desktop Bottom Promotion