Latest Updates
-
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பன்னீர் பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமான டேஸ்ட்ல இருக்கும் -
Krishna Jayanthi 2026: இன்று உங்க ராசிப்படி கிருஷ்ணருக்கு இத வாங்கி கொடுங்க.. உங்க கனவுகள் சீக்கிரம் நனவாகும்!
Pongal Kolam Rangoli Designs: பொங்கலுக்கு உங்க வீட்டு வாசலில் இந்த லேட்டஸ்ட் கோலத்தை போடுங்க..
Pongal Kolam Rangoli Designs 2026: உலகம் முழுவதும் தமிழர்களால் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகை தான் பொங்கல் பண்டிகை. இந்த பண்டிகை 4 நாட்கள் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. முக்கியமாக இந்த பண்டிகை விவசாயத்திற்கு உதவிய சூரியனுக்கும், கால்நடைகளுக்கும், இந்திரனுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது.
இந்த பொங்கல் பண்டிகை வந்தாலே ஒரே குஷி தான். ஏனெனில் இந்த பொங்கல் பண்டிகையானது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் நல்ல நேரத்தை செலவிட வைக்கிறது.

பாரம்பரியமாக பொங்கல் பண்டிகை வந்தாலே, பெண்கள் வீட்டை சுத்தம் செய்து, வீட்டு வாசலில் மாவிலை தோரணம் மற்றும் காப்பு கட்டி, வீட்டு வாசலில் வண்ணமயமான பொங்கல் கோலங்களை போடுவார்கள்.
இப்படி வீட்டிற்கு முன் கோலங்களைப் போடுவது என்பது நாம் பூமிக்கு கொடுக்கும் ஒரு மரியாதை. மேலும் வீட்டிற்கு முன் போடப்படும் கோலமானது வீட்டிற்கு ஒரு லட்சுமி கடாட்சத்தைக் கொடுக்கும். முக்கியமாக கோல மாவுடன் அரிசி மாவைப் பயன்படுத்தி கோலம் போடும் போது, அது வாயில்லா சிறு உயிர்களுக்கு உணவாகி, புண்ணியத்தை அளிக்கும்.
கிராமப்புறங்களில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோலப்போட்டிகள் எல்லாம் நடக்கும். இந்த கோலப்போட்டியில் வெற்றி பெற பெண்கள் கோல புத்தகங்களை வாங்கி, அழகான கோலங்களை தேடி கண்டுபிடித்து போடுவார்கள்.
நீங்கள் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையில் பார்ப்போர் அனைவரும் அசந்து போகும் அளவிலும், அதே சமயம் ஈஸியாகவும் இருக்கும் பொங்கல் கோலத்தை போட நினைக்கிறீர்களா? கீழே உங்களுக்காக சில எளிமையான மற்றும் அழகான பொங்கல் ரங்கோலி கோங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் உங்களுக்கு பிடித்ததை தேர்ந்தெடுத்து போட்டு அசத்துங்கள்.
1. அழகான பொங்கல் பானை ரங்கோலி
நீங்கள் உங்கள் வீட்டு வாசலின் முன் ஒரு அழகான பொங்கல் பானை ரங்கோலி கோலத்தை போட நினைத்தால், இந்த பூக்களுக்கு நடுவே உள்ள பொங்கல் பானை ரங்கோலியைப் போடலாம். நீங்கள் படம் வரைவதில் வல்லவர் என்றால், இந்த ரங்கோலி உங்களுக்கானது.
2. மாட்டுப் பொங்கல் ரங்கோலி டிசைன்
நீங்கள் மாட்டுப் பொங்கலுக்கான ஒரு ரங்கோலி டிசைனை தேடிக் கொண்டிருந்தால், இந்த சிம்பிளான ரங்கோலி கோலத்தை போடலாம். இதில் மாடு, பொங்கல் பானை, கரும்பு, மஞ்சள் கொத்து, பூக்கள் என பொங்கல் பண்டிகையில் இடம்பெறும் அனைத்தும் இடம் பெற்றுள்ளன. இது பொங்கல் கோலப்போட்டியில் கலந்து கொள்பவர்களுக்கு ஏற்ற ஒன்றும் கூட.
3. 13 புள்ளி நேர்புள்ளி 1 வரை கோலம்
உங்களுக்கு ரங்கோலி எல்லாம் செட் ஆகாதா? புள்ளி வைத்த கோலம் தான் தேடிக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் இந்த 13 புள்ளி நேர்புள்ளி 1 வரை கோலத்தை போடுங்கள். இதை வீட்டிற்கு முன் போட்டால், வீட்டு வாசலே மிகவும் அழகாக இருக்கும். முக்கியமாக வீட்டு வாசலில் சூரிய பொங்கல் வைப்பவர்கள் இந்த கோலத்தை போட்டு வைத்தால் அட்டகாசமாக இருக்கும்.
4. கலர்புல் பொங்கல் பானை ரங்கோலி
நீங்கள் சிம்பிளான டிசைன்களுன் ஒரு பெரிய அளவிலான பொங்கல் பானை ரங்கோலியை தேடிக் கொண்டிருந்தால், இந்த ரங்கோலி உங்களுக்கானது. இதில் உள்ள டிசைன்கள் அனைத்தும் போடுவதற்கு சுலபமாக இருப்பதோடு, வீட்டு வாசலுக்கு ஒரு நல்ல தோற்றத்தைக் கொடுக்கும்.
5. சிம்பிளான பொங்கல் கோலம்
நீங்கள் மிகவும் சிம்பிளான பொங்கல் கோலத்தை தேடிக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் உங்களுக்கு இந்த முக்கோண பொங்கல் பானை கோலம் ஏற்றதாக இருக்கும். இதில் டிசைன்களும் ஈஸி, கலர் கொடுப்பதும் சுலபம்.
6. 13-1 புள்ளி பொங்கல் கோலம்
நீங்கள் புள்ளி வைத்து போடும் பொங்கல் கோலத்தை எதிர்பார்த்தால், இந்த மயிலும், பொங்கல் பானையும் இடம் பெறும் கோலம் ஏற்றதாக இருக்கும். முக்கியமாக இது போடுவதற்கு சுலபமாகவும் இருக்கும்.



Click it and Unblock the Notifications