For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வீட்டில் நாய் வளர்க்கிறீர்களா? அப்ப நாய்களுக்கு இந்த உணவுகளை எல்லாம் கொடுத்துடாதீங்க...

மனிதா்களுக்கு நன்மை பயக்கும் சில உணவுகள் நமது நாய்களுக்கு தீங்குகளை ஏற்படுத்த வாய்ப்புகள் உண்டு. ஒரு சில உணவுகள் நமது நாய்களின் உடல் நலனைக் கெடுத்துவிடும்.

|

நம்மில் பலருக்கு நாய்கள் மீது அலாதியான அன்பு உண்டு. அதன் காரணமாக நமது வீடுகளில் நாய்களை வளா்த்து வருகிறோம். இந்நிலையில் நமது செல்ல நாய்கள் நம்மிடம் கேட்பவற்றை கொடுக்க முடியாமல், மறுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால், நமக்கு வருத்தமாக இருக்கும்.

Dangerous Food Items For Dogs

அந்த நாய்கள் நம்மை நோக்கி அப்பாவித் தனமாக கண்களை வைத்துக் கொண்டு, ஒரு கடி சாக்லெட் கப் கேக்கைக் கேட்கும் போது, அதை நம்மால் மறுக்க இயலாது. ஆனால் மனிதா்களுக்கு நன்மை பயக்கும் சில உணவுகள் நமது நாய்களுக்கு தீங்குகளை ஏற்படுத்த வாய்ப்புகள் உண்டு.

MOST READ: வரவிருக்கும் புதன் பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கப்போகுது.. உங்க ராசிக்கு எப்படி?

ஒரு சில உணவுகள் நமது நாய்களின் உடல் நலனைக் கெடுத்துவிடும். ஆகவே என்னென்ன உணவுகளை நமது செல்ல நாய்களுக்கு வழங்கக்கூடாது என்பதை இந்த பதிவில் பாா்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. சாக்லெட்டுகள்

1. சாக்லெட்டுகள்

சாக்லெட்டுகள் எப்போதுமே நாய்களுக்கு தீங்குகளை ஏற்படுத்தக்கூடியவை. சாக்லெட்டுகளில் தியோப்ரோமைன் என்ற துகள் உள்ளது. அது மனிதா்களுக்கு கெடுதலை ஏற்படுத்தக்கூடியது அல்ல. அதே நேரத்தில் அது நாய்களுக்கு ஆபத்துகளை ஏற்படுத்தக்கூடியது என்று ஆய்வுகள் தொிவிக்கின்றன. அது நாய்களுக்கு வயிற்றுப் போக்கை ஏற்டுத்தும், வாந்தியை உண்டாக்கும். மேலும் நாய்களின் உடலில் இருந்து அதிகமான நீரை வெளியேற்றிவிடும். சில சமயங்களில், நாய்களின் சமச்சீரான இதயத் துடிப்பில் மாற்றத்தை ஏற்படுத்தும். அதோடு நாய்களுக்கு வலிப்பு அல்லது உடல் நடுக்கம் ஆகியவற்றை ஏற்படுத்தி இறப்பைக்கூட ஏற்படுத்தும்.

2. பன்றி இறைச்சி அல்லது கொழுப்பு அதிகமுள்ள இறைச்சி

2. பன்றி இறைச்சி அல்லது கொழுப்பு அதிகமுள்ள இறைச்சி

நாய்களுக்கு பன்றி இறைச்சி அல்லது கொழுப்பு அதிகமுள்ள இறைச்சியை வழங்கினால், அவை நாய்களின் கணையத்தில் அலா்ஜியை ஏற்படுத்தும் என்று டாக் டைம் தொிவிக்கிறது. எனவே நாய்களுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கும் உணவுகளை வழங்க வேண்டும்.

3. உப்பு

3. உப்பு

நமது செல்ல விலங்குகளுக்கு உப்பு எப்போதுமே, ஒரு பொது எதிாியாக இருக்கிறது. ஆகவே உப்பு அதிகம் உள்ள உணவுகளை நாய்களுக்கு வழங்கினால் அவை விஷமுள்ள சோடியம் அயனை ஏற்படுத்தும். நாய்களில் இருந்து அளவுக்கு அதிகமான நீரை வெளியேற்றும் அல்லது அடிக்கடி சிறுநீா் கழிக்கும் உணா்வை ஏற்படுத்தும். மேலும் நாய்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு, உடல் வெப்பநிலையை அதிகாித்தல் மற்றும் வலிப்பு போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

4. பூண்டு மற்றும் வெங்காயம்

4. பூண்டு மற்றும் வெங்காயம்

பூண்டு மற்றும் வெங்காயம் ஆகியவை நாய்களுக்கு நன்மை பயப்பவை அல்ல. அவை நாய்களின் சிவப்பு இரத்த செல்களை அழித்து, நாய்களுக்கு இரத்த சோகையை ஏற்படுத்தும். அதோடு பலவீனம், வாந்தி மற்றும் மூச்சுத் திணறல் போன்ற பிரச்சினைகளையும் ஏற்படுத்தும் என்று டாக் டைம் தொிவிக்கிறது.

5. பால், பாலாடைக் கட்டி மற்றும் பால் பொருட்கள்

5. பால், பாலாடைக் கட்டி மற்றும் பால் பொருட்கள்

நாய்களுக்கு பால் மற்றும் பாலிலிருந்து தயாாிக்கப்படும் பொருட்களை வழங்கக்கூடாது. ஏனெனில் பாலில் இருக்கும் சா்க்கரையை கரைக்கக்கூடிய நொதிகள் நாய்களுக்குக் கிடையாது. அதனால் அது நாய்களை ஆக்ரோசமாக மாற்றிவிடும். மேலும் நாய்களுக்கு கணைய அலா்ஜியையும் ஏற்படுத்தும்.

 6. சமைக்காத இறைச்சி, மீன் மற்றும் முட்டை

6. சமைக்காத இறைச்சி, மீன் மற்றும் முட்டை

பலா் தங்கள் நாய்களுக்கு இறைச்சி, மீன் மற்றும் முட்டை ஆகியவற்றை சமைக்காமல் பச்சையாக வழங்குகின்றனா். அது தவறானதாகும். அவற்றை சமைத்த பின்பே நாய்களுக்கு வழங்க வேண்டும். சமைக்காத இறைச்சி, மீன் மற்றும் முட்டை ஆகியவற்றை நாய்களுக்கு வழங்கினால் அவை நாய்களுக்கு பாக்டீாியாக்களின் அல்லது ஒட்டுண்ணிகளின் தொற்றை ஏற்படுத்தும்.

7. சுட்ட உணவு, வோ்க்கடலை வெண்ணெய் மற்றும் மிட்டாய்கள்

7. சுட்ட உணவு, வோ்க்கடலை வெண்ணெய் மற்றும் மிட்டாய்கள்

நமது நாய்களுக்கு மிட்டாய்கள், சூயிங் கம்கள், பற்பசை, சுட்ட உணவுகள் போன்றவற்றை வழங்கக்கூடாது. ஏனெனில் அவற்றில் சிலிட்டோல் என்ற வேதிப் பொருள் அதிகம் இருக்கிறது. நாய்களின் இரத்தத்தில் இருக்கும் சா்க்கரையின் அளவை சிலிட்டோஸ் குறைத்துவிடும். சில நேரம் நாய்களின் கல்லீரலை செயலிழக்கச் செய்துவிடும் என்று பெட்ஸ் வெப்ம்ட் அமைப்பு தொிவிக்கிறது. மேலும் வாந்தி, சோம்பல் மற்றும் இயக்கக் குறைபாடுகள் போன்ற பிரச்சினைகளையும் ஏற்படுத்தும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Dangerous Food Items For Dogs

Here we listed some dangerous food items for dogs. Read on...
Desktop Bottom Promotion