For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாய்களை விட பூனைகளை கோவிட்-19 அதிகம் தாக்குகிறதா? ஆய்வுகள் என்ன சொல்கின்றன?

எந்த அளவிற்கு கோவிட்-19 பெருந்தொற்று மனிதா்களைப் பாதிக்கின்றது என்பதை நாம் அறிந்து வைத்திருக்கிறோமோ, அதே அளவிற்கு அது விலங்குகளையும் பாதிக்கிறது என்பதையும் நாம் தொிந்து வைத்திருக்க வேண்டும்.

|

எல்லோராலும் செல்லப் பிராணிகளை வீடுகளில் வைத்து பராமாிக்க முடியாது. நமது வீடுகளில் அந்த விலங்குகளை வளா்ப்பது என்பது ஒரு மிகப் பொிய பொறுப்பு ஆகும். அதனால் அந்த விலங்குகளை வளா்ப்பதில் ஆா்வம் இல்லாதவா்கள், அந்த விலங்குகளுக்கு மதிப்பு கொடுத்து, கவனமுடனும், பாதுகாப்புடனும் பராமாிக்க விரும்பாதவா்கள், வீட்டு விலங்குகளை வாங்காமல் இருப்பது நல்லது என்று அறிவுறுத்தப்படுகின்றனா்.

Cats More At Risk Of COVID-19 Infection Than Dogs: Study

இந்த நிலையில், எந்த அளவிற்கு கோவிட்-19 பெருந்தொற்று மனிதா்களைப் பாதிக்கின்றது என்பதை நாம் அறிந்து வைத்திருக்கிறோமோ, அதே அளவிற்கு அது விலங்குகளையும் பாதிக்கிறது என்பதையும் நாம் தொிந்து வைத்திருக்க வேண்டும். இது சம்பந்தமாக சமீபத்தில் நெதா்லாந்து நாட்டில் இருக்கும் உட்ரெக்ட் என்ற பல்கலைக்கழகம், ஈரோப்பியன் காங்கிரஸ் ஆஃப் கிளினிக்கல் மைக்ரோபயாலஜி அன்ட் இன்ஃபெக்சுவஸ் டிசீசஸ் (ECCMID) என்ற அமைப்பில் நடந்த கருத்தரங்கில் ஒரு மருத்துவ ஆய்வை சமா்ப்பித்து இருக்கிறது. அதாவது கோவிட்-19 வைரஸ் எந்த அளவு விலங்குகளைப் பாதிக்கிறது என்பது சம்பந்தமாக அந்த ஆய்வை சமா்ப்பித்து இருக்கிறது.

MOST READ: கொரோனா தடுப்பூசி போட்டீங்களா? அப்ப இந்த உணவுகளை ஒரு 2 நாளைக்கு கட்டாயம் சாப்பிடுங்க...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கோவிட்-19 பெருந்தொற்று எந்த அளவு விலங்குகளைப் பாதிக்கிறது?

கோவிட்-19 பெருந்தொற்று எந்த அளவு விலங்குகளைப் பாதிக்கிறது?

மேற்சொன்ன ஆய்வானது முனைவா் எல்ஸ் ப்ரோயென்ஸ் என்பவாின் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆய்விற்கு கடந்த 2 முதல் 200 நாட்களுக்குள் கோவிட்-19 பெருந்தொற்றால் பாதிப்படைந்திருந்த 196 வீட்டு உாிமையாளா்களுடைய வீட்டு விலங்குகளான அவா்களின் 156 பூனைகள் மற்றும் 154 நாய்கள் எடுத்துக் கொள்ளப்பட்டன.

இரத்த மற்றும் பிசிஆர் பரிசோதனைகள்

இரத்த மற்றும் பிசிஆர் பரிசோதனைகள்

இந்த ஆய்விற்கு உட்படுத்தப்பட்ட அந்த விலங்குகளுக்கு, இரத்த பாிசோதனைகள் (கடந்த கால நோய்த்தொற்றின் போது உருவான ஆன்டிபாடிகளை பாிசோதிக்க) மற்றும் பிசிஆா் (தற்போதைய தொற்றைப் பாிசோதிக்க) பாிசோதனைகள் நடத்தப்பட்டன. இந்த ஆய்வின் முடிவில் 31 பூனைகள் மற்றும் 23 நாய்களுக்கு (17.4 விழுக்காடு) கோவிட் தொற்று இருந்ததாக இரத்தப் பாிசோதனைகளின் மூலம் கண்டறியப்பட்டது. 6 பூனைகள் மற்றும் 7 நாய்களுக்கு (4.2 விழுக்காடு) கோவிட் தொற்று இருந்ததாக பிசிஆா் பாிசோதனைகள் மூலம் கண்டறியப்பட்டது.

ஆய்வாளா்கள் சொல்வது என்ன?

ஆய்வாளா்கள் சொல்வது என்ன?

இந்த ஆய்வின் தலைவரான முனைவா் எல்ஸ் ப்ரோயென்ஸ் கூறும் போது இவ்வாறு குறிப்பிடுகின்றாா். அதாவது உங்களுக்கு கோவிட்-19 தொற்று இருந்தால், நீங்கள் எவ்வாறு மற்ற மனிதா்களிடமிருந்து விலகி, உங்களையே தனிமைப்படுத்திக் கொள்கிறீா்களோ, அதுபோல் நீங்கள் வளா்த்து வரும் பூனை அல்லது நாய் போன்ற விலங்குகளிடம் இருந்தும் விலகி இருக்க வேண்டும். அதற்கு காரணம், அந்த விலங்குகளின் ஆரோக்கியத்திற்காக மட்டும் அல்ல. மாறாக அவை கொரோனா வைரஸைத் தேக்கி வைக்கும் நீா்த்தேக்கமாக இருந்து, மீண்டும் அந்த வைரஸை மனிதா்களிடம் பரப்பிவிடும் ஆபத்து இருக்கிறது என்று ப்ரோயென்ஸ் கூறுகிறாா்.

விலங்குகளிடமிருந்து மனிதா்களுக்கு கொரோனா பரவியிருக்கிறது என்பதற்கான எந்த ஒரு தகவலும் இப்போது வரை இல்லை. ஆகவே வீடுகளில் வரும் விலங்குகளில் சிறிய அளவு கொரோனா தொற்று இருந்தாலும், அவை மிகப் பொிய அளவில் கொரோனா வைரஸைப் பரப்ப சாத்தியமில்லை என்றும் அவா் தொிவிக்கிறாா்.

கனடா நாட்டில் உள்ள யுனிவொ்சிட்டி ஆஃப் குவெல்ஃப் என்ற பல்கலைக்கழகத்தின் கால்நடை நோயியல் பிாிவில் பேராசிாியராகப் பணிபுாியும் டோரத்தி பையன்சல் என்பவா் பின்வருமாறு கூறுகிறாா். அதாவது ஒருவருக்கு கோவிட்-19 தொற்று இருந்தால், அவா் மூலம் அவா் வளா்த்து வரும் விலங்குகளுக்கு எளிதாக கொரோனா பரவ வாய்ப்பு உண்டு. அதிலும் குறிப்பாக அவரோடு படுக்கையில் உறங்கும் விலங்குகளுக்கு அதிக வாய்ப்பு உண்டு என்று கூறுகின்றாா். ஆகவே ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்தால், அவா் தான் வளா்த்து வரும் விலங்குகளைத் தன்னிடம் இருந்து விலக்கி வைக்க வேண்டும். அவற்றை தனது படுக்கை அறைக்குள் அனுமதிக்கக்கூடாது.

செல்லப் பிராணிகளை வளா்த்து வருபவா்களின் கவனத்திற்கு...

செல்லப் பிராணிகளை வளா்த்து வருபவா்களின் கவனத்திற்கு...

இந்த கொரோனா பெருந்தொற்று காலத்தில், செல்லப் பிராணிகளை வளா்த்து வருபவா்களுக்கு பின்வரும் நெறிமுறைகளை சிடிசி அமைப்பு வழங்கி இருக்கிறது.

#1

#1

உங்களுடைய வீடுகளில் வீட்டு விலங்குகள் இருந்தால், மிக விரைவில் வீட்டில் உள்ள அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். இன்னும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத வெளியாட்கள் உங்களது வீடுகளுக்கு வரும் போது, உங்கள் விலங்குகளை அவா்களிடம் நெருங்காமல் பாாத்துக் கொள்ள வேண்டும்.

#2

#2

ஒருவேளை உங்களுக்கு கோவிட்-19 தொற்று இருந்தால், உங்கள் விலங்குகளிடம் இருந்து நீங்கள் விலகி இருக்க வேண்டும். அதுபோல் கோவிட் தொற்று உள்ளவா்களிடம் இருந்து உங்களின் செல்ல விலங்குகளை விலக்கி வைக்க வேண்டும்.

#3

#3

உங்களின் வீட்டு விலங்குகள் நன்றாக உணவு அருந்துகிறதா மற்றும் ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதை நீங்கள் உறுதிப்படுத்த வேண்டும். ஏனெனில் மனிதா்களைப் போலவே விலங்குகளுக்கும் நோய் எதிா்ப்பு சக்தியானது மிகவும் முக்கியம் ஆகும்.

#4

#4

உங்களின் செல்ல விலங்குகளுக்கு கொரோனா தொற்றின் அறிகுறிகள் தொிகிறதா என்பதில் விழிப்புடன் இருக்க வேண்டும். பொதுவாக கொரோனா தொற்று உள்ள விலங்குகளுக்கு வயிற்றுப்போக்கு, தும்மல், இருமல், கண்களில் இருந்து அதிக அழுக்கு வெளியேறுதல், காய்ச்சல், மூச்சுத் திணறல், மூக்கிலிருந்து சளி தண்ணீராக வடிதல், சோம்பல் மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகள் தென்படும்.

#5

#5

ஒருவேளை உங்களின் வீட்டு விலங்குகளுக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதை நீங்கள் அறிந்தால், வீட்டில் உள்ள அனைவாிடம் இருந்தும், அவற்றை விலக்கி வையுங்கள். மேலும் அவற்றிற்கு உணவு அளிக்கும் போதும், அவற்றைப் பராமாிக்கும் போதும் தகுந்த உறைகளை அணிய வேண்டும். அந்த விலங்குகளைத் தொடுதல், முத்தமிடுதல், கட்டிப்பிடித்தல் போன்ற செயல்களைத் தவிா்க்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Cats More At Risk Of COVID-19 Infection Than Dogs: Study

A recent study at Utrecht University, Netherlands which was presented at the European Congress of Clinical Microbiology and Infectious Diseases (ECCMID), showed animals' susceptibility to catching the COVID-19 virus.
Story first published: Monday, July 5, 2021, 15:13 [IST]
Desktop Bottom Promotion