For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

செல்லப்பிராணி பூனைகளுக்கு ஏற்படக்கூடிய 6 நோய்களும் அவற்றின் அறிகுறிகளும்..!

செல்லப்பிராணி பூனைகளுக்கு ஏற்படும் நோய்த்தொற்றுகள் மற்றும் அவற்றின் காரணிகள், அறிகுறிகள் போன்ற தகவல்களை இங்கு படித்தறியலாம்.

By Soundarya S
|

நம்மில் பலருக்கு செல்லப்பிராணிகள் வளர்ப்பு என்றாலே ஒரு தனி பிரியம். பெரும்பாலான நபர்கள் நாய்களை செல்லப்பிராணிகளாக வளர்த்து வருகின்றனர். இன்னும் வேறு சில பெரும்பான்மை மக்களோ பூனை வளர்ப்பில் ஈடுபடுகின்றனர்; மிகச்சில நண்பர்கள் மற்ற பிராணிகளான முயல், லவ் பேர்ட்ஸ், புறா, கிளி போன்ற பறவைகள் முதலியவற்றை வளர்க்கின்றனர்.

6 most common diseases in cats

இந்த பதிப்பு பூனைக் காதலர்களுக்கானது! பூனை பிரியர்கள் மற்றும் நேசத்தினருக்கானது! பூனை மிகவும் சுத்தமான பிராணி. பூனைகள் தன்னை தானே கவனித்துக் கொள்வதில் மிகவும் தேர்ச்சி வாய்ந்தவை. ஆனால், என்ன தான் அத்துணை சுத்தமாக இருந்தாலும், பூனைகளுக்கும் சில நோய்கள் ஏற்படத்தான் செய்கின்றன.

பூனைக்கு சாதாரணமாக ஏற்படக்கூடிய சில நோய்கள் குறித்து இங்கு காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. வாந்தி.!

1. வாந்தி.!

பூனைகளுக்கு சாதாரணமாக ஏற்படும் நோய்களில் முக்கியமான ஒன்று வாந்தி. பூனைகள் எப்பொழுதும் சுத்தத்தன்மையை கடைபிடிக்கும் பிராணிகள் தான், இருப்பினும் அவைகளுக்கும் ஏற்படும் பொதுவான பிரச்சனையாக வாந்தி விளங்குகிறது.

எதனால் ஏற்படுகிறது?

பூனைகள் சாப்பிடத்தகாத அல்லது விஷத்தன்மை கொண்ட உணவினை உட்கொள்ள நேர்ந்தால், பூனைகளுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டால், அவற்றிற்கு வாந்தி உண்டாகிறது.

அறிகுறிகள்:

எந்நேரமும் வாயிலிருந்து உமிழ்நீர் சுரந்து வழிதல்

வயிற்றில் மற்றும் குடல் பகுதியில் கோளாறு

இந்த மாதிரியான அறிகுறிகள் மூலம் பூனைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை நீங்கள் அறியலாம். இந்த சமயத்தில் பூனையின் உடலில் நீர்ச்சத்து குறைந்துவிடும், ஆகையால் உடனே கால்நடை மருத்துவரை தொடர்பு கொள்ள வேண்டியது அவசியம்.

2. Feline Lower Urinary Tract Diseases (FLUTD)

2. Feline Lower Urinary Tract Diseases (FLUTD)

பூனைகளில் மிக அரிதாக ஏற்படக்கூடிய நோய் - பிலின் லோயர் சிறுநீரக தொற்று. இது நூறில் 3% பூனைகளுக்கே ஏற்படக் கூடிய ஒன்று; மேலும் இது ஆண் மற்றும் பெண் என இரு பால் பூனைகளுக்கும் ஏற்படக்கூடிய ஒரு நோயாகும்.

எதனால் ஏற்படுகிறது?

பூனைகளின் உணவு மற்றும் வாழ்க்கை முறையில் திடீர் மாற்றங்கள் ஏற்பட்டால், பூனைகள் அதிக உடல் எடை கொண்டிருந்தால் அல்லது சரியான உடல் எடை கொண்டிராவிட்டால், பூனைகள் வறண்ட உணவுகளை உட்கொண்டால், அவற்றிற்கு மனஅழுத்தம் ஏற்பட்டிருந்தால் இந்த நோய் உண்டாகும்.

அறிகுறிகள்!

சிறுநீர் வழிதல்

சிறுநீரில் இரத்தம் கலந்து வெளியேறல்

வழக்கத்திற்கு மாறான இடத்திலிருந்து சிறுநீர் வெளிப்படல்

அழும்போது சிறுநீர் வெளிப்படல்

சிறுநீரக உறுப்புகளை நக்குதல் (வலியின் காரணமாக, அதை தாங்க முடியாமல்)

மனஅழுத்தம்

நீர்ச்சத்து குறைதல்

வாந்தி

இந்த அறிகுறிகளின் மூலம் பூனைக்கு FLUTD - Feline Lower Urinary Tract Diseases ஏற்பட்டிருப்பதை நம்மால் அறிய இயலும்; எனவே உடனே மருத்துவரை தொடர்பு கொள்வது சிறந்தது.

3. உண்ணிகள்/தத்துக்கிளிகள்

3. உண்ணிகள்/தத்துக்கிளிகள்

பூனைகள் மட்டுமில்லாது அனைத்து விலங்குகளிலும் பறவைகளிலும் ஏற்படக்கூடிய ஒரு நோய்த்தொற்று இந்த உண்ணிகள். இவை இரத்தத்தை உறிஞ்சி, விலங்குகள் மற்றும் பறவைகளை பலவீனமாக்கக்கூடிய ஒரு உயிரினமாகும்.

எதனால் ஏற்படுகிறது?

சுத்தமில்லாத சூழலில் பூனைகள் இருக்க நேர்ந்தால், சுற்றுப்புற சுத்தமின்மையால், சுத்தமற்ற உணவு முறையால் இந்த உண்ணிகள் பூனைகளின் உடலில் வந்துவிடும்.

அறிகுறிகள்

சுத்தமில்லாத சருமம்

தொடர்ந்த அரிப்பு

தொடர்ந்து நக்குதல்

சிவந்த சருமம்/தடுப்புகள்

முடி கொட்டுதல்

தோல் நோய்கள்

இந்த இரத்தம் உறிஞ்சும் உண்ணிகள் ஒரு வருடம் வரை உயிர்வாழக் கூடியவை. இவை பூனைகளிடத்தில் அனிமியா எனும் இரத்த சோகையை உருவாக்கும் தன்மை கொண்டவை. எனவே, உடனடியாக கால்நடை மருத்துவரை சந்தித்தல் அவசியம்.

4. தட்டைப்புழுக்கள்

4. தட்டைப்புழுக்கள்

பூனைகளுக்கு சாதாரணமாக ஏற்படக்கூடிய மற்றோர் நோய்த்தொற்று தட்டைப்புழுக்கள். பொதுவாக இந்த புழுக்கள் கண்டங்களாக பூனையின் குடலில் பிரிந்திருக்கும். முழு புழுவை காண்பது என்பதே அரிது; புழுவை வெளியேற்ற மருந்து அளித்தாலும் அதன் பாகங்கள் முற்றிலும் வெளியேறிவிட்டனவா என்று அறிவது கடினம்.

இந்த புழுக்கள் வெண்மையான நிறத்தில், அரிசி, வெள்ளை எள் போன்ற வடிவத்தில் இருக்கும். இவை பூனையின் மலவாய் வழியாக, மலம் மூலமாக வெளியேறுகின்றன.

எதனால் ஏற்படுகிறது?

இவை நோய்க்கிருமிகள், வைரஸ் அல்லது பிற கிருமிகளால் பூனைகளில் உண்டாகின்றன.

அறிகுறிகள்:

எடை குறைதல்

வாந்தி

இந்த அறிகுறிகள் பூனைகளிடத்தில் காணப்பட்டால், கால்நடை மருத்துவரை அணுகுவது நல்லது.

5. வயிற்றுப்போக்கு

5. வயிற்றுப்போக்கு

பூனைகளில் வயிற்றுப்போக்கு பொதுவாக உணவு ஒவ்வாமையால் அல்லது உணவு ஒத்துக்கொள்ளாமையால், பிற நோய்த்தொற்றுகளால் ஏற்படுகிறது.

எதனால் ஏற்படுகிறது?

கெட்டுப்போன உணவு, குடல் கோளாறுகள், ஒவ்வாமை, நோய்த்தொற்றுகள், கல்லீரல் நோய், புற்றுநோய் போன்ற நோய்கள் பூனைக்கு இருந்தால், வயிற்றுப்போக்கு ஏற்படும்.

அறிகுறிகள்:

தொடர்ந்து மலம் வெளியேறுதல்

நீர்ச்சத்து குறைதல்

இந்த தருணத்தில், பூனைகளுக்கு நன்றாக நீரை பருக அளிக்க வேண்டியது அவசியம். மேலும் கால்நடை மருத்துவரை தொடர்பு கொள்ள வேண்டியதும் அவசியம்.

6. கண் பிரச்சனைகள்

6. கண் பிரச்சனைகள்

பூனைகளில் வயது முதிர்ச்சி அல்லது பிற நோய்கள் காரணமாக ஏற்படும் மற்றொரு உடல் குறைபாடு கண் பிரச்சனைகள்.

எதனால் ஏற்படுகிறது?

பூனைகளில் கேட்ராக்ட், குளுக்கோமா, கஞ்சுங்க்ட்டிவிட்டிஸ், ட்ராமா, வைரஸ்கள், எரிச்சல், ரெடினா குறைபாடுகள் காரணமாக கண் குறைபாடுகள் ஏற்படலாம்.

அறிகுறிகள்:

கண்களில் கண்ணீர் வழிதல்

கண்ணீர் தோய்ந்த முடி

சிவப்பு அல்லது வெள்ளை வரிகள்

பூளை வெளியேறல்

ஒற்றைக்கண் குறைபாடு

சதை வளர்தல்

கண்ணை கசக்கிக்கொண்டே இருத்தல்

இந்த மாதிரியான அறிகுறிகள் ஏற்படும் போது உடனடியாக கால்நடை மருத்துவரை தொடர்பு கொள்ளுதல் வேண்டும்..!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: pet care
English summary

செல்லப்பிராணி பூனைகளுக்கு ஏற்படக்கூடிய 6 நோய்களும் அவற்றின் அறிகுறிகளும் - 6 most common health problems in cats and symptoms for the diseases

6 most common health problems in cats and symptoms for the diseases
Story first published: Tuesday, July 17, 2018, 18:30 [IST]
Desktop Bottom Promotion