Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
உங்க செல்லப் பிராணிகளைப் பராமரிக்க எண்ணெயை பயன்படுத்தலாமா?
எஸன்ஷியல் ஆயில் ஒரு இயற்கையான அரோமேட்டிக் பொருளாகும். இந்த எஸன்ஷியல் ஆயில் உங்கள் செல்லப் பிராணியின் உணர்வுப் பூர்வமான பழக்கத்திற்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் பயனுள்ளதாக இருக்கும்.
எஸன்ஷியல் ஆயில் ஒரு இயற்கையான அரோமேட்டிக் பொருளாகும். இந்த எண்ணெய் வெவ்வேறு வகையான தாவரங்களிலிருந்து கிடைக்கிறது. நீங்கள் வீட்டில் புஷ் புஷ் என்று செல்லப் பிராணி நாய் வளர்ப்பவராக இருந்தால் இந்த தகவல் கண்டிப்பாக உங்களுக்கு தேவை.
இந்த எஸன்ஷியல் ஆயில் உங்கள் செல்லப் பிராணியை துள்ளிக் குதித்து குறும்புத் தனம் பண்ண வைத்து விடும். உங்கள் செல்லப் பிராணி ஆரோக்கியமாகவும் தூய்மையாகவும் வைத்து கொள்ள இது உதவுகிறது. அதே நேரத்தில் இந்த எஸன்ஷியல் ஆயிலை உங்கள் செல்லப் பிராணிக்கு எப்படி பயன்படுத்த வேண்டும் என தெரிந்து கொண்டு கவனமாக பயன்படுத்துவது நல்லது.

இந்த எஸன்ஷியல் ஆயில் பொதுவாக அனிஸ்சிட்டி, பயம், தனிமை அனிஸ்சிட்டி போன்ற பிரச்சினைகளுக்கும் வலிப்பு நோய், இரத்தக் கசிவு, விலங்குகளின் காது தொற்று போன்றவற்றிற்கும் பயன்படுகிறது.
மேலும் இந்த எஸன்ஷியல் ஆயில் நமது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்தல், கல்லீரல் மற்றும் சிறுநீரக வேலையை சரி செய்தல் போன்ற வேலைகளையும் செய்கிறது. இது ஒரு அரோமேட்டிக் பொருளாகவும் உள்ளது இதன் தனிச் சிறப்பு.
இதை பயன்படுத்தி உங்கள் செல்லப் பிராணியின் பழக்க வழக்கங்களை கவனியுங்கள்.
எனவே உங்கள் செல்லப் பிராணியை ஆரோக்கியமாகவும் தூய்மையாகவும் வைத்து கொள்ள இந்த எஸன்ஷியல் ஆயிலை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை இக்கட்டுரையில் காணலாம்.

பரவுதல்
இந்த முறை தான் வீட்டில் வளர்க்கப்படும் நாய்களுக்கு பரந்துரைக்கப்படுகிறது. ஓரு 1-5 சொட்டுகள் எஸன்ஷியல் ஆயிலை ஒரு டிவியூசர் (நறுமணம் பரவும் கருவி) கருவியில் செலுத்தி திறந்த அறையிலோ அல்லது மூடிய அறையிலோ அல்லது நாய் கூண்டியிலோ வைக்க வேண்டும். இந்த எஸன்ஷியல் ஆயிலுக்கு உங்கள் செல்லப் பிராணியின் நடத்தையை கவனியுங்கள்.

வடிவம்
வடிவத்தை பொருத்து கண்டிப்பாக எஸன்ஷியல் ஆயிலின் அளவும் வேறுபடும். ஏனெனில் ஒவ்வொரு நாயும் இயற்கையில் வெவ்வேறு வடிவத்துடன் வெவ்வேறு குணநலன்களுடன் காணப்படுகிறது. எனவே நாயின் வடிவத்தை பொருத்து அதற்கு பயன்படுத்தப்படும் எஸன்ஷியல் ஆயில் அளவும் மாறுபடும்.

அரோமா தெரபி
நாய்களின் அரோமா தெரபி முறைக்கு எஸன்ஷியல் ஆயில் பெரிதும் பயன்படுகிறது. அரோமா தெரிபியில் நிறைய நன்மைகள் பொதிந்துள்ளன. நீங்கள் பரப்பும் கருவி கொண்டோ அல்லது நேரடியாக உங்கள் நாயை எஸன்ஷியல் ஆயில் பாட்டிலின் நறுமணத்தை நுகர வைத்தோ இதைச் செய்யலாம். அல்லது உங்கள் கைகளில் அந்த எஸன்ஷியல் ஆயிலை தடவிக் கொண்டு அதை கூட உங்கள் நாயை நுகர வைக்கலாம்.

சருமத்தில் தடவுதல்
சில சமயங்களில் சில வகையான நாய்களுக்கு இந்த எஸன்ஷியல் ஆயிலை நேரடியாக அதன் சருமத்தில் தடவலாம். இந்த முறையில் வேகமான மாற்றத்தை நாம் காணலாம்.

காதில் தடவுதல்
எஸன்ஷியல் ஆயிலை நாய்களின் காதுகளின் நுனியில் கூட அப்ளே செய்யலாம். சில நாய்கள் சமாளித்து கொள்ளும், ஆனால் சில நாய்கள் தலையை விடாமல் ஆட்டும். இருப்பினும் அந்த எஸன்ஷியல் ஆயில் நாயின் கண்ணிற்குள் செல்லாமல் பார்த்துக் கவனமாக கையாள்வது நல்லது.

பாதங்களில் தடவுதல்
எஸன்ஷியல் ஆயிலை அப்ளே செய்வதற்கு நாயின் பாதங்கள் மிகவும் சிறந்தது. ஆனால் எந்த அளவு ஆயிலை தடவ வேண்டும் என்பதை கவனமாக செய்வது நல்லது.

மென்மையான மயிரில் அப்ளே செய்தல்
உங்கள் கைகளில் எஸன்ஷியல் ஆயிலை எடுத்து நன்றாக தேய்த்து கொண்டு அப்புறம் உங்கள் செல்லப் பிராணியின் மென்மையான முடியில் தடவ வேண்டும். இதற்கு பதிலாக எஸன்ஷியல் ஆயிலுடன் தண்ணீர் சேர்த்து ஸ்பிரே பாட்டிலில் அடைத்து ஸ்ப்ரே செய்தும் விடலாம்.

எஸன்ஷியல் ஆயிலை உட்புறமாக செலுத்துதல்
சில சமயங்களில் எஸன்ஷியல் ஆயிலை உங்கள் செல்லப் பிராணியின் உணவில் கலந்து உள் செலுத்தலாம். ஆனால் உங்கள் நாயின் வடிவத்திற்கு தேவையான அளவு மட்டும் எஸன்ஷியல் ஆயிலை பயன்படுத்த வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள்.
எல்லா எஸன்ஷியல் ஆயிலும் நல்லது கிடையாது. எனவே உங்கள் செல்லப் பிராணிக்கு சரியான எஸன்ஷியல் ஆயிலை தேர்ந்தெடுப்பதும் மிகவும் முக்கியம். இந்த எஸன்ஷியல் ஆயில் உங்கள் செல்லப் பிராணியின் உணர்வுப் பூர்வமான பழக்கத்திற்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் பயனுள்ளதாக இருக்கும்.



Click it and Unblock the Notifications











