For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வீட்டில் செல்லப் பிராணிகளால் துர்நாற்றமா? அதைப் போக்க இதோ உங்களுக்கான டிப்ஸ்...

By Srinivasan P M
|

செல்லப் பிராணிகளை வளர்ப்பது மிகவும் மகிழ்வைத் தரக்கூடிய பெரிய விஷயம் தான். ஆனால் இதனோடு கூடவே வீட்டையும் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்வது சிரமமான காரியம். உங்கச் செல்லப் பிராணிகள் அடிக்கும் கூத்தில் வரும் துர்நாற்றத்தை நினைத்தால் கவலையா இருக்கா? கவலைப்படாதீங்க.. உங்களுக்காகத் தான் பல ஐடியாக்களை வைத்துள்ளோம்.. மேலே படிங்க..

செல்லப்பிராணிகள் உலாவும் உங்கள் வீட்டை சுத்தமாக நறுமணத்துடன் வைத்துக் கொள்வது கொஞ்சம் கடினமான வேலை தான். வீட்டை அவை மண்ணாக்கினாலும் மிகவும் துர்நாற்றம் வீசக்கூடியவையாக இருந்தாலும் கூட, அதனை சுத்தம் செய்து மணமுடன் வைக்க சில எளிமையான வழிகள் உள்ளன.

சில நேரங்களில் நீங்கள் எவ்வளவு முயற்சித்தாலும் ஏதாவது ஒரு விதத்தில் கெட்ட வாடை அடிக்கத்தான் செய்யும். இதிலிருந்து விடுபட பின்வரும் சுலபமான வழிகளைப் பயன்படுத்தி வீட்டை வாடையின்றி வைத்திடுங்கள். இதோ உங்களுக்கான டிப்ஸ்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வினிகர்-சமையல் சோடா கலவை

வினிகர்-சமையல் சோடா கலவை

வினிகரில் சமையல் சோடா கலக்கும் போது நல்ல பலன்களைக் கொடுக்கும். இந்த கலவை காற்றை சுத்தப்படுத்தி இயற்கையாகவே ஆடைகளில், வீட்டு அறைகலன்கள் மற்றும் உங்கள் செல்லப்பிராணிகளின் வசிப்பிடங்களில் கூட வாடையை நீக்கி நறுமணத்தைப் பரப்பும். ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் இதை ஊற்றி அசுத்தமான இடங்களில் தெளியுங்கள். இது வாடையை உடனடியாக நீக்கும்.

ஹைட்ரஜன் பெராக்ஸைடு-சமையல் சோடா கலவை

ஹைட்ரஜன் பெராக்ஸைடு-சமையல் சோடா கலவை

ஹைட்ரஜன் பெராக்ஸைடு உங்கள் செல்லப்பிராணியின் சிறுநீர் வாடையை தகர்த்து, கறைகளையும் போக்க வல்லது. அதனை சமையல் சோடாவுடன் கலந்தால் உங்களுக்கு கறைகளைப் போக்கும் ஒரு சிறந்த கலவை கிடைக்கும். இது மேலும் சூழலை நறுமணத்துடன் வைக்கும்.

எலுமிச்சை-ஆரஞ்சு சர்க்கரை கலவை

எலுமிச்சை-ஆரஞ்சு சர்க்கரை கலவை

எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு தோல் எடுத்துக் கொண்டு, அதனுடன் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து, அதனை அறைகளில் தெளித்தால் அதன் நறுமணம் இனிதாக இருக்கும். பிராணிகளிடமிருந்து வரும் வாடையை போக்க, அவை பெரும்பாலும் நடமாடும் இடங்களில் தெளித்து விடலாம்.

ஒரு சமன்படுத்தும் வாடைப்போக்கி (neutralizing odour remover)

ஒரு சமன்படுத்தும் வாடைப்போக்கி (neutralizing odour remover)

இதைப் பயன்படுத்தும் போது உங்கள் செல்லப்பிராணி ஒரே இடத்தில் திரும்ப வந்து அசுத்தப்படுத்தாமல் தடுக்கலாம். அது கெட்ட வாடையையும் போக்கும். இது பெரும்பாலும் உங்கள் செல்லப்பிராணிகளுக்கான பொருட்களை விற்கும் கடைகளில் கிடைக்கும். இது அவற்றின் சிறுநீர் மட்டுமல்லாது, வாந்தி போன்ற பிற அசுத்தங்களையும் சுத்தம் செய்யவல்லது.

நறுமணமிக்க எண்ணெய் செய்யும் மாயம்

நறுமணமிக்க எண்ணெய் செய்யும் மாயம்

ஏதாவது ஒரு நறுமணமிக்க எண்ணெயில் எலுமிச்சைச் சாற்றை கலந்து அதில் சமையல் சோடாவும் கலந்து நன்கு குலுக்குங்கள். இந்த கலவையை அசுத்தமான இடத்தில் தெளித்து காய விடுங்கள். இது ஒரு நல்ல நறுமணத்தைத் தரக்கூடியது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Tricks To Get Rid Of Pet Odour

Are you worried about the odour created from the mess made by your pets? Well, we here to help you with tricks to get rid of pet odour.
Desktop Bottom Promotion