Latest Updates
-
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்..
சூரியனால் நாய்க்கு ஏற்படும் பிரச்சனை குறித்து அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவைகள்!!!
உங்கள் செல்ல நாய் சூரிய ஒளியால் ஏற்படும் தாக்கத்தால் பாதிக்கப்படுமா இல்லையா என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா? எந்த ஒரு நாயாக இருந்தாலும் சரி, சூரிய கதிர்களால் ஏற்படும் எதிர்மறை தாக்கங்களுக்கு உள்ளாகலாம். இதனால் புற்றுநோய் ஏற்படும் இடர்பாடுகள் கூட உள்ளது.
அதனால் உங்கள் செல்லப்பிராணிக்கு தேவையான சரியான பாதுகாப்பைப் பற்றி உங்கள் கால்நடை மருத்துவரிடம் பேசுங்கள். கீழ்கூறியுள்ள காரணிகளால் உங்கள் நாய்க்கு இடர்பாடு உள்ளதென்றால், உங்கள் செல்லப் பிராணியை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டும்.

வெண்ணிற நாய்கள்
வார இறுதியில் உங்கள் நண்பர்களுடன் கடற்கரைக்கு செல்லும் போது, வெள்ளையாக இருக்கும் உங்கள் நண்பர்கள் தான் வெயிலின் தாக்கத்திற்கு வேகமாக பாதிக்கப்படுவார்கள். அதே போல் தான் வெண்ணிற அல்லது மெல்லிய நிறத்தை கொண்டுள்ள நாய்களும். கருப்பாக இருக்கும் நாய்களை விட இந்த நாய்கள் தான் சூரிய ஒளியால் வேகமாக பாதிக்கப்படும். அதனால் உங்கள் கால்நடை மருத்துவர் பரிந்துரைக்கும் செல்லப் பிராணிக்கான சன் ஸ்க்ரீன் லோஷனை பயன்படுத்துங்கள்.

கொஞ்சமாக ரோமம் கொண்ட நாய்கள்
நாய்க்கு இருக்கும் ரோமத்தின் முக்கியமான ஒரு செயல்பாடு, நாயை சூரிய கதிர்களில் இருந்து பாதுகாப்பதே. அதனால் ரோமம் குறைவாக உள்ள நாய்கள் என்றால் அவைகளுக்கு இந்த பாதுகாப்பு குறைவாகவே இருக்கும். குறிப்பாக இவ்வகையான நாய்களுக்கு சன் ஸ்க்ரீன் லோஷன் உதவியாக இருக்கும். ஜின்க் ஆக்சைட் இல்லாத சன் ஸ்க்ரீன் லோஷனை வாங்குங்கள். ஏனென்றால் ஜின்க் ஆக்சைட் என்பது நாய்களுக்கு நச்சை உண்டாக்கும். மேலும் அது சிகப்பு இரத்த அணுக்களை தீவிரமாக பாதித்துவிடும். இதனால் இரத்தத்தை முழுமையாக மாற்ற வேண்டி வரும்.

முடியில்லா நாய்கள்
இதைப் பற்றி நீங்கள் சற்று தீவிரமாக யோசிக்கலாம். ஆனால் வேறு வழியில்லை. சூரிய ஒளி பாதிப்பால் பாதிக்கப்பட போகும் எந்த ஒரு நாய் வகையையும் நாம் விடுவதாக இல்லை. சைனீஸ் க்ரெஸ்டெட், சோலோயிட்ஸ்குவின்ட்லி மற்றும் பெருவியன் இன்கா ஆர்சிட் போன்ற முடியில்லா சில நாய் வகைகள் கண்டிப்பாக சன் ஸ்க்ரீன் போட்டுக் கொள்ள வேண்டும். அவைகள் கொளுத்தும் வெயிலில் செல்லவும் கூடாது.

வெளிரிய மூக்கை கொண்ட நாய்கள்
உங்கள் நாயின் மூக்கு வெளிரிய அல்லது பிங்க் நிறத்தில் உள்ளதா? நிறமி குறைவாக இருக்கையில் சூரிய ஒளி பாதிப்பு அதிகமாக இருக்கும். உங்கள் நாய்க்குட்டியின் உடல் முழுவதும் ரோமங்கள் அடர்த்தியாக இருந்தாலும் சரி, முடி குறைவாக இருக்கும் இடங்களில் சன்ஸ்க்ரீன் பயன்படுத்த உங்கள் கால்நடை மருத்துவர் பரிந்துரைப்பார். குறிப்பாக மூக்கு, வயிறு போன்ற பகுதிகளில்.

சூரிய குளியல்
உங்கள் வீட்டில் விழும் சூரிய ஒளி நாயின் மீது அப்படியே விழுகிறதா? அது எந்தளவு இடர்பாடு நிறைந்தது என்பது உங்களுக்கு தெரியாது. கால்நடை புற்றுநோய் மருத்துவர் டாக்டர். ஆன் ஹொயென்ஹாஸ் கூறுகையில், "சூரிய ஒளியில் படுத்து கிடக்க விரும்பும் நாய்க்கு, ரோமம் லேசாக முளைத்திருக்கும் வயிற்று பகுதியில் உள்ள செதில் அணுக்கள் புற்றுநோய் வளர வழிவகுக்கும்."



Click it and Unblock the Notifications
