Latest Updates
-
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்..
வயதான நாயை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சில டிப்ஸ்...
மனிதர்களைப் போலவே நாய்க்கும் முதுமை ஏற்படும். அப்படி வீட்டில் வளர்க்கும் உங்கள் நாய்க்கு வயதானால், அதனை சரியாக கவனித்துக் கொள்வது, அதை வளர்ப்போரின் கடமை. இதுவரை நல்ல நண்பனாக இருந்த நாயை, அதற்கு முதுமை ஏற்படும் போது இன்னும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.
மேலும் எப்படி மனிதர்களுக்கு வயதானால் உடலில் பிரச்சனைகள் ஏற்படுகிறதோ, அதேப் போன்று நாய்க்கும் உடலில் பிரச்சனைகள் ஏற்படும். அந்த பிரச்சனைகளை அதனால் சொல்ல முடியாது. ஆகவே அதனைப் புரிந்து கொண்டு, மனிதர்களுக்கு வயதானால் என்னவெல்லாம் செய்கிறோமோ, அதேப் போன்று அதற்கும் செய்ய வேண்டும்.
இதுப்போன்று வேறு படிக்க: செல்லப் பிராணிகளிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய 15 விஷயங்கள்!!!
சரி, இப்போது வீட்டில் செல்லமாக வளர்த்து வந்த நாய்க்கு வயதாகிவிட்டால் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.

டயட்
வயதான நாயின் டயட்டை மாற்ற வேண்டும். பொதுவாக வயதாகிவிட்டால், செரிமான மண்டலத்தின் செயல்பாடு குறைவாக இருப்பதால், நாய்க்கு எளிதில் செரிமானமாகக்கூடிய உணவுப் பொருட்களை கொடுக்க வேண்டும். குறிப்பாக புரோட்டீன் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் இருக்குமாறான உணவுப் பொருட்களைக் கொடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி, நாயின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும், செரிமான மண்டலத்தை சீராக செயல்பட வைக்கவும், வைட்டமின் ஈ, பீட்டா-கரோட்டீன் மற்றும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் நிறைந்த உணவுப் பொருட்களையும் கொடுக்க வேண்டும்.

கால்நடை மருத்துவரிடம் செல்லவும்
செல்ல நாயை கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் சென்று, வருடத்திற்கு இரண்டு முறையாவது இரத்த பரிசோதனை செய்து, அதன் ஆரோக்கியத்தை பரிசோதித்துப் பார்க்க வேண்டும். இதனால் உங்கள் வயதான நாய்க்கு உள்ள உடல்நல பிரச்சனைகளை தெரிந்து கொள்ளலாம்.

விளையாட்டுக்கள்
நாய்களுக்கு வயதாக வயதாக, அதன் சுறுசுறுப்பு குறைந்து, எப்போதும் சோர்வுடன் இருக்கும். எனவே அப்போது உங்கள் நாயை வெறும் வாக்கிங் மட்டும் அழைத்துச் செல்லாமல், அதனை புதிய புதிய விளையாட்டுக்களிலும் ஈடுபடுத்த வேண்டும். இதனால் உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, அதன் மனமும் சந்தோஷமாக இருக்கும்.

எடையை பரிசோதிக்கவும்
நாய்கள் வயதாகும் போது உடல் பருமனால் அவஸ்தைப்படும். இதனால் நாயின் கால்களில் வலி ஏற்பட்டு மிகுந்த அவஸ்தைக்கு உள்ளாகி, நடக்கவே சிரமப்பட்டு, எப்போதும் சோர்வுடன் உட்கார்ந்திருக்கும். அப்படியிருந்தால் அவ்வப்போது அதன் உடல் எடையை சோதித்து பார்த்து, அதனை போதிய உடற்பயிற்சியில் ஈடுபடுத்தி, அதன் உடல் எடையை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளுங்கள்.

நடக்கும் விதம்
நாய்களுக்கு வயதாகும் போது ஒன்று மிகவும் அமைதியாக இருக்கும் அல்லது எதிலும் மிகவும் ஆர்வத்துடன் இருக்கும். எனவே அதனைப் புரிந்து கொண்டு, அதனை சந்தோஷமாகவும், அது வசதியாக உணரும் வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்.



Click it and Unblock the Notifications