For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அச்சச்சோ! என்னோட நாய்க்கு காயம் பட்டிடுச்சே... என்ன செய்யலாம்?

By Boopathi Lakshmanan
|

மனிதனின் சொல் படி நடந்து மனிதனின் நண்பனாக வீடுகளில் வளர்க்கப்பட்ட முதன்மையான விலங்குகளில் ஒன்று தான் நாய். நன்றியுள்ள நாயை விருமபாதவர்கள் யாரும் இருப்பதில்லை. இந்த நாய்களை வளர்ப்பு நாயாக வைத்திருக்கா விட்டாலும், பழக்கத்தின் அடிப்படையில் பாசத்தைப் பொழகின்றன. ஆனால் நாய்களுக்கு காயங்கள் ஏற்பட்டு அடிபடுவது அடிக்கடி நடக்கும் விஷயமாகும். அவ்வாறு காயம் பட்ட நாயை கனிவுடன் கவனிக்க வேண்டியது அவசியமாகும்.

விபத்தாலோ, வேறு ஒரு நாயுடனனான சண்டையிலோ அல்லது நோய்த் தொற்றாகவோ கூட உங்களுடைய செல்ல நாய்க்கு காயங்கள் ஏற்படலாம். இந்த சூழல்களில் எப்படி அந்த நாய்களுக்கு உதவி செய்து குணப்படுத்தலாம் என்ற விஷயம் உங்களுக்குத் தெரிந்திருக்காது. நீங்கள் சொந்தமாக நாய் வளர்ப்பவராக இருந்தால், அவற்றிற்கான முதலுதவிகளை செய்வது எப்படி என்றும், அதற்காக தயாராக இருக்க வேண்டியதும் அவசியமாகும்.

Take Care Of Injured Dog: Guide

நாய்களுக்கு ஏற்படும் காயங்களை குணப்படுத்துவதற்காகவே பிரத்யோகமான சிகிச்சைகள் உள்ளன. இதற்கான படிப்படியான வழிமுறைகளைப் பற்றி பின்வரும் பகுதிகளில் பார்ப்போம்.

அணுகுமுறை

ஒரு நாய் காயம் பட்டிருந்தால் அது பயத்துடனும், நடுக்கத்துடனும் இருக்கும். வலி மற்றும் காயத்தால் இந்த பயம் நாய்களுக்கு இருக்கும். இந்த சூழலில் நாயை நீங்கள் நெருங்கிச் சென்றால் அது பயத்தின் காரணமாக உங்களை கோபமாக கடிக்கவோ அல்லது வேகமாக வேறெங்காவது ஓடி விடவோ செய்யும். இந்த காரணத்தை மனதில் கொண்டு, காயம்பட்ட நாய்களை மென்மையாகவும், அமைதியாகவும் அணுக வேண்டும். உங்களிடம் பாதுகாப்பாக இருப்பதை நாய் உணருமாறு செய்யுங்கள். இதுதான் காயம் பட்டிருக்கும் நாய்களுக்கு சிசிச்சை செய்ய எடுக்க வேண்டிய முதல் முயற்சியாகும்.

கவனித்தல்

நீங்கள் நாயை நெருங்கியவுடன் உடனடியாக நாயையோ அல்லது காயத்தையோ தொட வேண்டாம். நாயின் முகபாவங்கள் மற்றும் நடமாட்டங்களை கவனித்த பின்னர் அடுத்த கட்டத்திற்கு செல்லலாம். நாய் கத்திக் கொண்டிருந்தாலோ அல்லது குரைத்துக் கொண்டிருந்தாலோ அதைத் தொட வேண்டாம். ஏனெனில், அந்த சூழலில் நாயை தொட்டால் பயத்தின் காரணமாக உங்களை கடித்து விடும். மேலும், காயத்தின் தன்மைய கவனமாக பாருங்கள். காயத்தின் ஆழம் மற்றும் தீவிரத்தன்மையை தான் முதலில் கவனிக்க வேண்டும்.

நாயை கட்டுங்கள்

அடுத்ததாக செய்ய வேண்டியது நாயை ஒரு வேலியிலோ அல்லது மரத்திலோ கட்டி வைப்பது. இதன் மூலம் உங்களுகு பாதுகாப்பும், நாய்க்கு அமைதியும் கிடைக்கும். ஒரு கயிறைக் கொண்டோ அல்லது செயின் கொண்டோ நீங்கள் நாயைக் கட்டலாம். இந்த படிநிலையை செய்யும் முன்னர் நாயை தொட வேண்டாம். காயத்தை தொடும் போதோ அல்லது பரிசீலிக்கும் போது அதிகமான வலி ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இதன் மூலம் துணுக்குற்ற நாய் உங்களை கடிக்கவோ அல்லது ஓடிப் போய் விடவோ செய்யும். இது போன்ற சூழல்களைத் தவிர்க்க நாயை முதலில் கட்டி வைக்கவும்.

முதலுதவி

இப்பொழுது நாய் மிகவும் அமைதியாகவும் மற்றும் நட்புடனம் இருக்கும். அது அமைதியாக படுத்திருக்கும் வேளைகளில் உங்களால் காயத்தை பரிசீலிக்க முடியும். ஒரு பருத்தி துணியில் ஹைட்ரஜன் பேராக்ஸைடை போட்டு, காயத்தை கவனமாக சுத்தம் செய்யுங்கள். இவ்வாறு செய்யும் போது நாயை இறுக்கமாக பிடித்துக் கொள்ளுங்கள். இந்த படிநிலையை செய்யும் போது வேறு யாருடைய உதவியையும் கோரிப் பெறலாம். நீங்கள் ஏதாவதொரு ஆன்டிசெப்டிக் மருந்துகளையும் கூட பயன்படுத்தி காயத்தை குணப்படுத்தலாம்.

பேண்ட் எய்ட்

காயத்தை சுத்தம் செய்த பின்னர் அதன் ஆழம் மற்றும் தீவிரம் என்ன என்று உங்களுக்குத் தெரிந்து விடும். அது மிகவும் ஆழமாக இருப்பதாக தோன்றினால் கால்நடை மருத்துவரை அணுகவும். ஒரு ட்ரஸ்ஸிங் பேடையோ அல்லது பருத்தி துணியை கொண்டோ காயத்தை மூடி வைக்க வேண்டும். காயத்தை மூடி வைப்பதன் மூலமாக மட்டுமே அதில் மேலும் தொற்றுகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும்.

மேற்கண்டவை தான் உங்களுடைய நாய்க்கு ஏற்படும் எந்த வகையான காயத்தையும் குணப்படுத்துவதற்காக அணுக வேண்டிய புத்திசாலித்தனமான வழிமுறைகளாகும். ஆனால், போதிய அனுபவங்கள் இல்லாமல் இந்த வழிமுறைகளை தெரு நாய்களிடம் முயற்சிக்க வேண்டாம்.

English summary

Take Care Of Injured Dog: Guide

There are specific tips and steps to treat an injury, especially for dogs. The step wise guidelines to help an injured dog are as follows:
Story first published: Monday, January 6, 2014, 19:45 [IST]
Desktop Bottom Promotion