For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாய்களுக்கு பச்சையான உணவுகள் கொடுப்பது ஆரோக்கியமானதா...?

By Ashok CR
|

நாய் என்பது உங்களின் செல்லப்பிராணியாக இருக்கலாம். அதனை சிறந்த முறையில் பராமரிக்க நீங்கள் நினைக்கலாம். அதனால் அதற்கு ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே நீங்கள் கொடுப்பீர்கள். பற்றுள்ள உணவுகளை மனிதர்களாகிய நாம் விரும்பி உண்ணுவதை போல் தான் நாய்களும். புகழ் பெற்ற உணவுகள் வரும், போகும். பதனிடாத பச்சை உணவுகள் நாய்களுக்கு நல்லது என்று சிலர் கூறுகின்றனர்; இல்லை என்று சிலர் மறுக்கின்றனர்.

பிராணிகளுக்கான மருத்துவர்கள் பதனிடாத பச்சை உணவுகளை தான் நாய்களுக்கு பரிந்துரைக்கின்றனர். அவ்வகை உணவுகள் நாய்களை ஆரோக்கியமாக வைக்கும் என்றும் நம்புகின்றனர். சரும கோளாறு, கீல்வாதம் போன்ற பல விதமான நோய்களில் இருந்து பச்சை இறைச்சி நாய்களை பாதுகாக்கும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். அவர்களின் பல் பிரச்சனைகளும் கூட பறந்தோடுமாம்.

ஆண்களுக்கு ஏற்ற சுறுசுறுப்பான சிறந்த 10 நாய் இனங்கள்!!!

இருப்பினும் இதன் மீது ஒரு மாற்றுக் கருத்தும் நிலவி வருகிறது. பதனிடாத பச்சை உணவுகளை நாய்களுக்கு கொடுத்தால், பல தீவிர நோய்களுக்கு அது ஆளாகும் என்று கூறுகின்றனர். இப்போது இது உங்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தலாம். அதனால் உங்கள் நாய்க்கு கொடுக்க வேண்டிய சரியான உணவு எது என்பதை பற்றிய கவலை குடி கொண்டிருக்கும். உங்களுக்கு மிகவும் குழப்பம் ஏற்பட்டால், அது ஆரோக்கியமா இல்லையா என்பதை பற்றிய ஆய்வு தான் இது.

Raw Food For Dogs: Is It Healthy?

உங்கள் நாயை நீங்கள் விரும்புகிறீர்கள் என்று எங்களுக்கு தெரியும். அதன் மீது மிகுந்த அக்கறையுடன் இருக்கிறீர்கள் என்றும் எங்களுக்கு தெரியும். அது ஆரோக்கியமாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்திடவும், அதனை சிறப்பாக பராமரித்திடவும் உங்களுக்காக சில டிப்ஸ், இதோ. மேலும் படியுங்கள், உங்களுக்கு சுவாரசியத்தை அது அளித்திடும்.

பதனிடாத பச்சை உணவுகளில் இருக்கும் நன்மைகள்:

நாய்களுக்கு கொடுக்கப்படும் பதனிடாத பச்சை உணவுகளில் சில நன்மைகள் இருக்கிறது. சரி அவ்வகை உணவுகள நாய்க்கு நல்லதா என்ற ஆய்வை தொடங்குவோம்.

* பதனிடாத பச்சை உணவுகள், நாய்களுக்கு செரிமானத்தை மேம்படுத்தும். கையில் ஒரு துண்டு மாமிசத்தை வைத்துக் கொண்டு, அவ்வகை உணவுகள் நாய்க்கு நல்லதா என்று நீங்கள் நினைத்தால், யோசிக்காதீர்கள். அதனை நாய்க்கு கொடுங்கள். பதனிடாத பச்சை உணவுகள் அதன் செரிமானத்திற்கு பெரிதும் உதவப் போகிறது. நீங்கள் நினைப்பதை விட அது ஆரோக்கியமாக இருக்க போகிறது.

* நாய்க்கு உணவளிக்கும் போது உங்கள் மனதில் ஓடும் முதல் கேள்வி - "பதனிடாத பச்சை உணவுகள் நாய்க்கு நல்லதா" என்பதே. அது இயற்கை தான். ஆனால் புரிந்து கொள்ளுங்கள். பதனிடாத பச்சை உணவுகள் நாயின் ஆற்றல் திறனை அதிகரிக்கும். உங்கள் செல்லப்பிராணி எப்போதும் சுறுசுறுப்புடன் இருக்க வேண்டாமா? அது உங்களுடன் விளையாட வேண்டாமா? காலையில், செய்தித்தாளை தினமும் உங்களுக்கு எடுத்து தர வேண்டாமா? இதையெல்லாம் அது செய்ய வேம்டும் என்றால், இது தான் ரகசியம். அடுத்த முறை பதனிடாத பச்சை உணவுகளை நாய்க்கு கொடுக்கும் போது ரொம்பவும் யோசிக்காதீர்கள்.

* சில பேருக்கு பதனிடாத பச்சை உணவுகளை நாய்க்கு கொடுப்பது நல்லதா என்ற சந்தேகம் எழும். ஆனால் அதன் நன்மைகளை முழுவதுமாக அறிந்த பிறகு, அவர்கள் சமாதானம் அடைவார்கள். பதனிடாத பச்சை உணவுகள் பல வித உடல்நல நன்மைகளை தருவதால், நாய்க்கு அது அவசியமானதாக விளங்குகிறது. பதனிடாத பச்சை உணவுகள் நாய்க்கு நன்மையா என்று நீங்கள் யோசித்தால், ஆம் என்பது தான் பதிலாக இருக்கும். மேலும் அது நாய்க்கு நல்ல சுவாசத்தை உண்டாக்கும்.

* பதனிடாத பச்சை உணவுகள் நாய்க்கு நல்லதா? இந்த ஒரு கேள்வி எப்போதும் உங்களை குடைந்து கொண்டே இருக்கும். அதுவும் நாய்க்கு உணவளிக்கும் போது கண்டிப்பாக உங்கள் மனதை குத்திக் கொண்டே இருக்கும். நம்புங்கள்! பதனிடாத பச்சை உணவுகள் நாய்க்கு மிகவும் நல்லது. அதனுடைய பல் பிரச்சனைகளை தீர்த்து ஆரோக்கியமான பற்கள் மற்றும் ஈறுகளை பெற பதனிடாத பச்சை உணவுகள் உதவும்.

* இன்னமும் பதனிடாத பச்சை உணவுகளின் மீது சந்தேகம் இருந்தால், அலர்ஜி இல்லாத அதன் ஆரோக்கியமான சருமத்தை பார்க்கும் போது உங்கள் சந்தேகம் நீங்கும். அதற்கு ஆரோக்கியமான செரிமான திசுக்களும் கிட்டும். மேலும் எடை மீது சரியான கட்டுப்பாடும் இருக்கும். சுறுசுறுப்பும் இருக்கும். அதன் நன்மையை நிரூபிக்க இதை விட வேறு என்ன தகவல்கள் வேண்டும்?

English summary

Raw Food For Dogs: Is It Healthy?

Some say feeding dogs with raw food can lead to severe diseases. Now, this may cause you some confusion and you would be worried about the right food to feed your dog. If you are too confused about raw foods, then here is an analysis of whether it is healthy or not.
Desktop Bottom Promotion