Latest Updates
-
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க
உங்கள் செல்ல நாய் நோய்வாய்பட்டிருந்தால் வெளிப்படும் அறிகுறிகள்!!!
மனிதர்களைப் போலவே செல்லப் பிராணிகளுக்கும் நோய்களின் தாக்குதல் இருக்கும். அது காலநிலை மாற்றங்களாகவோ, உணவுப் பழக்கங்களாலோ நோய்வாய் படக்கூடும். அப்படி உங்கள் வீட்டில் வளர்த்து வரும் செல்ல நாய் நோயினால் பாதிக்கப்பட்டிருந்தால், ஒருசில அறிகுறிகள் தென்படும் அதைக் கொண்டு, அதற்கு உடல்நிலை சரியில்லை என்பதை தெரிந்து கொள்ளலாம்.
மேலும் நிபுணர்கள், நாய்க்கு உடல்நிலை சரியில்லாவிட்டால், அதன் மூக்கானது வறண்டு காணப்படும் என்று சொல்கிறார்கள். இதுப்போன்று நிறைய அறிகுறிகள் நாய்களுக்கு உடல்நிலை சரியில்லாத போது தென்படும். இப்போது அந்த அறிகுறிகள் என்னவென்று பார்ப்போம். அதைப் படித்து உங்கள் நாயிடம் அந்த அறிகுறிகள் தெரிந்தால், உடனே போதிய சிகிச்சையை அளியுங்கள்.

தோற்றம்
நாய்க்கு உடல்நிலை சரியில்லாவிட்டால், அதன் கண்கள் சிவப்பாக வீங்கி, மூக்கானது வறட்சியடைந்து, வித்தியாசமான துர்நாற்றத்துடன் இருக்கும். இது தான் முதன்மையான அறிகுறியாக இருக்கும்.

நடத்தை
உங்களின் செல்ல நாய் திடீரென்று இருமவோ, தும்மவோ, சரியாக சாப்பிடாமலோ, எப்போதும் சோர்வுடன் படுத்தவாறே இருந்தால், அதனை உடனே கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.

ஈறுகள்
நாய்களின் ஈறுகளைக் கொண்டும், அது ஆரோக்கியமாக உள்ளதா இல்லையா என்பதை தெரிந்து கொள்ளலாம். அதிலும் அது பிங்க் நிறத்தில் இருந்தால் எவ்வித பிரச்சனையும் இல்லை. அதுவே மஞ்சள், நீலம், வெள்ளை அல்லது கிரே நிறத்தில் இருந்தால், நோய்வாய் பட்டுள்ளது என்று அர்த்தம்.

நடுக்கம்
உங்கள் நாய் தூங்கும் போது, அமைதியாக தூங்காமல், அதன் உடலானது நடுக்கத்துடன் இருந்தால், அதற்கு ஏதோ வலி உள்ளது என்று அர்த்தம்.

சிறுநீர் பிரச்சனை
அளவுக்கு அதிகமாக சிறுநீர் அல்லது மலம் கழித்தால், நாய்க்கு சிறுநீர்ப்பை அல்லது சிறுநீரக பாதையில் தொற்றுகள் ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம்.



Click it and Unblock the Notifications