Latest Updates
-
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க
அனைவரையும் கவரும் அழகான 10 நாய்க்குட்டிகள்!!!
செல்லப்பிராணிகள் வளர்த்தாலே ஒருவித சந்தோஷமும், குதூகலமும் மனதில் நிலவும். சொல்லப்போனால், நாய்களை குட்டியாக இருக்கும் போது பார்த்தால், மிகவும் அழகாகவும், பார்த்தாலே அதைத் தூக்கிக் கொஞ்ச வேண்டும் என்ற எண்ணமும் மனதில் தோன்றும். மேலும் நாய்க்குட்டிகளும் சிறு குழந்தை போன்றதே. அத்தகைய நாய்க்குட்டிகளுக்கு பெரும்பாலானோர் வைக்கும் பெயர் என்னவென்று பார்த்தால், அது "பப்பி" தான்.
இத்தகைய நாய்கள் எப்போதுமே மிகவும் நன்றியுள்ளது. அதிலும் அதனை குட்டியாக இருக்கும் போதே வளர்த்து வந்தால், அதன் பிரிவைத் தாங்கவே முடியாது. ஏனெனில் அந்த அளவில் நாய்க்குட்டிகள் அன்பு வைத்து, நம்முடன் பழகிக் கொள்ளும். மேலும் சில நாய்களை சற்று பெரிதானப் பின்னர் வாங்கினால், அது நம்முடன் பழகுவதற்கு நீண்ட நாட்கள் ஆகும். ஆனால், சிறு வயதிலிருந்தே வளர்த்து வந்தால், அவை எப்போதுமே சாந்தமாக, ஒரு நண்பன் போன்று பழகும்.
சரி, இப்போது நாய்க்குட்டிகளில் மிகவும் அழகாக இருக்கும் சில குட்டி நாய்களைப் பார்ப்போமா!!!

லாப்ரடோர் நாய்க்குட்டிகள்
இந்த வகையான நாய்க்குட்டிகள் நன்கு கொழுகொழுவென்று இருப்பதோடு, நன்கு சுறுசுறுப்புடனும் இருப்பதால், எப்போதும் இதன் மேல் ஒரு கண்ணை வைத்துக் கொள்ள வேண்டும்.

மால்டிஸ் நாய்க்குட்டிகள்
இந்த நாய்க்குட்டிகள் ஒரு பொம்மை போன்று காணப்படும். ஏனெனில் இவை மிகச் சிறியதாக இருப்பதோடு, அதன் உடலில் அதிகப்படியான உரோமங்கள் இருக்கும். சொல்லப்போனால் இது அனைவரது மனதில் இருக்கும் ஒரு கற்பனையான அழகான நாய்க்குட்டி என்று சொல்லலாம்.

டச்ஹவுண்ட் நாய்க்குட்டிகள்
இந்த டச்ஹவுண்ட் நாய்க்குட்டிகள் ஆச்சரியமான வகையில் இருக்கும். ஏனெனில் இதன் உடல் நீளமாகவும், கால்கள் குட்டையாகவும் அழகாக சிறிய அளவில் காணப்படும்.

பக் நாய்க்குட்டிகள்
இந்த நாய்க்குட்டிகளின் முகம் பார்ப்பதற்கு தான் சுருங்கிய மெத்தை போன்று இருந்தாலும், இதனை சிறு வயதில் பார்க்கும் போது ஆசையானது மனதில் இருந்து துள்ளிக் கொண்டு வெளிவரும்.

பீகள் நாய்க்குட்டிகள்
பீகள் ஒரு நடத்தரளவிலான ஒரு நாய்க்குட்டி. இந்த நாய்க்குட்டி கொழுப்பின்றி, அதிமான அளவில் மென் உரோமங்களுடன் காணப்படும். மேலும் இதன் வியத்தகு வெளிபாடுகள், இதனை இன்னும் அழகாக வெளிப்படுத்தும்.

கோல்டன் ரெட்ரீவர் நாய்க்குட்டிகள்
நாய் இனங்களுள் கோல்டன் ரெட்ரீவர் நாய்க்குட்டிகள் மிகவும் க்யூட்டாக இருக்கும். இதன் அழகும் இதன் உரோமம் தான்.

புல்டாக் நாய்க்குட்டிகள்
பெரியதாக இருக்கும் புல்டாக் நாய்கள் வல்லமைமிக்கதாகவும், பார்ப்பதற்கு பயமாகமூட்டக்கூடிய வகையிலும் இருக்கும். ஆனால் புல்டாக் நாய்க்குட்டிகள் மிகவும் சுட்டித்தனமாக இருக்கும். மேலும் இதன் தலை, உடலை விட பெரியதாக இருக்கும்.

பூடில் நாய்க்குட்டிகள்
பூடில் நாய்களும் பொம்மை போன்று அதிகமான அளவில் ரோமங்களுடன் இருக்கும். ஆனால் பெரிய பூடிலை விட, பூடில் குட்டிகள் மிகவும் க்யூட்டாக இருக்கும்.

சமாய்டு நாய்க்குட்டிகள்
சமாய்டு நாய்க்குட்டிகளில் வெள்ளை நிற குட்டிகள் பார்ப்பதற்கு ஆச்சரியமூட்டும் வகையில் இருக்கும். ஏனெனில் இதன் உடல் முழுவதும் ரோமங்களுடன், பார்ப்பதற்கு, பொம்மை போன்று இருக்கும்.

கார்கி நாய்க்குட்டிகள்
கார்கி நாய்க்குட்டிகள் ஓநாய்களின் காதுகள் போன்றும், உடல் முழுவதும் மிதமான ரோமங்களும் இருக்கும். இது நன்கு விளையாட்டுத்தனமான இயல்புகளைக் கொண்டதால், அனைவரரையும் ஈர்ப்பதோடு, குழந்தைகளுடன் விளையாடுவதற்கு ஏற்ற நாய்க்குட்டிகளுள் ஒன்றாகவும் உள்ளது.



Click it and Unblock the Notifications