For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தீபாவளியின் போது செல்லப் பிராணிகளை பாதுகாக்க சில டிப்ஸ்....

By Super
|

நம்மை பொறுத்தவரை தீபாவளி என்பது மிகவும் பிடித்த பண்டிகையாக விளங்கும். ஆனால் செல்லப் பிராணிகளை பொறுத்த வரை, அது அவர்களுக்கு ஒரு சித்திரவதை ஏற்படுத்தும் பண்டிகையாகும். தீபாவளி என்பது ஒரு இந்து பண்டிகை என அனைவருக்கும் தெரியும். அதனை உலகத்தில் உள்ள பல மக்களும் புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து மகிழ்வார்கள். ஆனால் பறவைகளுக்கும், மிருகங்களுக்கும் அப்படி இருப்பதில்லை. அது அவர்களுக்கு மரண பயத்தை உண்டாக்கும். வீட்டில் அதிகமாக வளர்க்கப்படும் செல்லப் பிராணிகள் என்றால் அது நாயும் பூனையும் தான். தீபாவளி பண்டிகையின்ன் போது, அவைகள் வீட்டில் தூக்கமில்லா இரவுகளையே சந்திக்க வேண்டியிருக்கும்.

இந்த பயத்துடன் நின்று விடாமல், தீபாவளியின் போது வெடிக்கப்படும் ராக்கெட் மற்றும் வான வெடிகளால் அவைகள் பாதிக்கப்படுவதும் உண்டு. அவைகளின் பயத்துடன் விளையாட விரும்பும் பல இளைஞர்களுக்கு இந்த செல்லப் பிராணிகள் தான் பலியாடாகி விடுகின்றனர். பல இளைஞர்கள் மனித தன்மையே இல்லாமல், இவ்வகை பிராணிகளின் வாலில் வெடிகளை கட்டி விட்டு வெடிக்க விடுவார்கள். அதனால் ஏற்படும் பயத்துடன் அவைகள் ஓடுவதை பார்த்து கேலி கூத்து செய்வது, அவர்களின் வாடிக்கையாக இருக்கும். இப்படி கட்டுவதால் இந்த பிராணிகளுக்கு காயங்களும் ஏற்படுவதுண்டு.

தீபாவளின் போது வெடிக்கப்படும் பட்டாசுகளில் இருந்து அதிக சப்தம் வருவது அனைவருக்கும் தெரிந்ததே. இது துப்பாக்கி சத்தம் மற்றும் நம் வீட்டிற்கு அருகில் பறக்கும் விமான சத்தத்தை விட அதிக சத்தத்தை எழுப்பும். இந்த சத்தத்தினால் நாய் மற்றும் பூனை போன்ற பிராணிகளுக்கு இது கொண்டாட்டமாக இருப்பதில்லை. இவ்வகை வெடிகள் அவைகளுக்கு பயம், பீதி மற்றும் குழப்பங்களை ஏற்படுத்திவிடும். சாதாரண வெடி சத்தம் நாய்களுக்கு குண்டு வெடிப்பதை போல இருக்கும் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர். அதற்கு காரணம் அவர்களின் துல்லியமான கேட்கும் சக்தி. அதனால் அவைகளுக்கு சத்தம் என்றாலே பயம் ஏற்படும் நோய் உருவாகலாம். மேலும் வெடிகளில் இருந்து வரும் புகையை சுவாசிப்பதால், வேறு சில உடல்நல கோளாறுகளும் ஏற்படலாம்.

இந்த தீபாவளியின் போது உங்கள் செல்லப் பிராணிகளின் மீது அதிக அன்பையும், அக்கறையையும் காட்ட உங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. உங்களுக்காக நாங்கள் கூறும் சிலவற்றை பின்பற்றி, உங்கள் செல்லப் பிராணிகளை கவனித்துக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
விளக்கு அலங்காரப் பொருட்கள்

விளக்கு அலங்காரப் பொருட்கள்

விளக்குடன் கூடிய அலங்காரப் பொருட்களை தொங்க விடுவது வீட்டிற்கு கூடுதல் அழகையும் ஈர்ப்பையும் சேர்க்கும்; முக்கியமாக தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில், வீட்டு செல்லப் பிராணிகளையும் இவ்வகை பொருட்கள் அதிகமாக ஈர்க்கும். அதனால் அவைகளை அந்த அலங்காரப் பொருட்களுக்கு அருகில் நெருங்க விடாதீர்கள். இல்லையென்றால் தாவி குதித்து, அதனை கீழே இழுத்து விடும். இல்லையென்றால் அவைகளை எட்டாத தூரத்தில் கட்டி விடவும்.

ரங்கோலி

ரங்கோலி

தீபாவளியின் போது ஒவ்வொரு வீடும் ரங்கோலி கோலத்தால் அலங்கரிக்கப்படும். உங்கள் ரங்கோலி அலங்கோலமாகி விடாமல் பாதுகாக்க, அதற்கு அருகில் உங்கள் செல்லப் பிராணிகளை நெருங்கவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பொதுவாக நாய்கள் ரங்கோலியை முகர்ந்து பார்க்க பார்க்கும். அதனால் அதனை கோலத்தில் இருந்து தள்ளியே வைத்திருங்கள்.

விளக்குகள்

விளக்குகள்

தீபாவளியின் போது வீட்டிற்கு கூடுதலாக அழகு சேர்வது விளக்குகளாலேயே. ஆனால் வீட்டில் செல்லப் பிராணிகள் இருந்தால், இந்த விளக்குகள் நீண்ட நேரத்திற்கு தாக்கு பிடிக்கப் போவதில்லை. அதனால் செல்லப் பிராணிகளை விளக்குகளுக்கு அருகில் அனுமத்திக்காதீர்கள். அப்படி செய்தால் அவைகளுக்கும் கூட தீக்காயங்கள் ஏற்படலாம். அதனால் விளக்குகளை பிராணிகளிடம் இருந்து தள்ளியே ஏற்றுங்கள்.

அலங்கார மின் விளக்குகள்

அலங்கார மின் விளக்குகள்

அலங்கார விளக்குகள் என்பது தீபாவளியின் போது பலரது வீட்டில் எப்போதுமே எரிந்து கொண்டிருக்கும் முக்கியமான அலங்காரமாகும். உங்கள் செல்லப் பிராணிகள் பாதுகாப்பாக இருக்க, அவைகளை அதனருகில் செல்லவிடாதீர்கள். அப்படி சென்றால் அவைகளுக்கு கரண்ட் ஷாக் கூட ஏற்படலாம்.

சமையலறை

சமையலறை

பொதுவாக செல்லப் பிராணிகளுக்கு சமையலறை என்றால் பிரியம் அதிகமாகத் தான் இருக்கும். அவைகளை தீபாவளியின் போது பாதுகாப்பாக வைத்திருக்க, சமையலறை மேடைகளில் வைக்கும் பொருட்களில் கவனம் தேவை. அங்கே வைக்கும் அனைத்து பலகாரங்களும், உணவுகளும், வீட்டு பிராணிகளுக்கு எட்டாத தூரத்தில் இருக்க வேண்டும்.

பாதுகாப்பு

பாதுகாப்பு

செல்லப் பிராணிகளுக்கான பாதுகாப்பு தான் முதலில் அவசியம். பட்டாசுகள் வாங்கும் போது, அதனை அவைகளுக்கு எட்டாத உயரத்தில் வைத்திடுங்கள். பொதுவாக ஆர்வம் அதிகமுள்ள பூனைகளும், நாய்களும் உங்கள் பட்டாசு பெட்டியில் என்ன இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள விருப்பப்படும். அதனால் பட்டாசுகளை உயரத்தில் வைத்தால், அதனை அவைகள் விழுங்காமல் பாதுகாக்கலாம்.

பூட்டி வைப்பது

பூட்டி வைப்பது

தீபாவளியின் போது அவைகளை பாதுகாப்பாக வைக்க, அவைகளை வீட்டிற்குள் பூட்டி வைப்பது மற்றொரு வழியாகும். அதிலும் பட்டாசு சத்தம் அதிகம் கேட்காத ஒரு அறைக்குள் அவைகளை விட்டு விடுங்கள். அப்படி செய்தால் தீபாவளியின் போது அவைகள் பாதுகாப்பாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Keep Pets Safe During Diwali

It is time you show a little more love and care in taking care of your pets the proper way. Here are some ways in which you can look after your pet during Diwali.
Desktop Bottom Promotion