Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
குழந்தைகளுக்கு பிடித்தவாறு இருக்கும் சில மொசுமொசு நாய்கள்!!!
நாய்களில் பல வெரைட்டிகள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானோருக்கு பிடித்தது நன்கு மொசுமொசுவென்று இருக்கும் நாய்கள் தான். குறிப்பாக இந்த மாதிரியான நாய்கள் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். ஏனெனில் இந்த மாதிரியான மொசுமொசு நாய்களுக்கு ரோமமானது அதிகமாக இருக்கும். ஆகவே இவைகள் பார்ப்பதற்கு பொம்மை நாய்க் குட்டி போன்று இருக்கும். ஆனால் சில நாய்கள் பார்ப்பதற்கு மிகவும் ஆக்கிரோஷமாகவும், கோபமாகவும் இருப்பது போன்று இருக்கும். ஏனென்றால், இதற்கு ரோமங்கள் மிகவும் குறைவு.
ரோமங்கள் அதிகம் உள்ள நாய்கள் நன்கு ஓடியாடி விளையாடும். அத்தகையவற்றில் கோல்டன் ரிட்ரைவர், ஆப்கன் ஹவுண்ட் மற்றும் லாசா ஆப்சோ போன்றவை மிகவும் பெரிய மொசுமொசு நாய்கள். மேலும் இத்தகைய மொசுமொசு நாய்களின் ரோமங்களைக் கொண்டு, அவற்றை பலவாறு அலங்கரிக்கலாம்.
எனவே நீங்கள் உங்கள் குழந்தைக்கு ஒரு நல்ல மொசுமொசு நாய்களை வாங்க வேண்டுமென்று நினைத்தால், உங்களுக்காக சில மொசுமொசு நாய்களை பட்டியலிட்டுள்ளோம். அதைப் பார்த்து வாங்கி மகிழுங்கள்.

கோல்டன் ரிட்ரைவர் (Golden Retriever)
இந்த நாய் ஒரு நல்ல விளையாட்டுத்தனமுடையது. இந்த நாயின் ரோமங்களை வெட்டாமல் இருந்தால், இது மிகவும் அழகாக மொசுமொசுவென்று இருக்கும்.

கோமண்டர் (Komondor)
இது ஒரு வகையான ஹங்கேரியன் ஷேபர்டு நாய். இந்த நாய்க்கு அதிகமான ரோமங்கள் இருப்பதோடு, அவை சுருண்டு இருக்கும். இதுவும் பார்ப்பதற்கு சூப்பராக இருக்கும்.

பூடில் (Poodle)
இந்த மொசுமொசு நாய் பொம்மை போன்று இருக்கும். இந்த நாய் சிறிய பெண் குழந்தைகளுக்கு நல்ல துணையாக இருக்கும். இது நன்கு விளையாடுவதோடு, வீட்டில் எந்த ஒரு பிரச்சனையையும் கொடுக்காது.

பூலி (Puli)
இது பார்ப்பதற்கு செம காமெடியாக இருந்தாலும், இதுவும் வளர்ப்பதற்கு ஏற்ற ஒரு அழகான நாய் தான். ஆனால் என்ன, இதன் முகத்தை தேட வேண்டியிருக்கும்.

மால்தீஸ் (Maltese)
இது ஒரு சிறிய மொசுமொசுவென இருக்கும் குட்டி நாய். இது வீட்டில் வளர்க்கக்கூடிய ஒரு சிறந்த நாய். இந்த நாயின் மீது சிறந்த அன்பை காட்டினால், உயிரையே கொடுக்கும் அளவு அது பாசம் வைக்கும்.

ஸ்க்னாசர் (Schnauzer)
இந்த நாய் இனம் பார்ப்பதற்கு ஒரு கார்ட்டூன் கதாப்பாத்திரத்தில் இருப்பது போல் காணப்படும். ஏனெனில் இந்த நாயின் ரோமங்களானது முகம், வயிறு மற்றும் கால்களில் இருக்கும். இதனால் இந்த நாய் வித்தியாசமான தோற்றத்தைத் தருகிறது.

லாசா ஆப்சோ (Lhasa Apso)
இந்த அழகான நாய் திபெத்தில் இருந்து வந்தது. இது மிகவும் சோம்பேறித்தனமான மற்றும் வீட்டிற்கு தொல்லை தராமல் இருக்கும். மேலும் இந்த நாயின் ரோமங்கள் மிகவும் மென்மையானவையாகவும், நீளமாகவும் இருக்கும்.

ஆப்கன் ஹவுண்ட் (Afghan Hound)
இந்த நாய் மிகவும் ஒல்லியாகவும், உயரமாகவும் இருப்பதோடு, அழகான பட்டுப்போன்ற ரோமங்களைக் கொண்டது. இவை நன்கு வேகமாக ஓடக்கூடியவை மற்றும் விசுவாசமாக இருக்கக்கூடியவை.

பொமரேனியன் (Pomeranian)
இந்தியாவில் பொதுவாக காணப்படும் நாய் இனங்களில் ஒன்று தான் பொமரேனியன். இந்த நாய் பெரியவர்களுக்கும் சரி, குழந்தைகளுக்கும் சரி ஏற்றதாக இருக்கும். மேலும் இவை குழந்தைகளுடன் நன்கு விளையாடக்கூடியவை மற்றும் இதற்கு அதிகப்படியான பராமரிப்புக்களை அவசியம் என்பதில்லை.



Click it and Unblock the Notifications