Latest Updates
-
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது!
ஆண்களுக்கு ஏற்ற சுறுசுறுப்பான சிறந்த 10 நாய் இனங்கள்!!!
ஆண்கள் தங்களின் ஆளுமைத்திறனை வெளிப்படுத்துவதற்கு நாய்களை வளர்க்க விரும்புவார்கள். அதிலும் அவர்கள் சிறியதாக, மடியில் இருக்கும் வகையில் உள்ள நாய்களை வளர்ப்பது மிகவும் குறைவு. பெரும்பாலான ஆண்கள் ஆண்பாலுக்குரிய குணங்கள் கொண்ட நாய்களையே வளர்க்க விரும்புவார்கள். வேண்டுமெனில் வெளியே காலை அல்லது மாலையில் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது, பெண்கள் மிகவும் அழகான சிறியதாக இருக்கும் நாய்களையும், ஆண்கள் பெரியதாகவும், பயங்கரமாக இருக்கும் நாய்களையும் கொண்டு செல்வார்கள்.
அதுவும் பொதுவாக ஆண்களிடம் இருக்கும் நாய்களைப் பார்த்தால், பெரியதாகவும், புத்திசாலித்தனத்துடனும், ஆக்கிரோஷத்துடனும் மற்றும் நல்ல காவலாகவும் இருக்கும் நாய்கள் தான் இருக்கும். ஏனெனில் ஆண்கள் எங்கு சென்றாலும் தன்னுடன் இருக்கும் நாய் மிகவும் சுறுசுறுப்புடனும், புத்திசாலித்தனத்துடனும், உடற்பயிற்சி செய்யும் போது ஒரு நல்ல துணையாகவும், ஒரு நல்ல பாதுகாப்பாகவும் இருக்க வேண்டுமென்று தான் விரும்புவார்கள்.
அந்த வகையில் ஆண்களுக்கு ஏற்ற சில நாய் இனங்கள் இருக்கின்றன. அவை என்னவென்று கீழே பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, எந்த நாய் வாங்கலாம் என்று குழப்பத்தில் உள்ளவர்கள், இவற்றில் ஏதாவது ஒன்றை வாங்கி ஒரு புதிய நண்பனை அமைத்துக் கொள்ளுங்கள்.

ராட்வீலர்
ராட்வீலர் (Rottweiler) நாய் மிகவும் துணிச்சல் மிக்கது. இந்த வகையான நாய்களில் ஆண், பெண் இரண்டையும் வீட்டில் வளர்த்தால், அது வீட்டில் உள்ள ஆண்களின் உத்தரவுகளின் படியே நடக்கும்.

மாஸ்டிஃப்
மாஸ்டிஃப் (Mastiff) வகை நாய்கள் ஆண்களுக்கு ஏற்றது. இந்த நாய்களுக்கு சரியான பயிற்சி அளித்தால், அது மிகவும் விசுவாசமாகவும், நல்ல பாதுகாப்பையும் தரும். ஆனால் அதற்கு மோசமான பயிற்சி அளித்தால், அது வீட்டில் உள்ளோருக்கே மிகவும் ஆபத்தான விலங்காக இருக்கும்.

பாக்ஸர்
பாக்ஸர் (Boxer) நாய்கள் மிகவும் பெரியதாகவும், உக்கிரமான முகத்தோடும் இருக்கும். ஆனால் உண்மையில் அவை மிகவும் இனிமையான மற்றும் நட்புடன் பழகுபவை. குறிப்பாக, இந்த வகை நாய்கள் தனியாக வாழும் ஆண்களுக்கு சிறந்த நண்பன் போன்று இருக்கும்.

ஜெர்மன் ஷெப்பர்ட்
நாய்களிலேயே ஜெர்மன் ஷெப்பர்ட் (German Shepherd) மிகவும் புத்திசாலியான நாய். இந்த வகையான நாய், ஆண்களின் சிறந்த நண்பனாகவும் மற்றும் துணையாகவும் இருப்பதற்கு தகுதி வாய்ந்தது.

டாபர்மேன் பின்ஷர்
டாபர்மேன்னின் உயரம் மற்றும் அளவைப் பார்த்தாலே, அது எவ்வளவு வலிமை மிக்கது என்பது வெளிபடும். ஆனால் டாபர்மேன் பின்ஷர் (Doberman Pinscher) ஒரு கனகச்சிதமான நாய் என்பதால், இதற்கு நிறைய உடற்பயிற்சி தேவைப்படுகிறது. மேலும் இந்த நாய் ஆண்களுக்கு ஒரு நல்ல ஜாக்கிங் நண்பனாக இருக்கும்.

பிட்புல்
பிட்புல் (Pit bull) மிகவும் பெரிய அமெரிக்க நாய் இனத்தைச் சேர்ந்தது. பொதுவாக இவை மிகவும் வேகமாக நாய்களை தாக்கி, சண்டையிடக்கூடியவை. குறிப்பாக பக்கத்து வீட்டில் உள்ளோர் ஏதேனும் தொந்தரவு செய்தால், அவர்களை மிரட்டுவதற்கு நாய் வேண்டுமெனில், இந்த நாய் சரியானதாக இருக்கும்.

லாப்ரடர் ரெட்ரீவர்
இயல்பான லாப்ரடர் (Labrador Retriever) மிகவும் குழந்தைத்தனமாகவும், இனிமையாகவும் இருக்கும். ஆனால் இந்த வகை நாய்களில் ஒன்றான லாப்ரடர் ரெட்ரீவர் புத்திசாலியாகவும், உக்கிரத்தனமாகவும் இருக்கும். இதற்காக இது ஆபத்தானது என்று சொல்ல முடியாது. ஆனால் இதன் புத்திசாலித்தனத்தால், இது ஒரு சிறந்த துணையாக இருக்கும்.

கிரேஹவுண்ட்
கிரேஹவுண்ட் (Greyhound) எனப்படும் வேட்டை நாய் புத்திசாலியானது. பொதுவாக வீட்டில் நாயை விட்டுச் சென்றால், நாய் வீட்டையே இரண்டாக்கிவிடும். ஆனால் இந்த நாயை வீட்டில் விட்டு சென்றால், எதையும் கடிக்காமல், அமைதியாக இருக்கும்.

புல்டாக்
புல்டாக் (Bulldog) மிகவும் பெரிய நாய். இது மிகவும் வலிமை மிக்கது மற்றும் உளவுத்துறையில் இருப்பதற்கு ஏதுவான ஒரு நாய். இந்த வகையான நாய் ஒரு நல்ல வல்லமைமிக்க காவலையும், அதேசமயம் ஆண்களின் கும்பலில் ஒரு அங்கமாகவும் இருக்கக்கூடியது.

சைபீரியன் ஹஸ்கி
சைபீரியன் ஹஸ்கி (Siberian Husky) ஒரு மலை நாய். இந்த நாய்க்கு நிறைய ரோமங்கள் இருக்கும். இது மிகவும் வேகமாக ஓடக்கூடியது மற்றும் புத்திசாலியானது. அதிலும் குளிர்ச்சியான நாட்டில் வாழ்பவர்களுக்கு, இந்த நாய் ஏற்றதாக இருக்கும்.



Click it and Unblock the Notifications