Latest Updates
-
இந்திய ராணுவத்தில் எவ்வளவு பெண்கள் உள்ளார்கள்? எந்த நாட்டு இராணுவத்தில் அதிக பெண்கள் இருக்கிறார்கள் தெரியுமா? -
காலிஃபிளவரை இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
இந்தியாவின் பிரதமருக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
இட்லிக்கு இப்படி தக்காளி குழம்பு செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 02 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் பொன்னாகப் போகுதாம் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கப்போகுது! -
லன்ச்பாக்ஸ்-க்கு ஏற்ற மிளகு சாதமும், உருளைக்கிழங்கு ப்ரையும் - எப்படி செய்யணும் தெரியுமா? -
இந்தியாவின் மிகப்பெரிய விமான நிலையம் எது? அது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
தினமும் வீட்டில் கற்பூரத்துடன் பிரியாணி இலை சேர்த்து எரிங்க.. அப்புறம் நடக்குறத பாருங்க.. ஆச்சரியப்படுவீங்க.. -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த நெல்லை ஸ்டைல் கொத்சை ட்ரை பண்ணுங்க - அட்டகாசமா இருக்கும்
கங்கிராட்ஸ்! ஜிம்மி கர்ப்பமாயிருச்சு, புரோட்டின் உணவு கொடுங்க!

பெண் நாய்களுக்கு கர்ப்பகாலத்தில் நோய் தாக்குதல் எதுவும் இருக்கிறதா என்று முதலில் கால்நடை மருத்துவரிடம் பரிசோதனை செய்ய வேண்டும்
நாய்களின் கர்ப்ப காலத்தில் அவைகளுக்கு நார்ச்சத்துள்ள, புரதச் சத்து நிறைந்த உணவுகளை அளிக்கவேண்டும். கர்ப்பமாக இருக்கும் பெண் நாய்க்கு 6 வது வாரத்தில் இருந்து 20 சதவிகிதம் புரதம் அதிகமுள்ள உணவுகளை கொடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அப்பொழுதுதான் வயிற்றில் உள்ள குட்டிகள் ஆரோக்கியமாக இருக்கும். குட்டி ஈனும் வரை நாய்க்கு அளிக்கப்படும் உணவுகளை 25 சதவிகிதம் 50 சதவிகிதம் என அதிகப்படுத்தி கொடுக்கலாம்.
நாய்களுக்கு குட்டி ஈனும் பருவத்தில் ஊட்டச்சத்து குறைபாடினால் சிக்கல்கள் எதுவும் எழாமல் இருக்க வைட்டமின் மாத்திரைகளை அளிக்கலாம், கால்சியம் மாத்திரைகள் தேவையில்லை என்கின்றனர் மருத்துவர்கள்.
அதிகம் குண்டானாலும் ஆபத்து அதேபோல் உடல் எடை போடாமல் இருந்தாலும் ஆபத்து. எனவே சரியான அளவு எடையை கவனிக்கவேண்டும்.
வலி நேரத்தில் அதற்கு 99 டிகிரி பாரன்ஹீட் வெப்ப அளவே போதுமானது. பிரசவ நேரத்தில் பெண்நாய் இருப்பு கொள்ளாமல் தவிக்கும். குட்டி ஈன்ற உடன் அதிக பசி உணர்வோடு இருக்கும். நாய்கள் வரிசையாக குட்டி ஈன்று முடிக்க நான்கு மணி நேரம் வரை எடுத்துக்கொள்ளும். பிரசவத்திற்குப் பின்னர் நன்றாக ஒய்வெடுக்க விடவேண்டும்.



Click it and Unblock the Notifications