Latest Updates
-
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க..
ஆபிஸில் மீன் வளர்க்க ஆசையா? இத படிச்சு பாருங்க...
பொதுவாக அலுவலகங்களில் வேலை செய்பவர்களின் மனம் மிகவும் அழுத்தத்துடன், எப்போதும் டென்சனாக இருக்கும். ஆகவே அவர்கள் அந்த வகையான பிரச்சனைகளிலிருந்து விடுபட, அலுவலகங்களில் தங்களைச் சுற்றி, அவர்களுக்கு பிடித்தவற்றை வைத்து அலங்கரித்து வந்தால், அவற்றை பார்க்கும் போதெல்லாம்., மனமானது ஓரளவு ரிலாக்ஸ் ஆகும்.
அவ்வாறு அலங்கரிக்கும் போது செடிகள், மீன்கள் போன்றவற்றை வளர்ப்பார்கள். அதிலும் மீன்களில் பல வகைகள் உள்ளன. மேலும் மீனை அலுவலகங்களில் வளர்ப்பது என்பது மிகவும் ஈஸியான ஒன்று. அதற்கு சிறு தொட்டிகளை வாங்கி, அவற்றில் மீன்களை வளர்க்கலாம். மீன் வளர்ப்பதால், அதிக செலவு ஏற்படாது. எப்படியெனில் அதற்கு ஒரு நாளைக்கு இரண்டு முறை உணவையும், வாரத்திற்கு ஒரு முறை அந்த சிறு தொட்டியையும் கழுவினால் போதும்.
சரி, இப்போது அந்த மாதிரியான தொட்டியை ஆபிஸில் அமைத்து, எந்த மாதிரியான மீனை வாங்கி வளர்க்கலாம் என்று யோசிக்கிறீர்களா? அப்படியெனில் இதைப் படித்து, பின் முடிவெடுங்கள்!!!

ஆஸ்கார் மீன் (Oscar fish)
ஆபிஸில் வைக்கும் மீன்களில் ஆஸ்கார் மீன் ஒரு சிறந்ததாக இருக்கும். ஏனெனில் இந்த மீன் மிகவும் சிறியதாகவும் எளிதில் பராமரிக்க கூடியதாகவும் இருப்பது.

தங்க மீன் (Goldfish)
இந்த மீனை அதிர்ஷட மீன் என்றும் அழைப்பர். ஆகவே இந்த மீனை ஆபிஸில் வைத்துக் கொண்டால், நல்ல அதிர்ஷ்டம் அடிக்கும் வாய்ப்பும் உள்ளது.

பெட்டா ஸ்பெலென்டன் மீன் (Betta splendens)
பெரும்பாலான அலுவலகங்களில் வளர்க்கப்படும் மீன்களில் பெட்டா மீனும் ஒன்று. இந்த மீன் பார்ப்பதற்கு சிவப்பு நிறத்தில், முடியைப் போன்று சற்று நீளமான வாலையும் கொண்டது.

சிவப்பு வால் சுறா (Red tail shark)
அன்பின் வெளிபாடாகவும், சுறுசுறுப்புடனும் இருக்கும் மீன் என்றால் அது சிவப்பு வால் சுறா தான். இந்த சுறாவை வளர்க்கும் போது, அத்துடன் வேறு எந்த ஒரு மீனையும் வளர்க்க கூடாது. ஏனெனில் அதற்கு தனிமை தான் பிடிக்கும்.

குள்ள மீன் (Dwarf Fish)
இந்த மீன் தங்க நிறத்தில் சிறியதாக காணப்படும். இது மிகவும் சுறுசுறுப்புடனும், பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கும். இதனை பெரும்பாலும் பெண்கள் தான் தங்கள் செல்லமாக ஆபிஸில் வைத்து வளர்ப்பார்கள்.

சிவப்பு, வெள்ளை மற்றும் நீல பெட்டா மீன் (Red, white and blue beta fish)
இது பெட்டா வகையான மீன்களில் மற்றொரு பெண்களுக்கு பிடிக்கும் மீனாகும். எப்படியெனில், இந்த பெட்டா மீன் பல நிறங்களுடன், தனியாகவும், கண்களை கவரும் வகையிலும் அழகாக காணப்படும்.

ப்ளூ ஃபைட்டர் மீன் (Blue fighter fish)
ஆண்களுக்கு ஃபைட்டர் மீன்கள் என்றால் மிகவும் பிடிக்கும். இது கூட மிகவும் சுறுசுறுப்புடன் காணப்படுவதோடு, அதைப் பார்ப்பவரின் மனதை புத்துணர்ச்சியாக்கும். இந்த மீனும் பல வண்ணங்களுடன், தனிமையில் இருக்க விரும்பும்.



Click it and Unblock the Notifications
