Latest Updates
-
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்.. -
இட்லிக்கு இப்படி ஒருடைம் மட்டன் குருமா செய்யுங்க.. அப்புறம் பாருங்க.. அடிக்கடி செய்வீங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களை ஆபத்துகள் விடாம துரத்தப்போகுதாம் -
திரிகிரக யோகம் மிதுன ராசியில் உருவாகப்போவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கணவர் வெளிநாடு தப்பிச் செல்வதைத் தடுக்க முடியுமா? சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு பெண்களுக்கு தரும் பாதுகாப்பு என்ன? -
கறிவிருந்து ஸ்டைல் மட்டன் எலும்பு குழம்பு ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும்
மறந்தும் காலெண்டரை வீட்டின் இந்த இடத்தில், இந்த திசையில் வெச்சுடாதீங்க.. இல்ல கஷ்டப்படுவீங்க..
New Year 2026 Vastu Tips: வாஸ்து சாஸ்திரத்தின் படி, நம் வீட்டில் இருக்கும் ஒவ்வொரு பொருட்களும் சரியான இடத்தில், சரியான திசையை நோக்கி இருக்க வேண்டும். அது நாம் வீட்டை சுத்தம் செய்ய பயன்படுத்தும் துடைப்பம் ஆகட்டும், கழற்றி வைக்கும் செருப்பு ஆகட்டும் அனைத்தும் சரியான இடத்தில் இருந்தால் தான், அந்த வீடு செல்வ செழிப்போடும், மகிழ்ச்சியாகவும் இருக்கும்.
இன்னும் ஓரிரு நாட்களில் 2026 என்னும் புதிய ஆண்டில் நுழையவுள்ளோம். இந்த புத்தாண்டில் நம் வீட்டில் அனைவரும் செய்யும் முதல் விஷயம் என்றால், அது பழைய காலெண்டரை அப்புறப்படுத்திவிட்டு, புதிய காலெண்டரை மாட்டுவோம்.

அப்படி வீட்டில் புதிதாக தொங்கவிடும் காலெண்டரை நாம் சரியான இடத்தில் தொங்கவிட்டால் தான், அந்த வீட்டில் மகிழ்ச்சியும், செல்வமும் நிலைத்திருக்கும். இல்லாவிட்டால், அதுவே ஒரு வாஸ்து குறைபாட்டை ஏற்படுத்தி, வீட்டில் பலவிதமான பிரச்சனைகளை வரவழைக்கும். இப்போது 2026 காலெண்டரை எந்த இடத்தில், எந்த திசையில் தொங்கவிட வேண்டும், எங்கு தொங்கவிடக்கூடாது என்பதைக் காண்போம்.
காலெண்டரை எந்த திசையில் மாட்டக்கூடாது?
* வாஸ்து சாஸ்திரத்தின் படி, காலெண்டரை தெற்கு திசையில் தொங்கவிடக்கூடாது. ஏனெனில் இந்த திசையும் காலத்தைக் குறிக்கும் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த திசையில் காலெண்டரை தொங்கவிட்டால் அது வீட்டில் உள்ளோரின் ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும்.
* வாஸ்துப்படி, காலெண்டரை, கதவுக்கு பின்புறத்தில் தொங்கவிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
* காலெண்டரை வீட்டின் பிரதான கதவுக்கு அருகில் வைக்கக்கூடாது. இது குடும்ப உறுப்பினர்களின் முன்னேற்றத்தை எதிர்மறையாகப் பாதிக்கும்.
* வாஸ்து சாஸ்திரத்தின் படி, காலெண்டரை காற்று அதிகம் வீசும் பகுதியில் தொடங்கவிடக்கூடாது. ஏனெனில் காலெண்டர் எந்நேரமும் பறந்தவாறு இருந்தால், அது வீட்டில் உள்ளோரின் முன்னேற்றத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும்.
எந்த திசையில் காலெண்டரை தொங்கவிடலாம்?
* வாஸ்துப்படி, காலெண்டரை தொங்கவிட சிறந்த திசை மேற்கு. ஏனெனில் இந்த திசையானது ஓட்டத்தின் திசையாகக் கருதப்படுகிறது. எனவே இந்த திசையில் காலெண்டரை தொங்கவிடும் போது வீட்டில் உள்ளோர் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள்.
* இது தவிர வடக்கு திசையிலும் காலெண்டரைத் தொங்கவிடலாம். ஏனெனில் இந்த திசையானது செல்வத்தின் அதிபதியாக கருதப்படும் குபேர பகவான் குடியிருக்கும் திசையாக கருதப்படுகிறது. எனவே இந்த திசையில் காலெண்டரை தொங்கவிடுவது செல்வத்தில் நல்ல உயர்வை ஏற்படுத்தும்.
நினைவில் கொள்ள வேண்டியவை
* வீட்டில் காலெண்டரை தொங்கவிடும் போது, அந்த காலெண்டரில் போர் காட்சிகளோ, பாழடைந்த வீடோ, காய்ந்த மரங்களோ அல்லது மனச்சோர்வை ஏற்படுத்தும் படங்களோ அல்லது விலங்குகள் வேட்டையாடுவது போன்ற படங்களோ இருக்கக்கூடாது. வாஸ்துப்படி, இவை மோசமானவையாக கருதப்படுகின்றன.
* முக்கியமாக எப்போதும் பழைய காலெண்டரின் மேல் புதிய காலெண்டரை தொங்கவிடுவதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், அது வீட்டில் எதிர்மறை ஆற்றலை ஏற்படுத்தும்.
* மேலும் பழைய காலெண்டரை வீட்டில் இருந்து வெளியேற்றாமல் வீட்டிலேயே வைத்திருந்தால், பின் அது வீட்டில் உள்ளோரின் முன்னேற்றப் பாதையில் பல தடைகளை ஏற்படுத்தும். எனவே புதிய காலெண்டரை தொங்கவிடும் முன் பழையதை வீட்டில் இருந்து தூக்கி எறிந்துவிடுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications