Latest Updates
-
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க
வாஸ்துப்படி, வீட்டில் காலெண்டரை எந்த திசையில் வைக்கணும்? எந்த இடத்தில் வைக்கக்கூடாது?
New Year 2024: புதிய ஆண்டில் நுழைந்துவிட்டோம். அனைவரும் தங்களின் வீடுகளில் புதிய காலெண்டரை நிறுவுவோம். அப்படி நிறுவும் போது வாஸ்துப்படி சரியான திசையில் வைக்க வேண்டும். ஏனெனில் வீட்டில் இருக்கும் பொருட்கள் வாஸ்துப்படி இருந்தால் தான், அந்த வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகம் நிரம்பியிருக்கும். அதன் விளைவாக வீட்டில் பணம் அதிகம் சேரும், வீட்டில் உள்ளோர் வாழ்வில் முன்னேற்றத்தைக் காண்பார்கள்.
இதுவரை உங்கள் வீட்டில் நீங்கள் வாஸ்து பார்த்து காலெண்டரை வைத்ததில்லை என்றால், இந்த ஆண்டு உங்கள் வீட்டில் வாஸ்துப்படி வையுங்கள். இதனால் நிச்சயம் ஒரு நல்ல மாற்றத்தை காண்பீர்கள். சரி, வாஸ்துப்படி காலெண்டரை எந்த திசையில் வைக்க வேண்டும், எந்த திசையில் வைக்கக்கூடாது மற்றும் எந்த இடத்தில் காலெண்டரை வைக்கக்கூடாது என்பதை இப்போது காண்போம்.

எந்த திசையில் காலெண்டரை வைக்க வேண்டும்?
புத்தாண்டு அன்று வீட்டில் காலெண்டரை வைக்க சிறந்த திசை என்றால், அது மேற்கு திசை தான். ஏனெனில் மேற்கு ஓட்டத்தின் திசை என்று நம்பப்படுகிறது. இந்த திசையில் காலெண்டரை வைக்கும் போது வீட்டில் பணப்புழக்கம் அதிகரிக்கும். ஒருவேளை உங்களால் மேற்கு திசையில் காலெண்டரை நிறுவ முடியாவிட்டால், வடக்கு திசையைப் பார்த்து வைக்கலாம். இந்த திசையானது குபேர திசை. ஆகவே இந்த திசையில் காலெண்டரை நிறுவினால், வீட்டில் பண வரவு அதிகரிக்கும். எனவே வீட்டில் பணம் அதிகம் சேர வேண்டுமென்று நினைத்தால், வடக்கு திசையைப் பார்த்தவாறு காலெண்டரை வையுங்கள்.
எந்த திசையில் காலெண்டரை வைக்கக்கூடாது?
வாஸ்து சாஸ்திரத்தின் படி, காலெண்டரை எக்காரணம் கொண்டும் தெற்கு திசையைப் பார்த்தவாறு வைக்கக்கூடாது. அப்படி வைத்தால், நஷ்டத்தை தான் சந்திக்க நேரிடும். மேலும் இந்த திசையில் காலெண்டரை வைத்தால், நிறைய மருத்துவ செலவுகளை சந்திக்க நேரிடும் மற்றும் நிறைய பண இழப்புக்களையும் சந்திக்கக்கூடும்.
எந்த இடத்தில் காலெண்டரை வைக்கக்கூடாது?
* காலெண்டரை எப்போதும் கதவுக்கு பின்னால் வைக்கக்கூடாது. அதேப் போல் ஜன்னலுக்கு அருகிலும் வைக்கக்கூடாது.
* வீட்டின் பிரதான கதவுக்கு அருகிலும் காலெண்டரை வைக்கக்கூடாது. இது வீட்டில் உள்ளோரின் முன்னேற்றத்தைத் தடுக்கும்.
* வாஸ்துப்படி, வீட்டில் நிறுவும் காலெண்டரானது காற்றில் பறந்தவாறு இருக்கக்கூடாது. அப்படி மீண்டும் மீண்டும் பறந்தால், அது வீட்டில் இருப்போரின் முன்னேற்றத்தில் தடையை ஏற்படுத்தி, மோசமான விளைவை ஏற்படுத்தும்.
எந்த மாதிரியான காலெண்டரை வைக்கக்கூடாது?
* வீட்டில் வைக்கும் காலெண்டரில் சண்டை அல்லது போரின் படம் எதுவும் இருக்கக்கூடாது.
* அதேப் போல் கப்பல் மூழ்கும் படியான படம் கொண்ட காலெண்டரை வைக்கக்கூடாது. அது வீட்டில் எதிர்மறை ஆற்றலைக் கொண்டு வரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications