Latest Updates
-
சிக்கன் எடுத்தா இப்படி மசாலா அரைச்சு கிரேவி செஞ்சு பாருங்க.. பூரி, சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 23 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு நல்ல செய்திகள் தேடிவரப்போகுதாம் -
வார ராசிபலன் (23 August 2026 - 29 August 2026)- உங்க ராசிப்படி இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும் தெரியுமா -
மலபார் சிக்கன் கறி ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இளம் வயதிலேயே சொந்த வீடு வாங்கும் யோகம் இருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
சவூதி அரேபியாவில் இந்திய ஓட்டுநர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
ஐயங்கார் ஸ்டைல் அஞ்சறைப் பெட்டி குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஆகஸ்ட் 28-ல் நடக்கும் சந்திர கிரகணத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துன்பங்கள் துரத்தப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
முட்டைக்கோஸும், உருளைக்கிழங்கும் வெச்சு இப்படி கிரேவி செய்யுங்க.. பூரி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 22 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கஷ்டங்கள் துரத்தும் நாளாக இருக்குமாம்
வீட்டுல கொசு தொல்லை அதிகமா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க..
Mosquito Remedies In Tamil: பூச்சிகளிலேயே கொசுக்கள் மிகவும் எரிச்சலூட்டக்கூடியது. அதே சமயம் மிகவும் ஆபத்தானது. ஏனெனில் கொசுக்கள் பல ஆபத்தான நோய்களை மக்களிடையே பரப்பக்கூடியது. பொதுவாக மழைக்காலத்தில் தான் கொசுக்களின் இனப்பெருக்க காலமாக இருந்தாலும், கோடைக்காலத்திலும் கொசுக்கள் அதிகமாக கடிப்பதை பலரும் காணலாம்.
உங்கள் வீட்டிலும் கொசுத் தொல்லை அதிகமாக உள்ளதா? இந்த கொசு பிரச்சனையில் இருந்து விடுபட கடைகளில் விற்கப்படும் ஏராளமான கொசு விரட்டி பொருட்களை வாங்கி வீட்டில் வைத்தால், கொசுக்கள் மடியவோ அல்லது கட்டுப்படுவது போன்றோ தெரியவில்லை. மாறாக அதைப் பயன்படுத்தும் நமக்கு தான் மூச்சுத் திணறல், மூக்கடைப்பு போன்ற சுவாச பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

உங்களுக்கு சுவாச பிரச்சனைகள் இருந்து, கொசு விரட்டிகளை பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தால், இயற்கை வழிகளை மேற்கொள்ளலாம். ஏனெனில் சில இயற்கை வழிகளானது கொசுக்களை வீட்டினுள் வரவிடாமல் தடுக்கும் ஆற்றலைக் கொண்டது. இப்போது கொசுக்களை விரட்டவும், கட்டுப்படுத்தவும் உதவும் சில இயற்கை வழிகளைக் காண்போம்.
கற்பூரம்
கொசுக்களைக் கட்டுப்படுத்த கற்பூரம் பெரிதும் உதவி புரியும். அதற்கு மாலை வேளையில் வீட்டின் ஜன்னல் மற்றும் கதவை மூடி, கற்பூரத்தை ஏற்றுங்கள். இல்லாவிட்டால் ஒரு பௌல் நீரில் கற்பூரத்தைப் போட்டு, அதை வீட்டில் மூலைகளில் வையுங்கள். இதனால் கற்பூரசத்தின் வாசனைக்கு கொசுக்கள் வராது.
பூண்டு
பூண்டில் உள்ள சல்பரின் வாசனை பூச்சிகளுக்கு பிடிக்காது. அதுவும் வீட்டில் கொசுத் தொல்லை அதிகமாக இருக்கும் போது, பூண்டு பற்களைத் தட்டி, நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, கொசுக்கள் நுழையும் இடத்தில் தெளித்துவிடுங்கள்.
எலுமிச்சை கிராம்பு
கொசு பிரச்சனைக்கு எளிய முறையில் தீர்வு காண நினைத்தால், வீட்டில் சமையலறையில் உள்ள எலுமிச்சையை எடுத்து, இரண்டாக வெட்டி, அதனுள் ஆங்காங்கு கிராம்புகளை சொருகி, அவற்றை கொசுக்கள் நுழையும் ஜன்னல், கதவு போன்ற இடங்களில் வையுங்கள். இதனால் கொசுக்கள் வீட்டினுள் நுழையாது.
காபித் தூள்
வீட்டின் சமையலறையில் உள்ள காபித் தூள் கூட கொசு பிரச்சனையைத் தடுக்கும். அதற்கு உங்கள் வீட்டைச் சுற்றியுள்ள நீர் தேங்கிய இடங்களில் காபித் தூளை தூவி விடுங்கள். இதனால் கொசு முட்டைகள் மட்டுமின்றி, பிற பூச்சிகள் இருந்தாலும், அவை அழிந்துவிடும்.
லாவெண்டர் எண்ணெய்
நல்ல நறுமணத்தைக் கொண்ட லாவெண்டர் எண்ணெயின் வாசனை கொசுக்களுக்கு பிடிக்காது. எனவே வீட்டினுள் கொசுக்கள் நுழையாமல் இருக்க வேண்டுமானால், லாவெண்டர் எண்ணெயை வீட்டில் ஆங்காங்கு தெளித்துவிடுங்கள். கொசுக்கள் உங்களை கடிக்காமல் இருக்க வேண்டுமானால், சிறிது லாவெண்டர் எண்ணெயை சருமத்தில் தடவிக் கொள்ளுங்கள்.
புதினா
கொசுக்களுக்கு புதினாவின் நறுமணம் பிடிக்காது. எனவே புதினா இலைகள் வீட்டில் இருந்தால், அதை ஒரு பௌலில் போட்டு வீட்டின் அறைகளில் வைத்து விடுங்கள். இல்லாவிட்டால், புதினா எண்ணெயை வீட்டில் ஆங்காங்கு தெளித்துவிடுங்கள்.
துளசி இலைகள்
துளசி இலைகள் நல்ல மணம் கொண்டது. ஆனால் இந்த வாசனை பூச்சிகளுக்கு பிடிக்காது. எனவே வீட்டில் கொசுக்கள் அதிகம் வரக்கூடாதெனில் துளசி செடிகளை வீட்டின் வாசலில் வையுங்கள். இல்லாவிட்டால் துளசி இலைகளை கையால் நசுக்கி, கொசுக்கள் நுழையும் இடத்தில் வையுங்கள். இதனால் அந்த துளசி வாசனைக்கு கொசுக்கள் வீட்டினுள் நுழையாது.



Click it and Unblock the Notifications