Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
உங்க ஆடைகள் வெண்மையாக ஜொலிக்கணுமா? இதோ டிப்ஸ்...
உங்கள் நண்பர் ஒருவர் மிருதுவான வெள்ளைச் சட்டையிலோ அல்லது வெள்ளைக் காலுறையிலோ நடப்பதை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? நீங்கள் அவர்களைப் பார்த்து, உங்கள் ஆடைகளும் அந்த அழகிய வெண்மை நிறத்துடன் இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா? ஒரு சில வீட்டு நுணுக்கங்கள் மற்றும் குறிப்புகள் மூலம் அந்த வெள்ளை நிறத்தை உங்கள் ஆடைகளில் நீண்ட காலம் நீடிக்கச் செய்யலாம். அது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...
பொதுவாக பெண்களுக்கு, குறிப்பாக இல்லத்தரசிகளுக்கு சலவை சுத்தம் செய்வது சவாலான பணியாகும். ஏனெனில் வண்ண ஆடைகளை சுத்தம் செய்வதை விட வெள்ளை ஆடைகளை சுத்தம் செய்வது மிகவும் கடினம். வீட்டில் குழந்தைகள் இருந்தாலும், அவர்களின் பள்ளி சீருடைகளை சுத்தம் செய்வது பெரிய வேலையாகும். குழந்தைகள் வெள்ளை ஆடைகளை கறைபடுத்திவிடும். அதனை கடின முயற்சி செய்து துவைக்க வேண்டியிருக்கும்.. ஆனால் அது குறித்து இனி நீங்கள் கவலப்பட வேண்டியதில்லை..

உங்கள் வீட்டில் வெள்ளை ஆடைகளை மேலும் பிரகாசமாக மாற்ற சில பயனுள்ள குறிப்புகளை இந்த பதிவில் பகிர்ந்துள்ளோம்.. வெள்ளை ஆடைகளை துவைக்கும் போது இந்த குறிப்புகளை நீங்கள் பயன்படுத்தலாம். உங்கள் வெள்ளை ஆடைகளை வீட்டிலேயே இயற்கையான முறையில் சுத்தம் செய்வது சுலபம்.. ஆம் உங்கள் வெள்ளை நிறத்தை வெண்மையாக வைத்திருப்பது மட்டுமல்லாமல் அழுக்கடைந்த அல்லது மங்கிப்போன ஆடைகளை புத்தம் புதியதாக மாற்ற உதவும் சில குறிப்புகள் இதோ...
1. வினிகர் கொண்டு சுத்தம் செய்தல்
வினிகர் வெள்ளை ஆடைகளை பிரகாசமாகவும் சுத்தமாகவும் வைத்திருக்கும். வெண்ணிற ஆடையில் உள்ள கறைகளில் சிறிது வினிகரை தடவி, தேய்த்து குளிர்ந்த நீரில் சிறிது நேரம் ஊறவைத்தால் போதும், சாதாரணமாக கழுவி வித்தியாசம் பார்க்கலாம்.
2. ப்ளீச்சிங் மூலம் சுத்தம்
அதிக அழுக்கடைந்த மற்றும் கறை படிந்த வெள்ளை ஆடைகளை சுத்தம் செய்ய ப்ளீச்சிங் மற்றும் சோப்பு பயன்படுத்தப்படலாம். இந்த இரண்டு பொடிகள் கலந்த தண்ணீரில் வெள்ளை ஆடைகளை 30 நிமிடம் ஊற வைக்கவும். அரை மணி நேரம் கழித்து வெந்நீரில் கழுவவும். இவ்வாறு செய்வதால் உங்கள் ஆடைகள் சுத்தமாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.
3. வெந்நீர் மூலமாக துவைத்தல்
வெள்ளை ஆடைகளை வெந்நீரில் நனைக்கவும். பிறகு அதில் ஒரு டேபிள் ஸ்பூன் டிடர்ஜென்ட் பவுடர் மற்றும் ஒயிட் வினிகரை கலக்கவும். 15 நிமிடம் கழித்து துவைத்தால் ஆடைகள் வெள்ளையாக பளிச்சிடும்.
4. பேக்கிங் சோடா வைத்து துவைத்தல்
உங்கள் வெள்ளை ஆடைகளை சுத்தமாகவும் புதியதாகவும் வைத்திருக்க மற்றொரு வழி பேக்கிங் பவுடர் ஆகும். வெள்ளை ஆடைகளை நனைத்த தண்ணீரில் சிறிது பேக்கிங் பவுடர் சேர்த்து ஊற வைக்கவும். இந்த தண்ணீரில் துணிகளை துவைக்கவும். சிறந்த முடிவுகளுக்கு இந்த முறையை இரண்டு முறை பின்பற்றவும்.
5. எலுமிச்சை சாறு கொண்டு துவைத்தல்
எலுமிச்சை சாறு மற்றொரு பயனுள்ள வழி. ஏனெனில் எலுமிச்சை சாறு உங்கள் வெள்ளை ஆடைகளை மீண்டும் புதியது போல் ஜொலிக்க சிறப்பாக செயல்படுகிறது. வெள்ளை ஆடையில் உள்ள கறைகளின் மீது எலுமிச்சை சாற்றை தூவி ஒரு மணி நேரம் விட்டு பின் சுத்தமான தண்ணீரில் கழுவினால் பலன் தெரியும்.
6. உருளைக்கிழங்கு சாறு கொண்டு துவைத்தல்
உருளைக்கிழங்கு சாறு வெள்ளை நிற ஆடைகளை அதிக பளபளப்பாக மாற்றும் வழிகளில் ஒன்றாகும். புதிய உருளைக்கிழங்கு சாற்றை அல்லது உருளைக்கிழங்கு சாற்றை கறையின் மீது தடவி, சோப்பில் ஊறவைத்து 20 நிமிடங்களுக்குப் பிறகு வழக்கம் போல் துவைத்தால் வெள்ளை ஆடை பளப்பளபாகும்...
7. வாஷிங் மிஷின் கொண்டு துவைத்தல்
நீங்கள் வெள்ளை ஆடைகளை கையால் துவைக்காதவராக இருந்தால், உங்கள் வாஷிங் மெஷினை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்யுங்கள். ஒரு அழுக்கு சலவை இயந்திரம் உங்கள் வெள்ளை ஆடைகளில் எதிர்மறையான முடிவுகளைக் காண்பிக்கும், அவை மஞ்சள் அல்லது மங்கலாக மாறும். அதனாஇ உங்க வாஷிங் மிஷினை சுத்தம் செய்ய மறக்காதீர்கள்..



Click it and Unblock the Notifications
