Latest Updates
-
சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சிக்கன் வாங்குனா இந்த தேங்காய் கொத்தமல்லி சிக்கன் வறுவலை செய்யுங்க - சூப்பரா இருக்கும் -
2050-ல் உலகை ஆளப்போகும் டாப் 10 நாடுகள்: இந்தியா 2050-ல் எந்த நிலையில் இருக்கும் இருக்கப்போகுது தெரியுமா? -
சிக்கன் எடுத்தா இப்படி குக்கர்-ல ஒருடைம் குழம்பு வையுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 19 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவருமாம் -
வார ராசிபலன் (19 April 2026 - 25 April 2026) - இந்த வாரம் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்தில் கவனமா இருக்கணும்.. -
மட்டன் வாங்குனா.. ஒருடைம் இந்த செட்டிநாடு ஸ்டைல் மட்டன் சுக்கா செய்யுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
அடுத்தடுத்து நட்சத்திரத்தை மாற்றும் 3 கிரகங்கள்: இந்த 4 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது! -
வெயிலால் முகம் டல்லாகிடுச்சா? அப்ப 1 ஸ்பூன் அரிசி மாவு வெச்சு தினமும் நைட் இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. நீங்க அட்சய திருதியை நாளில் என்ன வாங்கணும்-ன்னு சொல்றோம். ..
வேலைக்கு போகும் தாய்மார்களுக்கான சில சலவை டிப்ஸ் மற்றும் ட்ரிக்ஸ்..!
Laundry Tips In Tamil: நீங்கள் வேலைக்கு போகும் பெண்ணாக இருந்தால் வீட்டு வேலைகளை செய்வது என்பது மிகவும் கடினமான விஷயம். என்ன தான் நீங்கள் வீட்டு வேலைகளைச் செய்ய திட்டமிட்டால் கூட அதற்கான சரியான நேரம் நமக்கு கிடைப்பதில்லை.
உங்கள் பிஸியான வேலைக்கு மத்தியில் துணிகளை துவைப்பது, பாத்திரங்களை கழுவுவது மற்றும் வீட்டை சுத்தம் செய்வது இப்படி ஏராளமான விஷயங்கள் இருக்கும். அதிலும் வாஷிங் மெஷின் இருந்தால் கூட துணி துவைப்பது அதை காய வைப்பது போன்ற விஷயங்கள் இன்றளவும் கடினமாகவே உள்ளது.

அதுவும் வீட்டில் அதிகமான நபர்கள் இருந்தால் கண் இமைக்கும் நேரத்தில் அதிகமான துணிகள் சேர்ந்து விடுவது உண்டு. எனவே தான் உங்கள் துணி துவைக்கும் வேலையை எப்படி எளிதாக்கலாம் அதற்கான டிப்ஸ்கள் என்ன என்பதை பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
ஒரு நபரின் துணிகளை மட்டும் முதலில் துவையுங்கள்
உங்கள் வீட்டில் குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கு அதிகமான துணிகள் தேவைப்படும். எனவே குழந்தைகளின் துணிகளை தனியாக வைத்து துவைக்க முற்படலாம். இப்படி வீட்டில் இருக்கும் நபர்களின் தேவைக்கேற்ப துணிகளை துவைக்க முற்படலாம்.
பெரிய வாஷிங் மெஷினாக பார்த்து வாங்குங்கள்
சிறிய அளவிலான வாஷிங் மெஷினில் துணிகளை நிறைய போட்டு துவைக்க முடியாது. இதனால் நீங்கள் அடிக்கடி துவைக்க வேண்டியிருக்கும். எனவே உங்கள் வீட்டில் இருக்கும் நபர்களின் எண்ணிக்கை மற்றும் தேவைகளின் எண்ணிக்கையை பொறுத்து வாங்கும் போதே பெரிய வாஷிங் மெஷினாக வாங்கிக் கொள்ளுங்கள். ஒரே தடவையில் போட்டு எடுக்கும் போது உங்களுக்கு துணிகளை உலர வைப்பதும் எளிதாக இருக்கும். இல்லையென்றால் ஒவ்வொரு முறையும் உலர வைக்க முயற்சி செய்வீர்கள்.
துணிகளை துவைக்க மெஸ் பேக்குகளை பயன்படுத்துங்கள்
நீங்கள் குழந்தைகளின் சாக்ஸ் மற்றும் கையுறைகளை தனியாக துவைக்க நினைத்தால் அதற்கும் நேரம் எடுக்கும். எனவே அதற்கு மெஸ் பேக்குகளை நீங்கள் பயன்படுத்தலாம். சாக்ஸ் மற்றும் குழந்தைகளின் பொம்மைகளை மெஸ் பேக்குகளில் போட்டு துவைக்கலாம். இதனால் உங்கள் நேரம் மிச்சமாகும். உலர வைப்பதும் எளிதாக முடியும்.
குறைவான ஆடைகளை பயன்படுத்துங்கள்
ஒரு நாளைக்கு எத்தனை ஆடைகளை நீங்கள் மாற்றுகிறீர்கள் மற்றும் உங்கள் குழந்தைகள் மாற்றுகிறார்கள் என்பதில் கவனமாக இருங்கள். தேவையில்லாமல் குழந்தைகளுக்கு அடிக்கடி உடைகளை மாற்றுவதை தவிர்த்திடுங்கள். அவர்கள் விளையாடும் போதும் மற்றும் பெயிண்டிங் செய்யும் போதும் அதற்கென்றே தனி ஆடைகளை பயன்படுத்துங்கள்.
திட்டமிட்டு அட்டவணைபடுத்திக் கொள்ளுங்கள்
உங்கள் ஆபிஸ் வேலைகளை திட்டமிட்டு செய்து முடிப்பது போல் உங்கள் வீட்டு வேலைகளையும் அட்டவணைப்படுத்திக் கொள்ளுங்கள். துணி துவைக்கும் நேரம் எப்பொழுது, ஒரு வாரத்திற்கு எத்தனை முறை துணிகளை துவைக்க வேண்டும் போன்ற விஷயங்களை அட்டவணைப்படுத்திக் கொள்ளுங்கள். இந்த அட்டவணையை அப்படியே வழக்கப்படுத்தி செய்து வாருங்கள்.
டைமரை பயன்படுத்துங்கள்
உங்களுக்கு துணி துவைக்கும் விஷயம் அடிக்கடி மறக்கிறது என்றால் அதற்கு டைமரை பயன்படுத்தி வரலாம். டைமர் உங்களுக்கு துணி துவைப்பதற்கான நேரத்தை நியாபகப்படுத்துகிறது. எனவே உங்களுக்கான அலாரம் வந்ததும் துணிகளை வாஷிங் மெஷினில் போட்டு எடுத்துக் கொள்ளுங்கள்.
ஒவ்வொரு நாளும் துணிகளை மடித்து வையுங்கள்
துணிகளை மொத்தமாக மடித்து வைத்துக் கொள்ளலாம் என்று சேர்த்து சேர்த்து வைக்காதீர்கள். ஒரு நாளைக்கு தேவையான துணிகளை அன்றைக்கே மடித்து அலமாரியில் வைத்துக் கொள்ளுங்கள். துணிகளை அவ்வப்போது மடித்து வைப்பது பின்னாளில் வேலை பெரிதாகாமல் இருக்கும்.
உங்கள் குழந்தைகளை உதவிக்கு வைத்துக் கொள்ளுங்கள்
உங்கள் குழந்தைகள் அனாவசியமாக அதிக துணிகளை பயன்படுத்த வேண்டாம் என்பதை சொல்லிக் கொடுங்கள். துணிகளை வாஷிங் மெஷினில் போடுவது மற்றும் உலர்த்துவது போன்ற விஷயங்களுக்கு உங்கள் குழந்தைகளையும் உதவிக்கு அழைத்துக் கொள்ளலாம்.
வாரத்திற்கு இரண்டு முறை செய்யலாம்
தினசரி ஆபிஸ்க்கு போய்ட்டு வந்ததும் துவைப்பது கடினமாக இருந்தால் வாரத்திற்கு இரண்டு முறை செய்து வரலாம். உங்கள் வார விடுமுறை நாட்களை இதற்காக நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு நாள் உங்கள் குழந்தைகளின் துணிகளையும், ஒரு நாள் உங்கள் இருவரின் துணிகளையும் துவைக்கலாம்.
எல்லா ஆடைகளையும் அயனிங் செய்ய வேண்டாம்
துணிகளை துவைப்பது ஒரு பக்கம் வேலையாக இருந்தால் அதை அயனிங் செய்வது மற்றொரு வேலையாக உள்ளது. எனவே எல்லா துணிகளையும் அயனிங் செய்வது உங்கள் நேரத்தை வீணாக்கும். எனவே எந்தெந்த துணிகளை அயனிங் செய்ய வேண்டும் என்பதை உறுதிப்படுத்தி அதை தனியாக பிரித்து வைத்துக் கொள்ளுங்கள். மேலும் அயனிங் செய்யப்போகும் துணிகளை மடித்து வைக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. அதை துணி துவைத்த பிறகு உலர்த்தி அப்படியே ஒரு கூடையில் போட்டு சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள்.
எல்லா துணிகளையும் மடிக்க வேண்டாம்
குழந்தைகளின் ஆடம்பர கவுன்கள் மற்றும் பார்ட்டி ஆடைகளை கைகளால் மடிக்க முடியாது. எனவே மடிக்க முடியாத ஆடைகளில் உங்கள் நேரத்தை செலவிட வேண்டாம். அதை அப்படியே ஹேங்கரில் தொங்க விடலாம். வேண்டும் என்றால் அயனிங் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இதுவும் உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தும்.



Click it and Unblock the Notifications











