Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
ஒருதுளி எண்ணெய் கூட சிந்தாமல் பாட்டிலில் ஊற்றணுமா? அப்ப இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க...
Kitchen Tips: சமைப்பதெல்லாம் ஒரு பெரிய வேலையே இல்லை என்று பலரும் சொல்வதுண்டு. சமைப்பது ஒரு பெரிய வேலை இல்லை என்பது உண்மை தான். அதுவும் சில குறிப்புகளை, தந்திரங்களை தெரிந்து வைத்துக் கொண்டால், இன்னும் சுலபமாக செய்து முடிக்கலாம். இப்படியான தந்திரங்கள் நமது பாட்டிகளுக்கும், அம்மாக்களுக்கும் நன்கு தெரியும்.
அதனால் தான் அவர்கள் சமையலறைக்கு சென்று டக்கென்று வேலையை முடித்துவிட்டு வந்துவிடுகிறார்கள். இன்றைய தலைமுறையினருக்கு சமையல் தெரிந்திருப்பதே பெரிய அதிசயமாக உள்ளது. அப்புறம் எப்படி அவர்களுக்கு தந்திரங்கள் தெரிந்திருக்க போகிறது.

இப்படி தந்திரங்களை தெரியாமல் இருப்பதால் தான், சமையலறையில் ஒரு வேலையை முடிக்க நிறைய நேரம் எடுக்கிறது அல்லது ஒரு வேலை செய்யப்போனால் இரண்டு வேலையை செய்ய வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
உதாரணமாக, எண்ணெய் பாக்கெட்டில் உள்ள எண்ணெயை பாட்டிலில் ஊற்றும் போது, அதை சிந்திக்கொண்டே நிறைய பேர் ஊற்றுவார்கள். இதனால் எண்ணெய் வீணாவதோடு, அதை சுத்தம் செய்யும் போது கைகளும் பிசுபிசுவென்று மாறும். அதோடு எண்ணெய் சிந்திய இடமும் பிசுபிசுப்பாக இருக்கும்.
ஆனால் இன்ஸ்டாவில் ஒரு பெண்மணி ஒருதுளி கூட எண்ணெய் சிந்தாமல் பாட்டிலில் எப்படி எண்ணெயை ஊற்றுவது என்று செய்து காட்டியுள்ளார். அதற்கு ஒரு கரண்டியை எடுத்து, ஒரு பாட்டிலில் தலைகீழாக வைக்க வேண்டும். பின் வழக்கமாக செய்வது போன்று எண்ணெய் பாக்கெட்டின் ஒரு முனையை வெட்டி, பின் எண்ணெயை பாட்டிலில் ஊற்ற வேண்டும். அப்படி ஊற்றும் போது எண்ணெயானது கீழே ஒருதுளை கூட சிந்தாமல் உள்ளே செல்வதைக் காணலாம். இந்த சிம்பிளான ட்ரிக்ஸ் அவருக்கு சரியாக வேலை செய்ததால், அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பியதாக அவர் போஸ்ட்டில் போட்டுள்ளார்.
இந்த அட்டகாசமான சமையலறை தந்திரமானது இணையத்தில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் நிறைய பேர் இந்த வீடியோவை பார்த்துவிட்டு, அதை முயற்சிக்கப் போவதாகவும் கமெண்ட் செய்து வருகிறார்கள். முக்கியமாக இந்த தந்திரத்தை இப்பெண்மணி மிகவும் ஆற்றலுடன் விவரித்த விதம் நிறைய பேரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஏன், நான் கூட இப்படி பாக்கெட் எண்ணெயை பாட்டிலில் ஊற்றி பார்த்தேன். இந்த தந்திரம் மிகவும் அற்புதமாக இருந்தது. உங்கள் வீட்டிலும் பாட்டிலில் இதுவரை எண்ணெய் ஊற்ற கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தால், இனிமேல் இந்த தந்திரத்தை நீங்களும் ஃபாலோ செய்து நன்மை பெறுங்கள். உங்களுக்கு தெரிந்தவர்களுடனும் இதை பகிர்ந்து கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications