Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
நீங்க யூஸ் பண்ற கோதுமை மாவு ரியலா, போலியா-ன்னு கண்டுபிடிக்கணுமா? அப்ப இந்த 4 எளிய சோதனைகளை செஞ்சு பாருங்க..
Kitchen Tips In Tamil: சமீப காலமாக உணவுப் பொருட்களில் கலப்படங்கள் அதிகமாக உள்ளன. சொல்லப்போனால் இந்திய சந்தைகளில் போலி உணவுப் பொருட்கள் அதிகமாக விற்கப்பட்டு வருகின்றன. அதுவும் சீஸ், பால், பருப்பு வகைகள், மசாலா பொருட்கள் என்று தினசரி சமையலில் பயன்படுத்தும் அனைத்திலும் கலப்படங்கள் இருப்பதால், கடைகளில் பொருட்களை வாங்கி பயன்படுத்தவே பயமாக உள்ளது.
இன்று பெரும்பாலான வீடுகளில் சப்பாத்திக்கு கடைகளில் விற்கப்படும் கோதுமை மாவுகளையே மக்கள் அதிகம் வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆனால் இப்படிப்பட்ட கோதுமை மாவுகளிலும் கலப்படம் செய்யப்பட்டு விற்கப்பட்டு வருகின்றன என்பது தெரியுமா? அதுவும் சாக்பீஸ் அல்லது தீங்கு விளைவிக்கும் நச்சுப் பொருட்கள் கலக்கப்பட்டு விற்கப்படுகின்றன என்பது தெரியுமா?

இப்படியான கலப்படமிக்க கோதுமை மாவை உட்கொண்டால் ஏராளமான ஆரோக்கியமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். சரி, கோதுமை மாவு உண்மையானதா அல்லது போலியானதா என்பதை எப்படி கண்டுபிடிப்பது என்று கேட்கலாம். கீழே அதற்கான 4 எளிய வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
சோதனை #1
ரியல் கோதுமை மாவை எப்படி கண்டுபிடிப்பது என்று யோசிக்கிறீர்களா? அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது, சிறிது கோதுமை மாவை எடுத்து, உள்ளங்கையில் வைத்து, இருகைகளாலும் நன்கு தேய்க்க வேண்டும். போலியான கோதுமை மாவு என்றால், அது கைகளில் பிசுபிசுவென்று ஒட்டும். உண்மையான கோதுமை மாவை என்றால், எளிதில் நீங்கும்.
சோதனை #2
கோதுமை மாவின் தூய்மையை கண்டறிய, ஒரு கண்ணாடி டம்ளரில் நீரை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் சிறிது மாவை எடுத்து போட வேண்டும். போலியான கோதுமை மாவு என்றால், அது மிதக்கும் அல்லது உருகும். அதுவே சுத்தமான கோதுமை மாவு என்றால், அது அடியில் தங்கும். இதைக் கொண்டும் கோதுமை மாவின் தூய்மையை நொடியில் அறியலாம்.
சோதனை #3
நீங்கள் வாங்கிய கோதுமை மாவு உண்மையானதாக இருந்தால், அதன் மணம் மண் சார்ந்த நறுமணத்துடன் லேசாக இருக்கும். அதுவே போலியான கோதுமை மாவாக இருந்தால், அதில் ஒருவிதமான கெமிக்கலின் வாசனை அல்லது விசித்திரமான வாசனை வரும். இதைக் கொண்டும் கோதுமை மாவின் உண்மைத்தன்மையை அறியலாம். இதில் உண்மையான மாவை அடையாளம் காண வாசனை உணர்வே போதுமானது.
சோதனை #4
கோதுமை மாவு உண்மையானதாக இருந்தால், அது சற்று க்ரீம் அல்லது கோதுமையின் நிறத்தில் இருக்கும். அதுவே போலியான கோதுமை மாவாக இருந்தால், அது மிகவும் வெள்ளையாக இருக்கும். ஏனெனில் அதில் கெமிக்கல்கள் பயன்படுத்தப்பட்டிருக்கும். எனவே இப்படி கோதுமை மாவின் நிறத்தைக் கொண்டும், அது உண்மையானதா, போலியானதா என்பதை அறியலாம்.
எனவே நண்பர்களே! உங்கள் வீட்டிலும் கோதுமை மாவை கடைகளில் வாங்கி பயன்படுத்துவீர்களானால், மேலே கொடுக்கப்பட்டுள்ள எளிய சோதனைகளை செய்து பார்த்து, உண்மையானதா, போலியானதா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications