For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தீபாவளிக்கு வீட்டை சுத்தம் செய்வதற்கான சில வாஸ்து குறிப்புகள்!

வீட்டை சுத்தம் செய்வதற்காக வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையில் சில சுலபமான வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. தீபாவளிக்கு நீங்கள் வீட்டை தயார் செய்வதற்கு முன்பு இதை ஒருமுறை தெரிந்து கொண்டு செய்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

|

Vastu Tips for Diwali in Tamil : வந்தாச்சு தீபாவளி. தீபாவளி என்றாலே இந்தியா முழுவதும் வண்ணமயமாக காட்சியளிக்கும். இந்தியர்கள் ஒவ்வொருவரும் ஆண்டு தோறும் எதிர்பார்த்து காத்திருக்கும் பண்டிகை என்றால் அது தீபாவளி மட்டும் தான். தீபங்களின் திருவிழாவாகிய தீபாவளியில் குடும்பங்கள் ஒன்றிணைந்து மகிழ்ச்சியாக கொண்டாடுவர். வரவிருக்கும் தீபாவளி பண்டிகைக்கு நீங்கள் தயாராகிவிட்டீர்களா? இல்லையென்றால், அதை செய்ய இதுவே சரியான நேரம்.

What Are The Best Vastu Tips for This Diwali

வீட்டை சுத்தம் செய்வதற்காக வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையில் சில சுலபமான வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. தீபாவளிக்கு நீங்கள் வீட்டை தயார் செய்வதற்கு முன்பு இதை ஒரு முறை தெரிந்து கொண்டு செய்தால் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு செய்வதன் மூலம் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல் நீங்கி, நேர்மறை ஆற்றலை வரவழைக்கலாம். நேர்மறை அதிர்வுகளையும் செழிப்பையும் பெற இந்த அடிப்படை விதிகளைப் பின்பற்றி பாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1: வீட்டை சுத்தம் செய்வது

#1: வீட்டை சுத்தம் செய்வது

வாஸ்து நிபுணர்களின் கூற்றுப்படி, மகிழ்ச்சியான வீட்டிற்கு அடிப்படையே தூய்மை தான். ஏறக்குறைய இந்தியாவில் ஒவ்வொரு வீட்டிலும் தீபாவளி பண்டிகைக்கு முன் வீடு முழுவதையும் சுத்தம் செய்வது முதல் வேலையாக இருக்கும். இதனை யாரும் காரணமின்றி செய்யமாட்டார்கள். வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல் மற்றும் தடுப்பு ஆற்றல்களை அகற்றுவதற்கு, வீட்டின் மூலைமுடுக்கெல்லாம் சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். இது தீபாவளிக்கான மிக அடிப்படையான வாஸ்து குறிப்புகளில் ஒன்றாகும். நீங்கள் வீட்டின் சிறு மூலையில் இருக்கக்கூடிய சிலந்தி வலைகளையும் கூட அகற்றி இருப்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள். மறக்காமல் சமையலறை அல்லது ஸ்டோர் ரூம்மையும் தவறவிடாதீர்கள்.

#2: தேவையற்ற பொருட்களை அகற்றுவது

#2: தேவையற்ற பொருட்களை அகற்றுவது

வீட்டில் அளவிற்கு அதிகமான பொருட்களை சேமித்து வைப்பது ஆரோக்கியமான பழக்கம் அல்ல என்பதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். குறிப்பாக பழைய உடைந்த பொருட்களை தூக்கி போட மனமின்றி பத்திரப்படுத்தி வைக்கும் பழக்கம் நம்மில் பலருக்கும் உண்டு. அதை தான் வாஸ்து சாஸ்திரம் தவறு என குறிப்பிடுகிறது. ஆனால் ஏன்? உங்கள் வீட்டை எந்த அளவுக்கு சுத்தமாக, காற்றோட்டமாக வைத்துள்ளீர்களோ, அந்த அளவுக்கு நல்ல அதிர்வுகள் சுதந்திரமாகப் பாயும் வாய்ப்புகள் அதிகம். உங்கள் வீட்டில் கடந்த 6 மாதங்களாக நீங்கள் பயன்படுத்தாத குப்பைகள், உடைந்த எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், உடைந்த பாத்திரங்கள், மேலும் நீங்கள் பயன்படுத்தாத பொருட்களை வீட்டில் இருந்து தூக்கி எரிந்து விடுங்கள். உங்களைச் சுற்றிக் கிடக்கும் இந்த தேவையற்ற விஷயங்கள் உங்களுக்குத் தேவையில்லை. முக்கியமாக, உடைந்த கண்ணாடித் துண்டுகளை வீட்டில் வைத்திக்கவே கூடாது. உடனே அவற்றை அகற்றுவதை உறுதி செய்து கொள்ளுங்கள். ஏனெனில் அவை கெட்ட சகுனம் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.

#3: நுழைவாயிலை தூய்மைப்படுத்தவும்

#3: நுழைவாயிலை தூய்மைப்படுத்தவும்

உங்கள் வீட்டிற்குள் நேர்மறை ஆற்றல்கள் வர வேண்டுமெனில், முதலில் உங்கள் நுழைவாயில் தூய்மையாக இருக்க வேண்டும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. இந்த நேரத்தில் உங்கள் வீட்டின் நுழைவு வாயிலை சுத்தம் செய்வது மிகவும் முக்கியமானது. நாம் அனைவரும் லட்சுமி தேவியின் கால்தடங்களை நமது பிரதான வாசலில் வைப்பதை நாம் அனைவரும் அறிந்திருந்திருப்போம். லட்சுமி தேவியானவள் ஒரு சுத்தமான மற்றும் சீரான இடத்தில் மட்டுமே வரவேற்க வேண்டும். மேலும், நீங்கள் அந்த இடத்தை பிரகாசமாகவும் நன்கு வெளிச்சமாகவும் வைத்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். வீட்டின் நுழைவு வாயிலில் எந்தவொரு பொருட்களையும் வைத்து இடத்தை அடைக்கக்கூடாது. இதை மட்டும் எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.

#4: சரியான இடத்தில் பொருட்களை வைத்தல்

#4: சரியான இடத்தில் பொருட்களை வைத்தல்

உங்கள் வீட்டைச் சுத்தம் செய்யும் போது, ​​வீட்டின் வடக்கு மற்றும் வடகிழக்கு மூலைகளில் பொருட்கள் நிறைந்திருக்காமல் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதன் மூலம் வீட்டில் செல்வ வளம் அதிகரிப்பதை உணர முடியும். வீட்டினுள் பசுமை எப்போதுமே வரவேற்கத்தக்கது. எனவே, வீட்டின் கிழக்கு மற்றும் வடக்கு திசைகளுக்கு இடையில் இலகுரக மற்றும் சிறிய தாவரங்களை வைக்க வாஸ்து சாஸ்திரம் பரிந்துரைக்கிறது. நிதி நிலை மேம்பாட்டை உறுதிப்படுத்த வீட்டின் மையப் பகுதியை சுத்தமாகவும், ஒழுங்காகவும் வைத்திருக்க முயற்சிக்கவும். வீடு முழுவதும் நிறைய பொருட்களை குவித்து வைக்கும் பழக்கத்தை மட்டும் விட்டு விடுங்கள். அது வீட்டின் செல்வ வளத்தைப் பாதிக்கும்.

#5: வீட்டில் உப்பு நீரை தெளிக்கவும்

#5: வீட்டில் உப்பு நீரை தெளிக்கவும்

ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் சிறிது உப்பு மற்றும் தண்ணீர் கலந்து வீட்டைச் சுற்றி தெளிக்கவும். உங்கள் வீட்டின் அனைத்து மூலைகளிலும், குறிப்பாக தீபாவளியின் போது உப்பு நீரை தெளிப்பது ஒரு நல்ல நடைமுறை என்று வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர். பொதுவாகவே உப்பிற்கு எதிர்மறை அதிர்வுகளை உறிஞ்சும் தன்மை உண்டு. எனவே, வீட்டில் சூழலை சுத்தப்படுத்துவதில் உப்பு பெரும் பங்கு வகிப்பதாக நம்பப்படுகிறது. வழக்கமான உப்புக்குப் பதிலாக கடல் உப்பைப் பயன்படுத்தினால் மேலும் சிறப்பு வாய்ந்தது.

#6: வண்ண விளக்குகளால் ஒளிர செய்தல்

#6: வண்ண விளக்குகளால் ஒளிர செய்தல்

பொதுவாகவே தீபாவளி அன்று பலரும் வீடு முழுவதும் விளக்குகள் ஏற்றி ஒளிர செய்வர். இன்றைய காலக்கட்டத்தில் பலரும் வீடுகளை வண்ண வண்ண மின் விளக்கு தோரணங்களை கொண்டு அலங்கரிக்கின்றனர். எதுவாக இருந்தாலும், தீபாவளி அன்று வீடானது வண்ணமயமாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே அடிப்படை. இதிலும் வாஸ்து சாஸ்திரத் திசைகளுக்கு ஏற்ற விளக்குகளை பரிந்துரைக்கிறது. அலங்கார விளக்குகள் என்று வரும்போது சந்தையில் ஏராளமான வகைகள் உள்ளன. வெவ்வேறு வண்ண விளக்குகளுக்கு ஏற்ற சில திசைகளைப் பற்றி இங்கே கொடுக்கப்பட்டுள்ளது:

* கிழக்கு திசை: சிவப்பு, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு போன்ற மங்களகரமான வண்ணங்களுக்கான திசை கிழக்கு.

* மேற்கு: மஞ்சள், ஆரஞ்சு மற்றும் இளஞ்சிவப்பு விளக்குகளை கொண்டு இந்த திசையை அலங்கரிக்கலாம்.

* வடக்கு: உங்கள் வீட்டின் வடக்கு திசையை அலங்கரிக்க நீலம், மஞ்சள் மற்றும் பச்சை நிற விளக்குகளை பயன்படுத்தலாம்.

* தெற்கு: வெள்ளை, ஊதா மற்றும் சிவப்பு நிற விளக்குகள் இந்த திசைக்கு ஏற்ற நிறங்கள் ஆகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Vastu Tips for Diwali : What Are The Best Vastu Tips for This Diwali

Here are some super easy vastu tips for Diwali might help you get started. Follow these basic rules to usher in positive vibes and prosperity. Read on...
Desktop Bottom Promotion