Latest Updates
-
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்..
எக்காரணம் கொண்டும் இந்த காய்கறிகளை ஃப்ரிட்ஜில் வெச்சுடாதீங்க... இல்ல அது விஷமாயிடும்...
நாம் வாங்கும் சில காய்கறிகளை ஃப்ரிட்ஜில் வைக்கக்கூடாது என்பது தெரியுமா? ஆம், சில காய்கறிகளை ஃப்ரிட்ஜில் வைக்கும் போது, காய்கறிகளின் சத்துக்கள் குறைய ஆரம்பிப்பதோடு, சில சமயங்களில் விஷமாகவும் மாற வாய்ப்புள்ளது.
இன்று அனைவரது வீட்டிலுமே ஃப்ரிட்ஜ் உள்ளது. ஃப்ரிட்ஜ்ஜானது உணவுகளை கெட்டுப் போகாமல் ஃபிரஷ்ஷாக வைத்திருக்க உதவுகிறது. பெரும்பாலும் ஃப்ரிட்ஜில் பழங்கள், காய்கறிகள், மளிகைப் பொருட்கள், சமைத்த உணவுகளை வைத்து, தேவையான போது எடுத்து பயன்படுத்துவோம். ஆனால் இவற்றில் சமைத்த உணவுகளை முடிந்தவரை ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து பயன்படுத்துவதைத் தவிர்த்திடுங்கள். ஏனெனில் அது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.

பெரும்பாலானோர் தினமும் காய்கறிகளை வாங்க கடைக்கு செல்ல முடியாது என்று, ஒரு வாரத்திற்கு வேண்டிய காய்கறிகளை ஒரு நாளில் வாங்கி வந்து, அவற்றை ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்துவோம். ஆனால் நாம் வாங்கும் சில காய்கறிகளை ஃப்ரிட்ஜில் வைக்கக்கூடாது என்பது தெரியுமா? ஆம், சில காய்கறிகளை ஃப்ரிட்ஜில் வைக்கும் போது, காய்கறிகளின் சத்துக்கள் குறைய ஆரம்பிப்பதோடு, சில சமயங்களில் விஷமாகவும் மாற வாய்ப்புள்ளது. இப்போது எந்த காய்கறிகளை ஃப்ரிட்ஜ்ஜில் வைக்கக்கூடாது என்பதைக் காண்போம்.

தக்காளி
காய்கறிகளில் பெரும்பாலானோர் அதிகமாக வாங்கி நீண்ட நாட்கள் வைத்து பயன்படுத்தும் ஓர் காய்கறி தான் தக்காளி. இந்த தக்காளி பிரஷ்ஷாக இருக்க, பலரும் அதை ஃப்ரிட்ஜ்ஜில் வைப்பார்கள். ஆனால் உண்மையில் தக்காளியை ஃப்ரிட்ஜ்ஜில் வைப்பதை விட, வெளியே அறை வெப்பநிலையில் காற்றோட்டமாக வைத்திருப்பதே நல்லது. தக்காளியை ஃப்ரிட்ஜ்ஜில் வைக்கும் போது, குளிர்ச்சியான வெப்பநிலையால் அதன் சுவையும், சத்துக்களும் குறையும். எனவே தக்காளியை ஃப்ரிட்ஜ்ஜில் வைப்பதைத் தவிர்த்திடுங்கள்.

குடைமிளகாய்
கொரோனா பரவலுக்கு பின்னர் வைட்டமின் சி அதிகம் நிறைந்த குடைமிளகாயை நிறைய பேர் வாங்க சாப்பிட தொடங்கியுள்ளனர். மேலும் குடைமிளகாயின் சுவை தனித்துவமாக இருப்பதால், பெரும்பாலானோருக்கு இந்த காய் மிகவும் பிடிக்கும். நீங்கள் இதுவரை குடைமிளகாயை ஃப்ரிட்ஜில் வைத்து வந்தால், இனிமேல் அந்த தவறை செய்யாதீர்கள். இல்லாவிட்டால், அதன் மேற்புற தோல் சுருங்கி, சத்துக்கள் குறைய ஆரம்பிக்கும்.

வெங்காயம் மற்றும் பூண்டு
வெங்காயம், பூண்டு ஆகிய இரண்டுமே அன்றாட சமையலில் பயன்படுத்தும் காய்கறிகளாகும். நிச்சயம் இதை பலரும் அதிகளவில் வாங்குவோம். இந்த காய்கறிகளை வைக்க சிறந்த இடம் என்றால், அது வறட்சியான இடத்தில், அறைவெப்பநிலையில் தான். எனவே இவ்விரு காய்கறிகளையும் தெரியாமல் கூட ஃப்ரிட்ஜ்ஜில் வைத்துவிடாதீர்கள்.

பூசணிக்காய்
குளிர்கால காய்கறியான பூசணிக்காய் ஃப்ரிட்ஜ்ஜில் தான் இருக்க வேண்டும் என்பதில்லை. அதன் தோல் தடிமனாக இருப்பதால், இந்த காய்கறியை ஃப்ரிட்ஜ்ஜிற்கு வெளியே அறைவெப்பநிலையில் வைத்தாலே போதுமானது. ஒருவேளை பூசணிக்காயின் தோலை நீக்கிவிட்டால், அப்போது அவற்றை ஃப்ரிட்ஜில் வைத்துக் கொள்ளலாம்.

வெள்ளரிக்காய்
நிறைய பேர் வெள்ளரிக்காயை வாங்கினால் அவற்றை ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்துவார்கள். ஆனால் அப்படி செய்வது தவறு. ஏற்கனவே நீர்ச்சத்து கொண்ட வெள்ளரிக்காயை வெளியே வைத்து தான் பயன்படுத்த வேண்டும். குளிர்ச்சியான வெப்பநிலையில் வெள்ளரிக்காயை வைத்தால், அதன் சுவை மற்றும் நிறம் பாழாகிவிடும். எனவே இனிமேல் வெள்ளரிக்காயை ஃப்ரிட்ஜில் வைக்காதீர்கள்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள காய்கறிகளைத் தவிர, கத்திரிக்காய், அவகேடோ, கேரட், உருளைக்கிழங்கு போன்றவற்றையும் ஃப்ரிட்ஜில் வைப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லையெனின் அவற்றின் தோலில் சுருக்கம் ஏற்பட்டு, சத்துக்களும் குறைந்துவிடும்.



Click it and Unblock the Notifications