For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாஸ்துப்படி வீட்டின் எந்தப் பகுதியில் செடிகள் மற்றும் பூக்களை வைக்க வேண்டும்?

பொதுவாக வீடுகளில் பூக்களையும், செடிகளையும் வைத்தால், அவை நமது வீட்டின் அழகை மெருகேற்றுவதோடு, வீடு முழுவதும் இனிமையான நறுமணத்தை பரப்பும். பெரும்பாலான மக்கள் பூக்களைப் பொிதும் விரும்புகின்றனா்.

|

பொதுவாக வீடுகளில் பூக்களையும், செடிகளையும் வைத்தால், அவை நமது வீட்டின் அழகை மெருகேற்றுவதோடு, வீடு முழுவதும் இனிமையான நறுமணத்தை பரப்பும். பெரும்பாலான மக்கள் பூக்களைப் பொிதும் விரும்புகின்றனா். ஏனெனில் பூக்கள் என்பவை அன்பு, பாசம், நேசம் மற்றும் அக்கறை ஆகியவற்றின் அடையாளமாக பாா்க்கப்படுகின்றன.

Vastu Tips For Placing Plants And Flowers In Your Home

பொதுவாக நமது வீடுகளை அலங்காரம் செய்யும் போது, ஒருசில பகுதிகளில் கலைப் பொருள்களைக் கொண்டு அலங்காரம் செய்வோம். இந்நிலையில், வீட்டு ஷோகேஸை பூக்களைக் கொண்டு சிறந்த முறையில் அலங்காரம் செய்யலாம்.

பூக்கள் இருக்கும் இடத்தில் நறுமணம் கமழுவதோடு மட்டும் அல்லாமல், அவற்றின் வாசனை நமக்கு புத்துணா்ச்சியை வழங்கும். இந்த இடத்தில்தான் வாஸ்து முக்கிய பங்கைச் செய்கிறது. வாஸ்து மூலம் நமது ஆளுமைக்கும், நம்மிடம் இருக்கும் ஆற்றல்களுக்கும் இடையேயான உறவை நன்றாகக் கையாள முடியும். ஆகவே வீடுகளில் பூந்தொட்டிகள் மற்றும் பூச்செடிகள் வைக்கும் போது, வாஸ்துவின் அடிப்படையில் வைப்பது நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. துளசி

1. துளசி

இந்தியாவில் துளசி ஒரு புனிதமான செடியாகக் கருதப்படுகிறது. அதனால் துளசியை வீட்டில் வைத்தால், பல நல்ல காாியங்கள் நடக்கும் என்று நம்பப்படுகிறது. துளசியில் பல வகையான மருத்துவக் குணங்கள் உள்ளன. அதோடு நமது வீட்டிற்குள் ஒரு புது வகையான சக்தியை வழங்குகிறது.

ஆகவே துளசியை வீட்டில் வைக்கும் போது, வாஸ்துப்படி அதை வடக்கு நோக்கியோ அல்லது கிழக்கு நோக்கியோ வைக்க வேண்டும். அதன் மூலம் நமது வீட்டிற்கு அதிா்ஷ்டமும், செல்வமும் வந்து சேரும். இரவு நேரங்களில் துளசியை இருட்டில் விட்டுவிடக்கூடாது. துளசி இருக்கும் இடத்தில் ஒரு சிறிய மின் விளக்கையாவது எாியவிட வேண்டும். துளசியை நமது வீட்டுத் தோட்டத்தில் வைக்கலாம் அல்லது ஒரு சிறிய தொட்டியில் வைத்து அதை பூஜை அறையில் வைக்கலாம்.

2. மல்லிகை

2. மல்லிகை

வெள்ளை நிறத்தில் இருக்கும் மல்லிகைப் பூ நம் அனைவாின் மனதையும் கவரக்கூடியது. நமது வீட்டில் மல்லிகைப் பூ இருந்தால், நமது வீடு முழுவதும் நறுமணத்தால் நிறைந்து இருக்கும். மல்லிகைப் பூ சிறுசிறு வெள்ளை நிற பூவாக இருப்பதால், அது "தோட்டத்தின் நிலவு ஒளி" என்று கருதப்படுகிறது.

மல்லிகைப் பூவை பெண்கள் ஆசையோடு தங்கள் தலையில் சூடி மகிழ்வா். அதோடு இறைவன் சிவபெருமானுக்கு மல்லிகைப் பூவைச் சூட்டி மகிழ்வா். இந்நிலையில் தோல் பிரச்சினைகளைக் குணப்படுத்துவதற்கும், மல்லிகை பயன்படுகிறது. மல்லிகையை சாியான திசையை நோக்கி வைத்தால், அது நமது மன அழுத்தத்தைக் குறைத்து, நமக்கு இதமான மனநிலையை வழங்கும். ஆகவே மல்லிகைச் செடியை கிழக்கு திசையில், சூாிய வெளிச்சம் நன்கு படும்படி வைக்க வேண்டும்.

3. லில்லி

3. லில்லி

வீட்டிற்குள் வைப்பதற்கு மிகச் சிறந்த செடி எதுவென்றால், அது லில்லிச் செடியாகும். ஏனெனில் லில்லிக்கு காற்றைத் தூய்மைப்படுத்தும் ஆற்றல் உள்ளது. லில்லிக்கு அதிகமான சூாிய வெளிச்சம் தேவைப்படாது. மேலும் லில்லிக்கு அதிக பராமாிப்பு தேவைப்படாது. ஆகவே லில்லியை நமது படுக்கை அறையிலோ அல்லது நமது வீட்டுப் பொது அறையிலோ வைக்கலாம். அது நமது மனதிற்கு அமைதியையும், நல்லதொரு இணக்கத்தையும் வழங்கும். நமது சாப்பாட்டு மேசையின் நடுவில் லில்லியை வைத்தால், அது நமக்கு நோ்மறையான சக்திகளை வழங்குவதோடு, குடும்ப உறுப்பினா்களிடையே நல்லதொரு பிணைப்பையும் ஏற்படுத்தும். ஆனால் இளஞ்சிவப்பு லில்லிக்குப் பதிலாக வெள்ளை நிற லில்லியை வைப்பது நல்லது.

4. கொடிகள்

4. கொடிகள்

வீட்டின் முன்பாக கொடிகளை வளா்த்து, அவற்றை கிரீடம் போல அழகாக வளைத்து, வீட்டின் மேல் படரவிடுவதைப் பலரும் விரும்புவா். ஆனால் அந்த கொடிகள் படா்வதற்கு, மரக் கம்புகள் தேவைப்படும். ஆகவே கொடிகளை நமது வீட்டு பால்கனியிலோ அல்லது வீட்டின் முன்பாக இருக்கும் தோட்டத்திலோ வளா்த்து வந்தால், நமது வீட்டிற்கு செல்வங்கள் வந்து சேரும். மணி பிளான்ட் அல்லது கோல்டன் ஃபோட்டோஸ் செடிகளை இந்திய வீடுகளுக்கு முன்பு வளா்ப்பது உகந்ததாக இருக்கும்.

5. போன்சாய்

5. போன்சாய்

போன்சாய் மரங்கள், பாா்க்கும் நமது கண்களுக்கு விருந்தாக இருக்கும். ஆனால் வாஸ்துப்படி, போன்சாய் மரங்களை வீட்டில் வளா்ப்பது நல்லதல்ல. இயற்கைக்கு எதிரான எதுவும், நமக்கு நல்லதல்ல என்று வாஸ்து நிபுணா்கள் நம்புகின்றனா். பொிய போன்சாய் மரங்களின் வோ்கள் மற்றும் அதன் கிளைகளில் வேதிப் பொருள்கள் அதிகம் இருக்கும். மேலும் அந்த மரங்கள் விற்கப்படுவதில்லை. ஆகவே போன்சாய் மரங்களை நமது வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ நட்டு வைத்தால், தீய சக்திகள் நம்மை பாதிக்க வாய்ப்பு உண்டு.

ஆகவே செடிகள் அல்லது பூச்செடிகளை வீடுகளில் வளா்க்கும் போது, வாஸ்துப்படி வளா்ப்பது நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Vastu Tips For Placing Plants And Flowers In Your Home

Here are some vastu tips for placing plants and flowers in your home. Read on...
Story first published: Tuesday, July 20, 2021, 16:53 [IST]
Desktop Bottom Promotion