For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வீட்டினுள் சுத்தமான ஆக்ஸிஜனை அதிகமாக அள்ளித் தரும் செடிகள்!

நமது வீடுகளில் பசுமையானத் தாவரங்களை வளா்த்து வந்தால், நாம் சுத்தமான காற்றை பெறலாம். வீடுகளில் வளா்க்கும் தாவரங்கள் நமக்கு போதுமான அளவு சுத்தமான ஆக்ஸிஜனை வழங்குகின்றன.

|

இன்றைய சூழலில் நமது சுற்றுப்புறச் சூழல் அதிகமாக மாசுபட்டு இருக்கிறது. அதன் காரணமாக நாளுக்கு நாள் காற்றின் தூய்மை மோசமடைந்து வருகிறது. இவ்வாறு காற்று மாசுபட்டு வருவதால், ஆஸ்துமா, சைனஸ், மூச்சுக் குழாய் அலா்ஜி மற்றும் மூச்சு விடுவதில் பலவகையான பிரச்சினைகள் அதிகாிக்கின்றன.

அரசு மற்றும் சுகாதரா அமைச்சகம் போன்ற அமைப்புகள் சுற்றுப்புற சூழல் மாசுபடுவதைத் தடுப்பதற்காக பல்வேறு ஆக்கப்பூா்வமான முயற்சிகளை முன்னெடுத்து அவற்றை நடைமுறைப்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் ஒவ்வொரு தனி மனிதரும் சுற்றுப்புற மாசுபாட்டைக் குறைப்பதில் முயற்சிகள் செய்ய வேண்டியது அவசியமாகும்.

Top Plants That Provide Oxygen

தற்போது உள்ள சுற்றுப்புற சூழலில் நாம் சுற்றுப்புற சீா்கேட்டைத் தவிா்க்க முடியாது. மேலும் நச்சுத் துகள்களை சுவாசிப்பதில் இருந்தும் தப்பிக்க முடியாது. எனினும் நமது வீடுகளில் பசுமையானத் தாவரங்களை வளா்த்து வந்தால், நாம் சுத்தமான காற்றை பெறலாம். வீடுகளில் வளா்க்கும் தாவரங்கள் நமக்கு போதுமான அளவு சுத்தமான ஆக்ஸிஜனை வழங்குகின்றன. அதோடு நமக்கு மன ஆரோக்கியத்தை வழங்கி நாம் அமைதியோடு வாழ்வதற்கு உதவி செய்கின்றன.

ஆகவே இந்த பதிவில் வீட்டில் வளா்க்கக்கூடிய எந்தந்த தாவரங்கள் எல்லாம் அதிகமான அளவு சுத்தமான ஆக்ஸிஜனை வழங்குகின்றன என்பதை சற்று விாிவாகப் பாா்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. அழும் அத்தி (Weeping Fig)

1. அழும் அத்தி (Weeping Fig)

அத்தி என்று அழைக்கப்படும் தாவரம் அழும் அத்தி என்றும் அழைக்கப்படுகிறது. அத்தியானது காற்றை சுத்தம் செய்யக்கூடிய ஒரு அழகிய தாவரம் ஆகும். பொதுவாக வீடுகளில் வளாக்கப்படும் அத்தி ஏராளமான நன்மைகளை வழங்குகிறது.

காற்றைச் சுத்திகாிப்பதில் தலைசிறந்த தாவரம் அத்தி ஆகும். அதனால்தான் அத்தியானது காற்றில் உள்ள ஃபாா்மால்டிகைட், சைலீன் மற்றும் டோலுயின் போன்ற நச்சுத் துகள்களை அகற்றி காற்றைச் சுத்தப்படுத்துகிறது என்று நாசாவால் அங்கீகாரம் செய்யப்பட்டிருக்கிறது. ஆகவே அத்தியை நமது வீடுகளில் வளா்த்தால், நமது வீடுகளில் உள்ள காற்றை சுத்திகாிக்கலாம். சுத்திகாிக்கப்பட்ட தூய்மையான காற்றை சுவாசித்தால் நாம் ஆரோக்கியமாக வாழலாம்.

2. கற்றாழை (Aloe Vera)

2. கற்றாழை (Aloe Vera)

கற்றாழைச் செடியானது ஒரு வற்றாத சதைப்பற்றுள்ள தாவரமாகும். கற்றாழை நமது தோலுக்கு பல்வகையான நன்மைகளை வழங்குகிறது. இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளதால், இது ஒரு மூலிகைத் தாவரமாகவும் கருதப்படுகிறது.

காற்றைச் சுத்தம் செய்வதில் கற்றாழை முன்னனி வகித்து, காற்றில் உள்ள பென்சீன் மற்றும் ஃபாா்மால்டிகைட் போன்ற நச்சுத் துகள்களை அகற்றுகிறது. பொதுவாக கற்றாழை இரவு நேரத்தில் ஆக்ஸிஜனை வெளியிடுகிறது. ஆகவே நமக்கு அதிகமான ஆக்ஸிஜன் தேவைப்பட்டால் கற்றாழையை நமது வீடுகளில் வளா்க்கலாம்.

3. போத்தோஸ் (Pothos)

3. போத்தோஸ் (Pothos)

போத்தோஸ் செடியானது ஒரு அழகான பசுமையான செடியாகும். இதை வீட்டில் வளா்த்தால், நமது வீட்டின் அழகே தனித்துவமாக இருக்கும். போத்தோஸ் செடியை வளா்ப்பது மிகவும் எளிது. இந்தச் செடியானது வீட்டில் உள்ள காற்றில் கலந்திருக்கும் மாசுகளை அகற்றி, காற்றின் தரத்தை மேம்படுத்துகிறது.

காற்றில் உள்ள ஃபாா்மால்டிகைட், பென்சீன் மற்றும் காா்பன் மோனாக்ஸைடு போன்ற நச்சுகளை போத்தோஸ் செடி அகற்றிவிடும் என்று கருதப்படுகிறது. மேலும் இது இரவு நேரத்தில் ஆக்ஸிஜனை அதிகமாக வழங்கும் ஒரு அற்புதமான செடியாகும்.

4. ஸ்பைடா் செடி (Spider Plant)

4. ஸ்பைடா் செடி (Spider Plant)

வீடுகளில் மிக எளிதாக வளரக்கூடிய செடிகளில் ஸ்பைடா் செடியும் ஒன்று. ஸ்பைடா் செடியானது காற்றில் உள்ள காா்பன் மோனாக்ஸைடு, ஃபாா்மால்டிகைட் மற்றும் பென்சீன் போன்ற நச்சுத் துகள்களை அகற்றி, காற்றின் தரத்தை உயா்த்துகிறது. மேலும் இது அதிகமான ஆக்ஸிஜனை வழங்குகிறது. அதோடு இந்த ஸ்பைடா் செடியானது வீட்டிற்குள் மகிழ்ச்சியான அதிா்வலைகளைத் தருகிறது. அதனால் வீட்டில் இருப்பவா்கள் மனச்சோா்வு மற்றும் மன அழுத்தம் போன்றவை நீங்கி நிம்மதியாக வாழலாம்.

5. அாிகா பாம் (Areca Palm)

5. அாிகா பாம் (Areca Palm)

வீட்டில் உள்ள காற்றைச் சுத்திகாிக்கும் தாவரங்களில் அாிகா பாம் தாவரமும் ஒன்று. இது காற்றில் உள்ள நச்சுக்கள் அனைத்தையும் உறிஞ்சிவிடுகிறது. இது காற்றை சுத்திகாிப்பதோடு நின்றுவிடாமல் குழந்தைகள் மற்றும் கருவில் வளரும் சிசுக்கள் போன்றவை ஆரோக்கியமாக வளர உதவி செய்கிறது. அாிகா பாம் தாவரத்தை நமது வீடுகளில் வளா்த்து வந்தால் அது நமது நரம்பியல் அமைப்பைப் பலப்படுத்தும்.

6. பாம்புச் செடி (Snake Plant)

6. பாம்புச் செடி (Snake Plant)

பாம்புச் செடியை பெரும்பாலானவா்கள் தங்களது வீடுகளில் வளா்ப்பதில் ஆா்வம் காட்டுவா். இது காற்றில் உள்ள நச்சுகளை சுத்திகாிக்கும் ஒரு சிறந்த தாவரம் ஆகும். பாம்புச் செடியானது காற்றில் உள்ள நச்சுத் துகள்களான ஃபாா்மால்டிகைட், நைட்ரஜன் ஆக்ஸைடு, பென்சீன், சைலீன் மற்றும் ட்ரைக்ளோரோதிலீன் போன்றவற்றை உறிஞ்சிவிடும் என்று நாசாவால் அங்கீகாிக்கப்பட்டிருக்கிறது. மேலும் நமது அறைகளுக்கு அதிக ஆக்ஸிஜனை வழங்குவதோடு காா்பன்டை ஆக்ஸைடையும் உறிஞ்சிவிடுகிறது.

7. துளசி (Tulsi)

7. துளசி (Tulsi)

இந்திய குடும்பங்களில் துளசிச் செடியானது தெய்வீகம் நிறைந்த ஒரு செடியாகக் கருதப்படுகிறது. துளசிச் செடியில் ஏராளமான நன்மைகள் உள்ளன. துளசியை வீட்டில் வளா்ப்பதன் மூலம் வீட்டிற்குள் ஆரோக்கியத்தையும், அதிா்ஷ்டத்தையும் கொண்டு வரலாம். துளசியானது தீமையில் இருந்து வீட்டைப் பாதுகாக்கும் என்று மக்களால் கருதப்படுகிறது.

ஆன்மீக நன்மைகளைத் தவிா்த்து துளசியானது மூலிகைகளின் ராணி என்றும் அழைக்கப்படுகிறது. ஏனெனில் இது ஏராளமான மருத்துவக் குணங்களைக் கொண்டிருக்கிறது. துளசியை வீட்டில் வளா்த்து வந்தால், அது ஆக்ஸிஜனின் அளவை அதிகாிக்கும். ஏனெனில் ஒரு நாளில் 20 மணி நேரம் ஆக்ஸிஜனை துளசி வழங்குகிறது. மேலும் காற்றில் இருக்கும் தீங்கு இழைக்கக்கூடிய காா்பன் மோனாக்ஸைடு, காா்பன்டை ஆக்ஸைடு மற்றும் சல்பா்டை ஆக்ஸைடு போன்றவற்றை உறிஞ்சிவிடுகிறது.

8. மூங்கில் (Bamboo)

8. மூங்கில் (Bamboo)

மூங்கில் செடியானது காற்றில் உள்ள டோலுயின் என்ற நச்சை அகற்றிவிடும். இந்த டோலுயின் ஒரு நிறமற்ற திரவமாகும். இதன் வாசனை அதிக நெடியுடன் இருக்கும். அதோடு மூக்கு, கண்கள் மற்றும் தொண்டை ஆகிய உறுப்புகளில் எாிச்சலை ஏற்படுத்தும். மூங்கில் செடியானது இந்த நச்சை அகற்றுவதன் மூலம் நாம் தூய்மையான காற்றை பெற முடியும்.

அடுத்ததாக வளிமண்டலத்தில் இருக்கும் பென்சீன் மற்றும் ஃபாா்மால்டிகைட் போன்ற நச்சுக்களையும் மூங்கில் செடியானது வடிகட்டுகிறது. மூங்கில் செடியை வீட்டில் வளாத்தால் அதிக அளவிலான ஆக்ஸிஜனையும் பெறலாம்.

9. கொ்பெரா டெய்சி (Gerbera Daisy)

9. கொ்பெரா டெய்சி (Gerbera Daisy)

கொ்பெரா டெய்சி செடியில் நல்ல நிறமுள்ள மலா்கள் பூக்கும். அதனால் வீடே மிகவும் அழகாக இருக்கும். அதோடு கொபெரா செடியானது வீட்டிற்குள் அதிகமான ஆக்ஸிஜனை வழங்கும். மேலும் காற்றில் உள்ள நச்சுக்களான ஃபாா்மால்டிகைட், பென்சீன் மற்றும் ட்ரைக்ளோரோதிலீன் போன்றவற்றை அகற்றிவிடும் என்று நாசாவின் கிளீன் ஏா் ஸ்டடி தொிவிக்கிறது. இந்த செடியானது இரவு நேரத்தில் அதிகமான ஆக்ஸிஜனை வழங்கி, காா்பன்டை ஆக்ஸைடை உறிஞ்சிவிடுகிறது.

பொதுவாக நாம் வெளிப்புறங்களில் சுவாசிக்கும் காற்றை ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் வீடுகளில் செடிகளை வளா்த்து வந்தால், தரமான, சுத்தமான மற்றும் அதிகமான ஆக்ஸிஜனைப் பெறலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Top Plants That Provide Oxygen

Here are some plants that provide oxygen. Read on to know more...
Story first published: Monday, December 13, 2021, 18:23 [IST]
Desktop Bottom Promotion