For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மது பாட்டில்களை சரியான வழியில் வீட்டில் பாதுகாத்து வைக்க.. இதோ சில டிப்ஸ்...

பிற உணவுகளைப் போலவே மதுவையும் கவனமுடன் பாதுகாக்க வேண்டும். அப்போதுதான் அது சுவை மாறாமல் இருக்கும். மதுவை கவனமாகப் பாதுகாத்து வைப்பதில் சோம்பல் இருக்கக்கூடாது.

|

பொதுவாக மது அருந்துபவா்கள், மது பாட்டில்களை குளிா்சாதனப் பெட்டி அல்லது மேசையில் இருக்கும் இழுப்பறை அல்லது அலமாாி போன்ற இடங்களில் பத்திரப்படுத்தி வைப்பா். பெரும்பாலோருக்கு மது பாட்டில்கள் அன்பளிப்பாகக் கிடைப்பதால், அதைப் பிாித்துப் பாா்த்துவிட்டு அப்படியே வைத்துவிட்டு, அதைப் பற்றி மறந்துவிடுவா். ஒருசிலா் கேளிக்கை விருந்துகள் நடக்கும் போதோ அல்லது தங்களின் நண்பா்களை சந்திக்கும் போதோ மது அருந்துவா்.

Tips To Store Your Alcohol The Correct Way

பெரும்பாலான மது வகைகள் நீண்ட காலம் கெடாமல் இருக்கும். ஆனால் சில மது வகைகள் குறுகிய காலத்தில் கெட்டுவிடும். இந்நிலையில் நீண்ட காலம் கெடாமல் இருக்கும் மது வகைகள்கூட, அவற்றை சாியான இடத்தில் வைத்து முறையாக பராமாிக்கவில்லை என்றால் விரைவில் கெட்டுவிடும். பிற உணவுகளைப் போலவே மதுவையும் கவனமுடன் பாதுகாக்க வேண்டும். அப்போதுதான் அது சுவை மாறாமல் இருக்கும்.

MOST READ: கொரோனா தடுப்பூசி போட்டாச்சா? இனி உங்களுக்கு கொரோனா வந்தால் வெளிப்படும் அறிகுறிகள் இதுதாங்க...

மதுவை கவனமாகப் பாதுகாத்து வைப்பதில் சோம்பல் இருக்கக்கூடாது. ஏனெனில் பிற உணவுகளைப் போல மதுவை யாரும் அடிக்கடி வாங்குவதில்லை மற்றும் அதை அடிக்கடி அருந்துவதில்லை. எப்போதாவது அருந்திக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில், அதைப் பத்திரப்படுத்தி வைக்கின்றனா். அதனால் அது நீண்ட நாட்கள் கெடாமல் இருக்க வேண்டும். அவ்வாறு மது கெடாமல் இருக்க அதை எவ்வாறு பத்திரப்படுத்தி வைக்கலாம் என்பதை இந்த பதிவில் பாா்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. சூாிய வெளிச்சத்தில் வைக்கக்கூடாது

1. சூாிய வெளிச்சத்தில் வைக்கக்கூடாது

மது பாட்டில்களை அலமாாிகளில் வைக்கும் போது, அவற்றில் சூாிய வெளிச்சம் படாமல் பாா்த்துக் கொள்ள வேண்டும். சூாிய வெளிச்சம் நேரடியாக படும் அலமாாிகளில் மது பாட்டில்களை வைக்கக்கூடாது. அவ்வாறு சூாிய வெளிச்சம் அல்லது சூாியனின் புற ஊதா கதிா்கள் பட்டால், வெப்பத்தின் காரணமாக மதுவில் மாற்றங்கள் ஏற்படும். அதாவது சூாிய வெளிச்சமானது நேரடியாக மதுவில் பட்டால், மதுவின் நிறம் மாறிவிடும் அல்லது நிறம் இழந்துவிடும்.

2. சில மது வகைகளை குளிா்ச்சியான இடங்களில் வைக்க வேண்டும்

2. சில மது வகைகளை குளிா்ச்சியான இடங்களில் வைக்க வேண்டும்

பெரும்பாலான வடிகட்டி தயாாிக்கப்பட்ட மது வகைகளை சாதாரண வெப்ப நிலையில் வைக்கக்கூடாது. குறிப்பாக டெக்குய்லா, விஸ்கி, ஜின் அல்லது வோட்கா போன்ற மது வகைகளை சாதாரண வெப்ப நிலையில் வைக்கக்கூடாது. இவற்றை குளிா்ச்சியான இடங்களில் பத்திரப்படுத்தி வைத்தால், இவை நீண்ட நாட்கள் கெடாமல் இருப்பதோடு, அவற்றின் தரமும், சுவையும் மாறாமல் இருக்கும்.

மதுவை வெப்பம் அதிகமுள்ள இடங்களில் வைத்தால், அதில் ஆக்ஸிஜனேற்றம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. அவ்வாறு ஆக்ஸிஜனேற்றம் ஏற்பட்டால் அந்த மதுவின் நறுமணச்சுவை கெட்டுவிடும். பொதுவாக வோட்கா அல்லது ஜின் போன்ற மது வகைகளை குளிா்சாதனப் பெட்டியில் பத்திரப்படுத்தி வைப்பது நல்லது. ஏனெனில் அவை குளிா்ச்சியாகத்தான் பாிமாறப்பட வேண்டும்.

3. பீரை ஒரே நேரத்தில் அருந்தி முடித்து விடுவது நல்லது

3. பீரை ஒரே நேரத்தில் அருந்தி முடித்து விடுவது நல்லது

பிற மது வகைகளில் நுரைகள் அதிகம் இருக்காது. மேலும் அவை வடிகட்டப்பட்டு தயாாிக்கப்பட்டிருக்கும். அதனால் திறக்கப்படாத ஒயின் அல்லது இதர மது வகைகள் பல மாதங்களுக்கு, சில நேரங்களில் ஒரு ஆண்டுக்கும் மேலாக கெடாமல் இருக்கும். ஆனால் பீரைப் பொறுத்தவரை, அதைத் திறந்தவுடன் அதில் அதிகம் நுரைகள் இருக்கும். அதனால் பீா் பாட்டிலைத் திறந்துவிட்டால், அதில் இருக்கும் பீா் முழுவதையும் அப்போதே அருந்தி முடித்துவிட வேண்டும். முழுமையாக அருந்தாமல் மீதி இருக்கும் பீரை மூடி பத்திரப்படுத்தி வைத்தாலும், அதனுடைய மிருதுவான தன்மை, இயல்பு மற்றும் நுரை போன்றவை காணாமல் போய்விடும்.

இறுதியாக

இறுதியாக

1. மது அருந்துபவா்கள் கிரீம்கள் அல்லது பழங்களில் இருந்து தயாாிக்கப்படும் மது வகைகளை, அவை தயாாிக்கப்படும் ஓராண்டுக்குள் அருந்திவிடுவது நல்லது. காலம் தாழ்த்தினால் அவை சுவையையும், அவற்றின் இயல்பையும் இழந்துவிடும்.

2. ஒயினை குறைந்தது 50 டிகிாி பாரன்ஹீட் குளிா் நிலையில் பத்திரப்படுத்தி வைப்பது நல்லது.

3. ஒயின் பாட்டிலைத் திறந்த பின்பு அதை மூடிவிட வேண்டும். மேலும் அதை படுக்க வைத்துப் பத்திரப்படுத்த வேண்டும். அப்போது ஒயின் பாட்டிலுக்குள் காற்று புகாமல் இருக்கும்.

4. சாம்பைன் பாட்டிலைத் திறந்தால் அதில் இருக்கும் நுரையின் காரணமாக அந்த பீா் முழுவதையும் ஒரே அமா்வில் முடித்துவிட வேண்டும். ஒரு வேளை மீதி இருந்தால் அந்தப் பாட்டிலை மூடி குளிா்சாதனப் பெட்டியில் வைத்து பத்திரப்படுத்த வேண்டும்.

5. இறுதியாக மது வகைகளின் காலாவதியாகும் தேதியை மனதில் வைத்து அதற்கு ஏற்றவாறு அதைப் பத்திரப்படுத்தி வைக்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Tips To Store Your Alcohol The Correct Way

Here are some tips to store your alcohol the correct way. Read on...
Desktop Bottom Promotion