Latest Updates
-
Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்திக்கு என்னலாம் செய்வாங்க-ன்னு தெரியுமா? -
2026-ன் சூப்பர் எல் நினோ இந்தியாவிலும், உலகிலும் ஏற்படுத்தப்போகும் பாதிப்புகள் - எச்சரிக்கும் விஞ்ஞானிகள் -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. -
முகலாய அரசர்கள் விரும்பி சாப்பிட்ட ஷாஹி புலாவ் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
கால்களில் இந்த பிரச்சனைகளை அடிக்கடி சந்திக்கிறீங்களா? அப்ப உடம்புல இந்த பிரச்சனை இருக்க வாய்ப்பிருக்கு.. உஷார் -
மின்விசிறியை விட AC ஏன் அதிக மின்சாரத்தை பயன்படுத்துகிறது? 1 மணி நேரம் AC ஓடினால் எவ்வளவு கரண்ட் செல்வாகும்? -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகியுள்ள மாளவ்ய ராஜயோகம்: அடுத்த 2 மாதம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
அரிசி மாவு ரொட்டியும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 03 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம் -
புதன் கன்னி ராசியில் உதயமாவதால் ஜெயிக்கிற குதிரையாக ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
2023-ல் இருந்து உங்கள் வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கணுமா? அப்ப வாஸ்துப்படி இத செய்யுங்க...
வரக்கூடிய 2023 ஆம் ஆண்டில் உங்களின் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறவும், அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கவும், பண பிரச்சனையைக் குறைக்கவும் உங்கள் வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும் வாஸ்து குறிப்புகளை பின்பற்றுங்கள்
2022 ஆம் ஆண்டில் இருந்து உங்கள் வாழ்வில் பிரச்சனைகள் அதிகம் உள்ளதா? எந்த ஒரு காரியத்திலும் வெற்றி கிடைப்பதில்லையா? கடன் தொல்லை அதிகரித்துவிட்டதா? விரும்பிய முடிவுகள் எதுவும் கிடைக்கவில்லையா? அப்படியானால் இவை அனைத்திற்கும் உங்கள் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல் காரணமாக இருக்கலாம். ஆம், வாஸ்துப்படி, ஒருவரது வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகமாக நிறைந்திருந்தால் அந்த வீட்டில் உள்ளோர் முன்னேறுவதில் தடையை சந்திப்பதோடு, வாழ்வில் பல பிரச்சனைகளையும் சந்திப்பார்களாம்.

எனவே வரக்கூடிய 2023 ஆம் ஆண்டில் உங்களின் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறவும், அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கவும், பண பிரச்சனையைக் குறைக்கவும் உங்கள் வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும் வாஸ்து குறிப்புகளை பின்பற்றுங்கள். கீழே அந்த வாஸ்து குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை பின்பற்றி நன்மையைப் பெறுங்கள்.

வாசல் சுத்தம்
வீட்டின் வாசலானது எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். ஏனெனில் நேர்மறை ஆற்றல் வீட்டில் வாசல் வழியாகத் தான் வீட்டினுள் நுழையும். இந்நிலையில் வாசல் அசிங்கமாக, அழுக்காக இருந்தால், நேர்மறை ஆற்றலுக்கு பதிலாக எதிர்மறை ஆற்றல் தான் வீட்டினுள் நுழையும். எனவே தினமும் வீட்டின் வாசலை சுத்தம் செய்ய வேண்டும்.

விண்ட் சைம்கள்
வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றலை வெளியேற்ற வேண்டுமானால், வீட்டினுள் ஒரு விண்ட் சைம்களை வாங்கி தொங்க விடுங்கள். இதனால் காற்றடிக்கும் போது அந்த விண்ட் சைம்களில் இருந்து வரும் ஒலியானது வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றலை உடைத்தெறிந்து, நேர்மறை ஆற்றல் ஓட்டத்தை அதிகரிக்கும்.

கல் உப்பு
வாஸ்துவில் கல் உப்பு எதிர்மறை ஆற்றலை நீக்க உதவும் அற்புத பொருளாக கருதப்படுகிறது. அதற்கு வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் ஒரு பௌல் கல் உப்பை நிரப்பி வைக்க வேண்டும். இப்படி செய்வதனால், வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல் அனைத்தும் உறிஞ்சப்பட்டு, நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும்.

எலுமிச்சை
வாஸ்துப்படி எலுமிச்சையும் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றலை நீக்க உதவுகிறது. அதற்கு ஒரு கண்ணாடி டம்ளரில் நீரை நிரப்பி, அதில் ஒரு எலுமிச்சையைப் போட்டு, வீட்டின் ஹாலில் வைக்க வேண்டும். இந்த நீர் மற்றும் எலுமிச்சையை ஒவ்வொரு சனிக்கிழமையும் மாற்ற வேண்டும். இப்படி செய்வதன் மூலமும் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றலை வெளியேற்றலாம்.

நெய் விளக்கு
வாஸ்துப்படி வீட்டில் நல்லெண்ணெய் விளக்கை ஏற்றுவதை விட, நெய் விளக்கை தினமும் ஏற்றி கடவுளை வழிப்பட்டால், வீட்டினுள் உள்ள எதிர்மறை ஆற்றல் அழிக்கப்பட்டு, நேர்மறை ஆற்றல் ஓட்டம் அதிகரிக்கும்.

உப்பு, மஞ்சள் தூள், குங்குமம்
வீட்டினுள் எதிர்மறை ஆற்றல் நுழையாமல் இருக்க, இரண்டு சிறிய மண்குவளையில் கல் உப்பை நிரப்பி, மேலே சிறிது மஞ்சள் தூள் மற்றும் குங்குமம் சேர்த்து, வீட்டு வாசலின் இருபுறமும் வைக்க வேண்டும். இப்படி வைப்பதால், எதிர்மறை ஆற்றல் வீட்டினுள் நுழையாமல் இருப்பதோடு, திருஷ்டி படாமலும் இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications