Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
சமையலறையில் இந்த பொருட்கள் இருந்தா உடனே தூக்கிப் போடுங்க.. இல்ல துரதிர்ஷ்டம் தான் வரும்...
பொதுவாக வாஸ்துப்படி இல்லாத வீட்டில் வாஸ்து தோஷத்தால் பணப் பற்றாகுறை ஏற்படும் என்பது ஐதீகம். இது தவிர வீட்டுச் சமையலறையில் ஒருசில பொருட்களை வைத்திருப்பது துரதிர்ஷ்டத்தை வரவழைக்கும்.
நாம் குடியிருக்கும் வீடு வாஸ்துப்படி இருந்தால் தான், வீட்டுச் சூழல் அமைதியாகவும், இனிமையாகவும் இருக்கும் மற்றும் வீட்டில் உள்ளோர் வாழ்வில் முன்னேற்றத்தைக் காண முடியும். வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டில் இருக்கும் சமையலறையானது மனிதனின் ஆரோக்கியம் மற்றும் முன்னேற்றத்தில் பெரிய விளைவை ஏற்படுத்துகிறது. அதனால் தான் ஒரு வீட்டில் சமையலறை சரியான திசையில் இருக்க வேண்டும்.

பொதுவாக வாஸ்துப்படி இல்லாத வீட்டில் வாஸ்து தோஷத்தால் பணப் பற்றாகுறை ஏற்படும் என்பது ஐதீகம். இது தவிர வீட்டுச் சமையலறையில் ஒருசில பொருட்களை வைத்திருப்பது துரதிர்ஷ்டத்தை வரவழைக்கும். இப்போது சமையலறையில் வைத்திருக்கக்கூடாத அந்த பொருட்களைப் பற்றி காண்போம்.

உடைந்த பாத்திரங்கள்
சமையலறையில் எப்போதும் உடைந்த பாத்திரங்களை அல்லது வெடித்த பாத்திரங்களை வைத்திருக்கக்கூடாது. ஏனெனில் இம்மாதிரியான பாத்திரங்கள் எதிர்மறை ஆற்றலை அதிகரிக்கும். மேலும் குடும்பத்தில் பிரச்சனைகள் அதிகரிப்பதோடு, வீட்டில் உள்ளோரின் முன்னேற்றத்தில் இடையூறும் ஏற்படும்.

சமையலறையில் துடைப்பம் கூடாது
உங்கள் வீட்டு சமையலறையில் துடைப்பத்தை வைத்திருந்தால், உடனே அதை அப்புறப்படுத்துங்கள். வாஸ்து சாஸ்திரத்தின் படி, சமையலறையில் துடைப்பத்தை வைத்திருக்கக்கூடாது. சமையலறையில் துடைப்பம் வைப்பதால் வீட்டில் குழப்பம் அதிகரிக்கும். வீட்டில் உள்ளோரின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். நிதி நிலை மோசமடையத் தொடங்கும்.

பூச்சிக்கொல்லி மருந்துகள்
வாஸ்துப்படி, பூச்சிக்கொல்லி மருந்துகளை சமையலறையில் வைத்திருக்கக்கூடாது. இது வீட்டில் எதிர்மறை ஆற்றலை அகிரிக்கும். இது தவிர, சமையல் செய்யும் அறையில் பூச்சிக்கொல்லிகளை வைத்திருப்பது மிகவும் ஆபத்தானதும் கூட. எனவே உங்கள் வீட்டு சமையலறையில் இருந்தால், உடனே அதை அப்புறப்படுத்துங்கள்.

கண்ணாடி கூடாது
உங்கள் வீட்டின் சமையலறையில் கண்ணாடி இருக்கிறதா? அப்படியென்றால் அந்த கண்ணாடியை முதலில் எடுத்துவிடுங்கள். ஏனெனில் வாஸ்துப்படி சமையலறையில் கண்ணாடி இருந்தால், அது வீட்டில் எதிர்மறை ஆற்றலை அதிகரிக்கும். அதோடு வீட்டில் உள்ளோருடன் பிரச்சனை அதிகரித்து, விலகல் ஏற்படும்.

குப்பைத் தொட்டி
உங்கள் வீட்டு சமையலறையில் குப்பைத் தொட்டி இருந்தால், அதை சமையலறையின் வடகிழக்கு மூலையில் வைத்திருப்பதைத் தவிர்த்திடுங்கள். இல்லாவிட்டால் அது துரதிர்ஷ்டத்தை தருவதோடு, வீட்டின் அமைதியை சீர்குலைக்கும். முக்கியமாக குப்பைத் தொட்டி முடியவாறு இருக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications