For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொசுக்கள் உங்க வீட்டிற்குள் நுழையாமல் இருக்க இந்த எளிய தந்திரங்களை சரியாக செய்தால் போதுமாம் தெரியுமா?

நாம் இந்தியா போன்ற வெப்பமண்டல நாட்டில் வசிக்கும் போது, கொசு இல்லாத வீட்டைப் பெறுவது என்பது நிறைவேறாத கனவாகவே இருக்கிறது.

|

நாம் இந்தியா போன்ற வெப்பமண்டல நாட்டில் வசிக்கும் போது, கொசு இல்லாத வீட்டைப் பெறுவது என்பது நிறைவேறாத கனவாகவே இருக்கிறது. நம்மில் பெரும்பாலோர் கொசு விரட்டி ஸ்ப்ரே அல்லது கொசுவத்திகள் அல்லது திரவங்கள் வீட்டிற்குள் இருக்கும் கொசுக்களை அகற்றும் என்று நம்பிக்கொண்டிருக்கிறோம். ஆனால் இவற்றில் பெரும்பாலானவை இரசாயனங்கள் நிறைந்தவை மற்றும் சுவாசிப்பதில் சிரமத்தை உருவாக்குவது தவிர வீட்டில் உள்ளவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் குறிப்பாக குழந்தைகளுக்கு.

How to Keep Mosquitoes Away From Home Naturally in Tamil

மலேரியா, டெங்கு மற்றும் மஞ்சள் காய்ச்சல் போன்ற கொசுக்களால் பரவும் ஆபத்தான நோய்களைத் தவிர, கொசுக்கள் தூக்கத்தைக் கெடுப்பதன் மூலம் மிகவும் எரிச்சலூட்டும், ஏனெனில் கொசு கடித்த பிறகு நீண்ட நேரம் அரிப்பு இருக்கும், மேலும் அவை எழுப்பும் சத்தம் உங்களை தூங்க விடாமல் தடுக்கும். சில எளிய வழிகளின் மூலம் கொசுக்களிடம் இருந்து நாம் தப்பிக்கலாம். இயற்கையான வழிகளில் கொசுக்களை எப்படிக் கட்டுப்படுத்தலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உங்கள் வீட்டிற்குள் கொசுக்கள் வருவதை நிறுத்துங்கள்

உங்கள் வீட்டிற்குள் கொசுக்கள் வருவதை நிறுத்துங்கள்

கொசுக்கள் இல்லாத வீட்டை நீங்கள் விரும்பினால், முதலில் கொசுக்கள் உங்கள் வீட்டிற்குள் நுழையவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். சாயங்காலம் மற்றும் சூரியன் மறையும் போது, உங்கள் நுழைவாயிலில் கொசுவலைகள் இணைக்கப்படவில்லை என்றால், எல்லா கதவுகளையும் ஜன்னல்களையும் இறுக்கமாக மூடவும். சூரிய ஒளி ஒரு குறிப்பிட்ட அளவிற்கு கொசுக்களை விலக்கி வைத்தாலும், அந்தி வேளைக்குப் பிறகு அவை மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும். கொசுக்கள் வீட்டிற்குள் நுழையக்கூடிய கதவுகள் மற்றும் ஜன்னல்களைச் சுற்றியுள்ள இடத்தைத் தடுக்கும் கதவு பட்டைகளை ஆன்லைனில் வாங்கலாம். இவை உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

வீட்டிற்குள் கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்க வேண்டும்

வீட்டிற்குள் கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்க வேண்டும்

வீட்டிலேயே கொசுக்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்று நீங்கள் யோசித்தால் உங்கள் வீட்டிற்குள் எங்காவது கொசுக்கள் உற்பத்தியாகிறதா என்பதை நீங்கள் சரிபார்க்க வேண்டும். உங்கள் ஏசி அல்லது தோட்டத்தில் உள்ள குளம் தண்ணீர் கொசுக்களின் இனப்பெருக்கம் செய்யும் இடமாக இருக்கலாம். வீட்டிற்குள் பழைய பொருட்களை அடுக்கி வைக்கும் ஸ்டோர்ரூம், சமையலறை மாடி போன்ற இடங்களில் கொசுக்கள் கூடு கட்ட வாய்ப்புள்ளதால், அவ்வப்போது அவற்றை சுத்தம் செய்யவும். உங்கள் வீட்டைச் சுற்றிலும் கொசுக்கள் குறைவாக இருக்க உங்கள் வீட்டிற்கு வெளியே உள்ள பள்ளங்களை நிரப்பவும், மேலும் வடிகால்களை மூடி அடிக்கடி சுத்தம் செய்யவும்.

கொசுக்களை விரட்டும் செடிகளை வளர்க்கவும்

கொசுக்களை விரட்டும் செடிகளை வளர்க்கவும்

வீட்டிற்குள்ளிருந்து கொசுக்களை விரட்ட எளிய வழி கொசு விரட்டி செடிகளை வீட்டிற்குள் வைப்பது. கொசுக்கள் இல்லாத வீட்டிற்கு இந்த செடிகளை உங்கள் அறைக்குள் அல்லது உங்கள் மேசைகளில் வைக்கலாம். இவற்றில் சில தாவரங்கள் கொசுக்களை மட்டுமல்ல, மற்ற பூச்சிகள் மற்றும் எலிகளையும் தடுக்கும். இந்த தாவரங்கள் பொதுவாக சிறியதாக இருக்கும், எனவே கொசுக்களை வீட்டிலேயே கட்டுப்படுத்த எளிதாக வீட்டிற்குள் வைக்கலாம். சாமந்தி, துளசி, எலுமிச்சை மரம் மற்றும் புதினா போன்ற உட்புற கொசு விரட்டி தாவரங்களை வளர்க்கலாம்.

MOST READ: 2022-ல் இந்த 5 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டம் துரத்தி துரத்தி அடிக்கப்போகுதாம்..கடவுள்தான் காப்பாத்தணும்!

எலுமிச்சை மற்றும் கிராம்புகளை வீட்டைச் சுற்றி வைக்கவும்

எலுமிச்சை மற்றும் கிராம்புகளை வீட்டைச் சுற்றி வைக்கவும்

கொசு இல்லாத வீட்டைப் பெறுவதற்கு முயற்சித்த மற்றும் பரிசோதிக்கப்பட்ட முறைகளில் ஒன்று கிராம்புகளுடன் எலுமிச்சையைப் பயன்படுத்துவதாகும். கிராம்பு மற்றும் சிட்ரஸ் வாசனையை கொசுக்கள் வெறுக்கின்றன. எனவே எலுமிச்சையை இரண்டாக நறுக்கி, கிராம்புகளை இரண்டு பகுதிகளிலும் குத்தி வையுங்கள். வீட்டிற்குள் கொசுக்களை விரட்ட இந்த கிராம்பு கலந்த எலுமிச்சையை தட்டுகளில் வைக்கவும். இது ஒரு இயற்கை மற்றும் பாதிப்பில்லாத உட்புற கொசு விரட்டியாகும்.

பூண்டு ஸ்ப்ரே

பூண்டு ஸ்ப்ரே

ரசாயனம் கலந்த கொசு ஸ்ப்ரேக்களை நீங்கள் பயன்படுத்த விரும்பவில்லை என்றால், கொசு இல்லாத வீட்டிற்கு பூண்டு ஸ்ப்ரே பயனுள்ளதாக இருக்கும். சில பூண்டு பற்களை நசுக்கி அல்லது நறுக்கி தண்ணீரில் சிறிது நேரம் கொதிக்க வைக்கவும். கரைசலை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, வீட்டைச் சுற்றி தெளித்து, வீட்டில் கொசுக்களை கட்டுப்படுத்தலாம். பூண்டு பல நற்பண்புகளைக் கொண்டுள்ளது மற்றும் வீட்டில் கொசுக்களை தவிர்க்க இவற்றைப் பயன்படுத்தலாம். பூண்டின் துர்நாற்றம் கடுமையானதாக இருக்கும், ஆனால் அது கொசுக்களை உடனடியாகக் கொல்லும்.

சோப்பு நீர்

சோப்பு நீர்

சோப்பு நீர் உள்ள ஒரு பாத்திரம் உட்புற கொசு விரட்டியாக செயல்படும் என்பது உங்களுக்குத் தெரியுமா? வீட்டில் கொசுக்களைக் கட்டுப்படுத்த, உங்கள் வீட்டிற்குள் ஒரு பெரிய பாத்திரத்தில் சோப்பு தண்ணீரை வைக்கலாம். பாத்திரம் குமிழிகளால் மூடப்பட்டிருக்கும் அளவுக்கு சோப்பு உள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும். இதற்கு நீங்கள் ஒரு பாத்திரம் கழுவும் சோப்பு அல்லது துணி துவைக்கும் சோப்பைப் பயன்படுத்தலாம். கொசுக்கள் தண்ணீரால் ஈர்க்கப்படுகின்றன. ஆனால் அவர்கள் இந்த சோப்பு நீரில் அமர்ந்தவுடன், அவை குமிழிகளில் சிக்கி இறந்துவிடும், இதனால் கொசு இல்லாத வீட்டை உங்களுக்கு வழங்குகிறது.

MOST READ: இந்தியாவின் கொரோனா தடுப்பூசிகள் புதிய கொரோனா பிறழ்வான ஓமிக்ரானைத் தடுக்குமா? ஆய்வுகள் சொல்வது என்ன?

ஆல்கஹால்

ஆல்கஹால்

நீங்கள் பீர் அல்லது வேறு ஏதேனும் மது அருந்தினால், வீட்டிற்குள் இருக்கும் கொசுக்களை வெளியேற்ற இது ஒரு சிறந்த வழியாகும். கொசுக்களை கட்டுப்படுத்த உங்கள் வீட்டில் பீர் அல்லது ஆல்கஹாலை ஒரு சிறிய பாத்திரத்தில் வைத்தால் போதும். பீர் மற்றும் ஆல்கஹால் வாசனையை கொசுக்கள் தாங்க முடியாது, மேலும் இந்த முறை வீட்டிலிருந்து கொசுக்களை அகற்றும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How to Keep Mosquitoes Away From Home Naturally in Tamil

Read to know how to keep mosquitoes away from home naturally.
Desktop Bottom Promotion