For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மறந்தும் இந்த உணவுகளை ஃப்ரிட்ஜில் வெச்சுடாதீங்க.. இல்லைன்னா அது விஷமாயிடும்...

அனைத்து உணவுப் பொருட்களையுமே ஃப்ரிட்ஜில் வைக்கக்கூடாது. ஒருசில உணவுகளை ஃப்ரிட்ஜில் வைத்தால், அது விஷத்தன்மையாகிவிடும். உங்களுக்கு எந்த உணவுப் பொருட்களை ஃப்ரிட்ஜில் வைக்கக்கூடாது என்று தெரியாதா?

|

தற்போது அனைவரது வீட்டிலும் ஒரு அத்தியாவசிய பொருளாக ஃப்ரிட்ஜ் உள்ளது. இது உணவுப் பொருட்கள் விரைவில் கெட்டுப் போகாமல் நீண்ட நாட்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள உதவும் ஒரு பொருளாகும். நாம் பெரும்பாலும் காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்கள் நீண்ட நாட்கள் வர வேண்டும் என்று அவற்றை ஃப்ரிட்ஜில் வைப்போம்.

Foods You Should Never Store In The Fridge

ஆனால் அனைத்து உணவுப் பொருட்களையுமே ஃப்ரிட்ஜில் வைக்கக்கூடாது. ஒருசில உணவுகளை ஃப்ரிட்ஜில் வைத்தால், அது விஷத்தன்மையாகிவிடும். உங்களுக்கு எந்த உணவுப் பொருட்களை ஃப்ரிட்ஜில் வைக்கக்கூடாது என்று தெரியாதா? அப்படியானால் இக்கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் கீழே எக்காரணம் கொண்டும் ஃப்ரிட்ஜில் வைக்கக்கூடாத உணவுப் பொருட்களின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வாழைப்பழம்

வாழைப்பழம்

வாழைப்பழங்களுக்கு அறை வெப்பநிலை இரண்டு காரணங்களுக்காக தேவைப்படுகிறது. வெதுவெதுப்பான வெப்பநிலையில் வாழைப்பழம் நன்கு வேகமாக பழுக்கும் மற்றும் ஒளி மற்றும் காற்று வாழைப்பழம் சிதைவதை மெதுவாக்குகிறது.

காபி

காபி

உலகில் ஏராளமானோர் விரும்பி பருகும் ஓர் பானம் தான் காபி. இந்த காபி பொடியை ஃப்ரிட்ஜில் வைத்தால், அது அதைச்சுற்றியுள்ள பிற சுவைகளை எடுக்க அதிக வாய்ப்புள்ளது. எனவே காபி பொடியை ஃப்ரிட்ஜில் வைப்பதற்கு பதிலாக, காற்றுப் புகாத ஒரு டப்பாவில் போட்டு மூடி வையுங்கள்.

தக்காளி

தக்காளி

காய்கறிகளுள் தக்காளியை நாம் ஃப்ரிட்ஜில் வைப்போம். தக்காளியை ஃப்ரிட்ஜில் வைப்பதால் நீண்ட நாட்கள் பிரஷ்ஷாக இருப்பது போன்று இருக்கும். ஆனால் அதை ஃப்ரிட்ஜில் வைத்தால், அதன் இயற்கை சுவை நீங்கி மாறிவிடும்.

தேன்

தேன்

பொதுவாக தேன் கெட்டுப் போகாத ஒரு உணவுப் பொருள். இதை ஃப்ரிட்ஜில் வைக்காமல் இருப்பதே நல்லது. ஒருவேளை வைத்தால், அது தேனின் சுவையை விரும்பத்தகாததாக ஆக்கும். எனவே தேனை ஃப்ரிட்ஜில் வைப்பதற்கு பதிலாக, ஒரு காற்றுப்புகாத பாட்டிலில் ஊற்றி வையுங்கள்.

பிரட்

பிரட்

சாண்விட்ச் செய்ய நீங்கள் பிரட் வாங்கினால், உங்களுக்கு விருப்பமான சாண்விட்ச் செய்வதற்கு உலர்ந்த பிரட் துண்டுகளை விரும்பினால், அதை ஃப்ரிட்ஜில் வைத்துக் கொள்ளுங்கள். இல்லை மென்மையான பிரட் துண்டுகள் தான் வேண்டுமெனில், அதை வெளியே வைத்திருங்கள்.

எண்ணெய்

எண்ணெய்

தேன், காய்கறி, ஆலிவ், தேங்காய் மற்றும் பிற சமையல் எண்ணெய்கள் போன்றவற்றை ஃப்ரிட்ஜில் வைத்தால், அவை விரைவில் திடமாகிவிடும். எனவே இந்த பொருட்களை ஃப்ரிட்ஜில் வைப்பதற்கு பதிலாக, குளிர்ந்த மற்றும் இருண்ட அலமாரியில் வைத்திருங்கள்.

தர்பூசணி, முலாம் பழம்

தர்பூசணி, முலாம் பழம்

கோடையில் தர்பூசணி, முலாம் பழம் போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்களை கடைகளில் அதிகமாக காணலாம். ஆனால் இந்த பழங்களை எக்காரணம் கொண்டும் ஃப்ரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தக்கூடாது. இவற்றை வெட்டாமல் வைத்திருந்தால், சாதாரணமாக அறை வெப்பநிலையில் நீண்ட நாட்கள் இருக்கும். அவற்றை வெட்டிவிட்டால், பின்னர் குளிர்சாதன பெட்டியில் வைக்கலாம்.

அவகேடோ/வெண்ணெய் பழம்

அவகேடோ/வெண்ணெய் பழம்

கனியாத அவகேடோ பழங்களை ஃப்ரிட்ஜில் வைத்தால், அப்பழத்தின் பழுக்க வைக்கும் செயல்முறை கடினமாக இருக்கும். அதற்கு பதிலாக, அவற்றை வெளியே வைத்திருப்பது தான் மிகச்சிறந்தது.

வெங்காயம்

வெங்காயம்

வெங்காயத்தை ஒருபோதும் ஃப்ரிட்ஜில் வைத்து சேமிக்கக்கூடாது. வெங்காயம் நல்ல காற்றோட்டமான பகுதியில் இருந்தால் தான், நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் நற்பதமாக இருக்கும். ஃப்ரிட்ஜில் வைத்தால், விரைவில் கெட்டுப்போய்விடும்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு நீண்ட நாட்கள் சிறப்பாக இருக்க வேண்டுமெனில், அவற்றை அறை வெப்பநிலையில் சேமித்துக் வைக்க வேண்டும். உருளைக்கிழங்குகளை எக்காரணம் கொண்டும் ஃப்ரிட்ஜில் வைத்து சேமிக்கக்கூடாது. அதேப் போல் உருளைக்கிழங்கை வெங்காயத்துடன் சேர்த்தும் வைக்கக்கூடாது. அப்படி வைத்தால், விரைவில் கெட்டுப்போய்விடும்.

பூண்டு

பூண்டு

பூண்டும் வெங்காயத்தைப் போல் அறைவெப்பநிலையில், நல்ல காற்றோட்டமான பகுதியில் இருந்தால் தான் நீண்ட நாட்கள் சிறப்பாக இருக்கும். எனவே நீங்கள் வாங்கிய பூண்டு நீண்ட நாட்கள் வரவேண்டுமானால், அவற்றை ஃப்ரிட்ஜில் வைத்துவிடாதீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Foods You Should Never Store In The Fridge

Here are some foods you should never store in the fridge. Read on...
Desktop Bottom Promotion