For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வீட்டிலும், சுற்றுப்புறத்திலும் மறைந்திருக்கும் கொரோனா வைரஸை எப்படியெல்லாம் விரட்டலாம்?

|

உலக அளவில் 3 லட்சத்திற்கும் அதிகமானோரை தாக்கி தனது ருத்ர தாண்டவத்தை அரங்கேற்றி வரும் COVID-19 எனும் கொரோனா வைரஸ் சீனாவின் வுஹான் நகரில் உருவானது என்பது அனைவருக்குமே தெரிந்தது தான். இந்த வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு சுலபமாக பரவக் கூடியது என்பதால் தான் கண்ணுக்கு தெரியாத இதை கண்டு அனைவரும் பயப்பட வேண்டியதாக உள்ளது.

இந்த வைரஸ் தாக்கினால் உடனே தெரியாது என்பதும் பயத்திற்கு மிகப் பெரிய காரணம் என்றும் கூறலாம். இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஆளானவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். மேற்கொண்டு இந்த வைரஸ் பரவாமல் இருப்பதற்காகவே இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

MOST READ: மக்களே உஷார்! கொரோனாவின் அறிகுறி வெறும் காய்ச்சல், சளி மட்டுமல்ல... இதுவும் கொரோனாவோட அறிகுறி தானாம்...

பொதுவாக இந்த வைரஸ் தாக்கப்பட்ட ஒருவர், அவருக்கு அது தெரிய வருவதற்கு முன்பே, அவருக்கு தெரியாமலேயே ஏராளமானோருக்கு பரப்பி விடுவது தான் இதன் மிக கவலைக்கிடமான ஒரு விஷயம். அதற்காக தான், தெரிகிறதோ இல்லையோ வீட்டிலேயே இருந்துவிடுவது நல்லது என ஆராய்ச்சியாளர்களும், மருத்துவர்களும் திரும்ப திரும்ப அறிவுறுத்தி வருகின்றனர். அதை செவி கொடுத்து கேட்டு பின்பற்றி வந்தாலே நோய் தொற்று மேற்கொண்டு பரவாமல் தடுத்திடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வீட்டில் இருந்தால் மட்டும் வைரஸ் தொற்று ஏற்படாதா?

வீட்டில் இருந்தால் மட்டும் வைரஸ் தொற்று ஏற்படாதா?

வீட்டிலேயே தங்கிவிட்டால் மட்டும் வைரஸ் தொற்று ஏற்படாதா? என்று பலரும் கேட்பது புரிகிறது. வீட்டில் இருந்தால் மட்டும் போதாது. நம் வீட்டையும், நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். ஏனென்றால், இந்த வைரஸ் மனித உடலை தவிர்த்து, வெளிபரப்பில் கூட 3 நாட்கள் உயிருடன் இருக்குமாம்.

சமீபத்தில் நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசினில் ஆசிரியருக்கு எழுதிய கடிதமாக வெளியிடப்பட்ட ஆய்வு முடிவில், கொடிய வைரஸ் பிளாஸ்டிக் மற்றும் எஃகு மேற்பரப்பில் மூன்று நாட்கள் அல்லது 72 மணி நேரம் வரை வாழக்கூடும் என்றும், சிறிய துகள்கள் அல்லது நீர்த்துளிகள் மூன்று மணி நேரமும், தாமிரத்தில் 4 மணி நேரம் மற்றும் அட்டைப் பெட்டியில் 24 மணி நேரமும் வரை வாழக்கூடியது. அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனங்களால் நிதியளிக்கப்பட்ட இந்த ஆய்வின் ஆய்வாளர்கள், இந்த வைரஸின் ஸ்திரத்தன்மை சோதனை செய்யப்பட்ட சோதனை சூழ்நிலைகளின் கீழ் SARS-CoV-1 ஐப் போன்றது என்பதைக் கண்டறிந்தனர். இருப்பினும், எதையும் உறுதியாகச் சொல்வதற்கு முன்பு கூடுதல் ஆராய்ச்சி தேவை என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

மற்றொரு ஆய்வு...

மற்றொரு ஆய்வு...

தி ஜர்னல் ஆஃப் ஹாஸ்பிடல் இன்ஃபெக்ஷனின் மற்றொரு ஆய்வு, அந்த மேற்பரப்பு கிருமி நீக்கம் செய்யப்படாவிட்டால், மனித கொரோனா வைரஸ்கள் உலோகம், கண்ணாடி அல்லது பிளாஸ்டிக் மேற்பரப்புகள் உள்ளிட்ட உயிரற்ற மேற்பரப்புகளில் ஒன்பது நாட்கள் வரை உயிர்வாழ முடியும் என்று கூறுகிறது. எனவே, கொரோனா வைரஸை விலக்கி வைப்பதற்கான சரியான வழி என்றால், கிருமிநாசினி மற்றும் சுத்திகரிப்பான் கொண்டு சுத்தப்படுத்துவது தான். யு.எஸ். சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் (இபிஏ) ஒத்த அல்லது கடினமாகக் கொல்லக்கூடிய வைரஸ்களில் பயனுள்ள தயாரிப்புகளின் பட்டியலைத் தொகுத்துள்ளது. இந்த புதிய கொரோனா வைரஸான COVID-19 வைரஸிலும் இவை வேலை செய்யக்கூடும்.

யு.எஸ். சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் கூறும் தீர்வு

யு.எஸ். சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் கூறும் தீர்வு

க்ளோராக்ஸ் (Clorox) கிருமிநாசினி துடைப்பான்கள் மற்றும் துப்புரவு பொருட்கள், லைசோல் (Lysol) கிருமிநாசினி தெளிப்பு மற்றும் ப்ளீச் மற்றும் ஹைட்ரஜன் பெராக்சைடு கொண்ட கிளீனர்கள், ப்யூரெல் மல்டி மேற்பரப்பு (Purell Multi Surface) கிருமிநாசினி தெளிப்பு மற்றும் மைக்ரோபன் (Microban) 24 மணிநேர பல்நோக்கு கிளீனர் பயனுள்ளதாக இருக்கும் என்று அவர்கள் கூறுகிறார்கள். இருப்பினும் இந்த தயாரிப்புகள் எதுவும் புதிய கொரோனா வைரஸ் மீது இதுவரை சோதிக்கப்படவில்லை.

வேறு என்ன செய்யலாம்?

வேறு என்ன செய்யலாம்?

சுத்திகரிப்பு என்பது கிருமிநாசினிக்கு சமமானதல்ல. சுத்திகரிப்பு என்பது கிருமிகளை குறைக்கும். ஆனால் கிருமிநாசினி பயன்படுத்துவது அந்த கிருமிகளைக் கொல்லும். சந்தையில் கிடைக்கும் எந்தவொரு தயாரிப்புகளும் ஒரு அழுக்கான மேற்பரப்பை முழுமையாக சுத்திகரிக்கவோ அல்லது கிருமிகளை நீக்கவோ செய்யாது. நீங்கள் கிருமிகளை நீக்குவதற்கு முன்பு சாதாரண சோப்பை, தண்ணீரில் கலந்து சுத்தம் செய்ய வேண்டும். நீங்கள் ஒரு பங்கு தண்ணீருக்கு 1/3 கப் வழக்கமான குளோரின் ப்ளீச் (சோடியம் ஹைபோகுளோரைட்) சேர்த்து சுத்தமான மேற்பரப்புகளைத் துடைக்கப் பயன்படுத்தலாம். ஒரு சிறு பகுதிக்கு, நீங்கள் 4 டீஸ்பூன் வழக்கமான குளோரின் ப்ளீச் மற்றும் 1/4 பங்கு தண்ணீரைப் பயன்படுத்தலாம். கலவைக்கு முன் மற்றும் கரைசலைப் பயன்படுத்தும் போது கையுறைகளை அணிய வேண்டியது அவசியம். எஃகை இது அழிக்கக்கூடும் என்பதால் எஃகு மீது பயன்படுத்துவதை தவிர்க்கவும். 70 சதவீத ஐசோபிரைல் ஆல்கஹால் கொண்ட தேய்க்கும் ஆல்கஹால்களையும் நீங்கள் பயன்படுத்தலாம்.

சோப்பு நீர்

சோப்பு நீர்

வினிகர் பயன்பாடு எந்த பாதுகாப்பையும் வழங்காது. நீங்கள் சோப்பு மற்றும் தண்ணீரைப் பயன்படுத்தலாம். இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பல்வேறு தயாரிப்புகளை இணைப்பதைத் தவிர்ப்பது நல்லது. மேலும், கிருமிநாசினியால் சுத்தப்படுத்தும் போது அறையை நன்கு காற்றோட்டமாக வைத்திருக்க மறவாதீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Coronavirus: Know How To Eliminate COVID-19 Virus From Surfaces And Homes

Want to know how to eliminate COVID-19 virus or coronavirus from surfaces and homes? Read on...