Latest Updates
-
புதன் உருவாக்கும் பத்ரா ராஜயோகம்: செப்டம்பரில் இந்த 4 ராசிக்கு நிறைய லாபமும், தொழிலில் வளர்ச்சியும் ஏற்படும்.. -
தென்னிந்தியாவின் மிகப்பெரிய மாவட்டம் எது? இது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் லட்டு - இப்படி செய்யுங்க.. 10 நாளானாலும் கெட்டுப்போகாது! -
ஹரியாலி வெஜ் புலாவ் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்தியில் நிகழும் அரிய கிரக நிலைகளால் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்! -
வாகனங்களின் டயர்கள் ஏன் எப்போதும் கருப்பு நிறத்தில் மட்டுமே இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
வாழைத்தண்டு பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிகள் அனைவரின் முகத்திலும் சிரிப்பை கொண்டுவரும் தூய ஆன்மாவாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ச்சலின் போது எந்த உணவுகளை சாப்பிடலாம்? எதை சாப்பிடக்கூடாது? - விளக்கும் டாக்டர்! -
ஐயங்கார் ஸ்டைல் சுட்ட கத்திரிக்காய் மசியல் ரெசிபி - செஞ்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க
இந்த 9 பொருளையும் தெரியாமகூட பெட்ரூம்ல வெக்காதீங்க... செல்வம் வீட்டைவிட்டு போயிடும்...
நீங்கள் உங்கள் படுக்கையறையில் வசதியாக, நிம்மதியாக உறங்க சில விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். அவற்றில் பல கவனத்தில் படாத சிறிய விஷயங்கள் என்றாலும் அந்த அறையில் உள்ள பொருட்கள் உங்கள் சக்தி மற்றும் மன நல
படுக்கையறையை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்பவரா?

அல்லது தூங்குவதுக்குத்தானே எப்படி இருந்தால் என்ன என்று நினைப்பவரா? சரி எது எப்படி இருந்தாலும் கீழே கொடுத்துள்ள வழிமுறைகளைப் பின்பற்றினால் உங்கள் வீட்டிலும் புழங்குவதற்கு நிறைய இடம் கிடைக்கும்;

பெட்ரூம்
உங்களுக்குத் தெரியுமா சில பொருட்களை நாம் நமது படுக்கை அறையில் வைக்கக்கூடாது என்பது? சில பொருட்களை நமது படுக்கை அறையில் அறவே தவிர்ப்பது நல்லது. அவை என்னென்ன என்பதைத் தெரிந்து கொள்ள மேலும் படிக்கவும்.
உங்கள் வீட்டின் அல்லது படுக்கையறையின் நல்லிணக்கம் சிலவற்றால் உருவாக்கப்படுகிறது. நீங்கள் உங்கள் படுக்கையறையில் வசதியாக, நிம்மதியாக உறங்க சில விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். அவற்றில் பல கவனத்தில் படாத சிறிய விஷயங்கள் என்றாலும் அந்த அறையில் உள்ள பொருட்கள் உங்கள் சக்தி மற்றும் மன நல விழிப்புணர்வுடன் தொடர்புடையவை.

மலர்கள்
பலர் தங்கள் வீடுகளில் எல்லா இடங்களிலும் மலர்களை உபயோகிப்பர். உங்கள் படுக்கையறையில் இதை உபயோகிப்பது நல்லதல்ல. இதில் ஒன்றும் புராண ரகசியமெல்லாம் இல்லை. இவை நம் படுக்கையறையில் இருக்கும் ஆக்ஸிஜனை உறிஞ்சிக்கொள்ளும். அதனால் நமக்கு கிடைக்கும் பிராண வாயு சக்தி தடைபடும். ஃபெங் ஷூய் நிபுணர்கள் மலர்கள் நம்பிக்கையின்மை மற்றும் துரோகம் செய்யும் பண்பை வெளிப்படுத்துவதாய் கூறுகின்றனர். இதனால் திருமண வாழ்க்கையில் பிரச்சனைகளை ஏற்படுவதாகவும் சொல்கின்றனர். மேலும், படுக்கையறையில் போதிய வெளிச்சமின்மையால் மலர்கள் சீக்கிரம் வாடிவிடும். இது நல்லதல்ல. மேலும் தாவரங்களில் உள்ள தூசுகள் ஒவ்வாமையை ஏற்படுத்தும். ஆனால் செடிகளால் சில நன்மைகள் ஏற்படுவதையும் மறுக்க முடியாது. அறைகளின் வெப்பத்தை குறைத்து, சப்தத்தை குறைத்து நல்ல உணர்வுகளை மேம்படுத்துகின்றன.

பிரகாசமான நிறங்கள்
ஆரஞ்சு, சிவப்பு, மற்றும் மஞ்சள் நிறங்கள் வெப்பத்தை பிரதிபலிக்கின்றன. இவ்வகை நிறங்களை படுக்கையறையில் உபயோகப்படுத்தும்போது அமைதியற்ற நிலையையே உணர்வர். அவர்கள் நேர்மறை எண்ணங்களோடு இருக்க அதிக ஆசைப்பட்டாலும், பேராசையையும், பொறாமையும் இந்த நிறங்கள் ஊக்குவிக்கின்றன. இதற்கு பதிலாக பழுப்பு சார்ந்த நிறங்கள் படுக்கையறைக்கு ஏற்றது.

தொலைக்காட்சி, கம்பியற்ற (வயர்லெஸ்) இணைப்புகள்
படுத்துக்கொண்டே தொலைக்காட்சி பார்ப்பது பலருக்கும் விருப்பமான பொழுது போக்கு. ஆனால் படுக்கையறையில் தொலைக்காட்சி உபயோகிப்பது நல்லது அல்ல. தொலைக்காட்சி மற்றும் வை-பை ரவுட்டர்கள் போன்ற கம்பியற்ற இணைப்புகள் தீங்கு விளைவிக்கும் கதிர்வீச்சுகளை வெளியிடுகின்றன. அவற்றை உங்கள் அறையிலிருந்து அகற்ற முடியாவிட்டால், குவார்ட்ஸ் கற்களை உங்கள் அறையில் வைக்கவும். குவார்ட்ஸ் கற்களுக்கு கதிர்வீச்சு அலைகளை உறிஞ்சும் சக்தி இருக்கிறது.

ஒழுங்கற்ற அலமாரி
நீங்கள் அலமாரிகளை ஒழுங்காக அடுக்காமல் மூடி வைத்திருந்தாலும், அது நல்லதல்ல. இவை நல்ல சக்தி நம் அறையினுள் நுழையாமல் செய்துவிடும். இவை அறையில் நுழையும் நல்ல சக்திகளை தடுத்து விடும். தேவையற்ற பொருட்களை நாம் நீக்காமல் இருந்தால் அது நல்ல பொருட்கள் வருவதையும் தடுத்து விடும்.

கண்ணாடி
ஃபெங் ஷூயி விடுக்கும் எச்சரிக்கைகளில் முக்கியமானது கண்ணாடியை நாம் ஓய்வெடுக்கும் அறையில் வைக்க கூடாது என்பதும் ஒன்று. கண்ணாடிகள் சக்தியை பிரதிபலிக்கும். இரவில் நம் உடலில் இருந்து வெளியேறும் சக்தி இதன் வழியே பயணிக்கும். எனவே கண்ணாடியை வேறு அறைக்கு மாற்றுவது நல்லது. அல்லது கண்ணாடியை, தூங்கும் போது நம்மை பிரதிபலிக்காதவாறு படுக்கையறையின் வேறு இடத்திற்கு மாற்றுவது நல்லது.

ஒழுங்கற்ற மேசை
ஒழுங்கற்ற அலமாரியை போலவே ஒழுங்கற்ற மேசையும் நல்லதல்ல. படுக்கையறையில் உள்ள மேசை மீது எல்லா பொருட்களையும் வைக்காதீர்கள். இது பார்ப்பதற்கு நன்றாக இருக்காது, மேலும் இது எந்த ஒரு வேலையையும் திட்டமிட்டு முடிக்க முடியாத மனநிலையை ஏற்படுத்தி விடும். ஆழ்மனதில் இருந்து உங்கள் மனம் அன்றாட வாழ்க்கையில் இதை செயல்படுத்திவிடும்.

மின் விசிறி
ஃபெங் ஷூய் நிபுணர்கள், ஓயாமல் சுற்றிக்கொண்டிருக்கும் மின் விசிறி தொடர்ந்து கை (chi சக்தியை) வெளியேற்றும். இது ஆழ்ந்த உறக்கத்தை தடுக்கும். ஏர் கண்டிஷனர் அல்லது தரையில் வைக்கும் மின்விசிறிகள் படுக்கையறைக்கு நல்லது. இதை ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு மாற்ற முடியும் என்கின்றனர்.

படுக்கையின் கீழ்
பலரும் படுக்கையின் கீழே தேவையற்ற பெட்டிகள் மற்றும் தேவையற்ற பொருட்களை போட்டு வைக்கின்றனர். அவ்வாறு செய்வது மோசமான யோசனை. உங்கள் அறையில் நீங்கள் தவிர்க்க வேண்டிய விஷயங்களில் இது முக்கியமான ஒன்றாகும். இந்த பொருட்கள் நம் சக்தியை உறிஞ்சி அதன் சுழற்சியை தடுத்து விடும். மேலும் நமக்கு வரும் புதிய வாய்ப்புகளைத் தடுத்து விடும். உங்கள் துணையிடமும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி விடும். உங்கள் படுக்கையின் கீழ் எதையும் வைத்திருக்காமல், அது குறைந்தபட்சம் தரையில் இருந்து 5 சென்டிமீட்டர் இடைவெளி இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும். இது அங்கே ஓய்வு எடுக்கும் நபரின் அதிகாரத்தையும், பணியில் உயர்வையும் அதிகரிக்க உதவுகிறது.
உடற்பயிற்சி சாதனங்கள்
உடற்பயிற்சி செய்வது மிகவும் நல்லது. ஆனால் உடற்பயிற்சி சாதனங்களை படுக்கையறையில் வைக்கக் கூடாது. இவை நமது ஆற்றலை திசை திருப்பி, நம் கவனத்தை திசை திருப்பும், நமது நோக்கத்தை மாற்றிவிடும். நல்ல ஓய்வுவுக்கான சிந்தனையை குறைத்து விடும்.
உங்கள் தனிப்பட்ட இடத்தை மேம்படுத்துவதோடு, இந்த பரிந்துரைகளைப் பின்பற்றுவதன் மூலம் சிறப்பாகச் செயல்படவும், உங்கள் செயல்திறன், மனநிலை மற்றும் மற்றவர்களுடன் உள்ள உங்கள் உறவு ஆகியவற்றில் ஒவ்வொரு நாளும் நல்ல முன்னேற்றத்தை நீங்கள் காண்பீர்கள். உங்கள் அறையில் இந்த நல்ல விஷயங்களை பின்பற்றினால், விரைவில் எதிர்மறை சூழலை நீக்கிவிடலாம் என்பது உறுதி!



Click it and Unblock the Notifications