இந்த மழைல வீட்டு சுவர்ல்லாம் இப்படி ஈரமா இருக்கா?... எப்படி சரி பண்ணலாம்?

ஈரப்பதம் பல வீட்டு உபயோக பொருட்களுக்கும் குறிப்பாக ஈரமான பகுதிகளில் அமைந்துள்ள வீடுகளுக்கு ஒரு உண்மையான பிரச்சனையாகும்.

By Vijaya Kumar

உங்கள் வீட்டுச்சுவர் ஈரமாக இருக்கிறதா, இருந்தால் எச்சரிக்கை தேவை இவை உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு உடல் நோய்களை ஏற்படுத்தலாம்.

home and garden

ஈரப்பதம் பல வீட்டு உபயோக பொருட்களுக்கும் குறிப்பாக ஈரமான பகுதிகளில் அமைந்துள்ள வீடுகளுக்கு ஒரு உண்மையான பிரச்சனையாகும். அதிர்ஷ்டவசமாக, ஈரப்பதத்தின் பாதிப்புகளை தடுக்க உதவும் சில எளிய தந்திரங்கள் உள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிக்கல்கள்

சிக்கல்கள்

ஈரப்பதம் வெளிப்புறத்தை போலவே, 60% அல்லது 70% க்கும் மேலான உட்புற ஈரப்பதம் சதவிகிதம் இருந்தால் உயர்வாகக் கருதப்படுவதோடு இது பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும். அவற்றில் சில

• பூச்சிகள்.

• துர்நாற்றம்.

• பாக்டீரியா மற்றும் பூஞ்சை.

•சுவர்கள் மற்றும் மூலைகளில் அச்சு.

•சொத்து மற்றும் பிற பொருட்கள் மோசமடைவது

ஈரப்பதம் கொண்ட வீட்டில் வசிக்கும் போது நமக்கு ஒவ்வாமை, சுவாச பிரச்சனைகள் ஏற்படலாம். ஆகையால் ஈரப்பதத்தை வீட்டில் இருந்து போக்குவது மிக முக்கியமானதாகும். உங்கள் வீட்டில் உள்ள ஈரப்பதத்தை போக்க சில வழிமுறைகளை காண்போம்

காற்றோட்டம்

காற்றோட்டம்

உங்கள் வீட்டிலேயே சரியான காற்றோட்டத்தை நீங்கள் எப்பொழுதும் பராமரிக்க வேண்டும்.குறிப்பாக ஈரப்பதம் அதிகமாக இருக்கும் இடத்தில் கவனம் தேவை .ஜன்னல்கள்களை முடிந்த அளவுக்கு திறந்து வைத்திருங்கள், அதுவும் போதவில்லை என்றல் மின்விசிறியை பயன்படுத்தி உங்கள் வீட்டை புத்துணர்வாக வைத்திருங்கள் .

மறுபுறம் அதிகமான காற்றோட்டத்தையும் அனுமதிக்காதீர், ஏனனில் நாம் சுவாசிக்கும் காற்றில் ஈரப்பதம் தேவையாக இருக்கிறது ஈரப்பதம் சில நோய்கள் மற்றும் நாசி நெரிசல் ஆகிவற்றை தடுக்கிறது

காரணங்கள்

காரணங்கள்

உங்கள் வீட்டில் ஈரப்பதம் ஏற்பட்டிருப்பதை கண்டால் அது ஏன் ஏற்பட்டிருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்

கண்ணுக்கு புலப்படாத பகுதிகளில் குழாய் உடைந்தோ அல்லது கசிவு ஏற்பட்டு இருக்கலாம், இதனால் உங்கள் வீடு சுவற்றில் அவை படிப்படியாக வளர்த்து கறியாக பிரதிபலிக்கும், நீங்கள் உடனடியாக இந்த கசிவை சரி செய்யவில்லையெனில், நிலை மோசமாகி, வெள்ளம் ஏற்படலாம். இது நடக்கக்கூடும் !

Dehumidifier ஈரப்பதமகற்றி

Dehumidifier ஈரப்பதமகற்றி

இதன் பயன்பாடு மழை மற்றும் குளிர் பிரேதேசங்களில் சரியானது

இது போன்ற பகுதிகளில் உள்ள வீடுகளில் காற்றோட்டத்திற்கான வசதிகள் குறைவாக இருப்பதால் ஈரப்பதம் எளிதில் உருவாகிறது .

நீங்கள் ஈரப்பதத்தை போக்கவிரும்பினால் இந்த கருவியை பயன்படுத்துங்கள் , மின்கட்டணத்தை நினைத்து பயம் வேண்டாம் , ஏசி க்கு ஆகும் மின்சாரமே இதற்கும் ஆகும் , இந்த சாதனம் பல்வேறு அளவுகள் மற்றும் திறன்களில் கிடைக்கிறது.

உப்பு

உப்பு

இது சாத்தியம் என்று உங்களால் நம்பமுடிகிறதா ஆம் இப்போ உங்களுக்கு தேவைப்படுவதெல்லாம் ஒரு தப்பவில்லை ஒருகிலோ உப்பு மட்டுமே

ஈரப்பதம் உள்ள பகுதிகளில் உப்பு டப்பாவை வைத்துவிடுங்கள் இரண்டு நாட்களில் ஈரப்பதத்தை அகற்றிவிடும் .உப்பு ஈரத்தை உறிஞ்சும் தன்மை அதிகம் உடையது ,உப்பை ஈரப்பதத்தை போக்குவதற்கு மட்டுமில்லாமல் ஆடைகளில் உள்ள கறைகளை போக்குவதற்கும் பயன்படும் .

டப்பாவில் உள்ள உப்பு அதிக ஈரமாகவோ அல்லது கறுப்பாகவோ மாறியிருந்தால் நீங்கள் உப்பை மற்றும் நேரம் என்பதை உணருங்கள்

வேறு தந்திரங்கள்

வேறு தந்திரங்கள்

மேற்கூறப்பட்ட பரிந்துரையையும் தவிர்த்து, உங்கள் வீட்டில் நுழைந்திருக்கும் அல்லது உருவாகிருக்கும் ஈரப்பதத்தைத் தடுப்பது மிகவும் முக்கியம். கீழ்வரும் எளிமையான உதவிக்குறிப்புகளைப் பின்பற்றவும்:

சமையல் செய்யும் போது சிமினியை ஆன் செய்து கொள்ளுங்கள். ஹீட்டரை 20 ° C க்கும் மேலாக கூட்டாதீர் இது சுவர்கள் மற்றும் பிற பகுதிகளில் ஈரப்பதத்தை உருவாக்கும்

உங்கள் துணிகளை துவைத்து வெளியில் காயப்போடுங்கள் அவற்றை உள்ளே விட்டுவிட்டால், அவற்றின் ஈரப்பதம் அறை முழுவதும் பரவிவிடும்.

செடிகள்

செடிகள்

இறுதியாக, உங்கள் வீட்டிலுள்ள இயற்கை விளக்குகள் மற்றும் காற்று போன்றவற்றை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.

நீங்கள் உங்கள் வீட்டில் சூரிய ஒளி படர ஏற்றவாறு ஜன்னல்கள் மற்றும் கதவுகளை வைத்திருக்க வேண்டும்.

உங்கள் வீட்டிற்குள் காற்று எளிதாக சுழல உங்கள் வீடு பொருட்களை மறுசீரமைக்க வேண்டும்.

இந்த குறிப்புக்கள் ஈரப்பதத்தை அகற்றி உங்களை நோயற்ற

வாழ்வையளிக்கவல்லது

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Saturday, May 26, 2018, 13:10 [IST]
Desktop Bottom Promotion