For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வீட்டிற்கு வடக்கு திசை ஜன்னல் வைப்பதன் அவசியம் என்ன? - வாஸ்து குறிப்புகள்!

வாஸ்து குறிப்பு: வடக்கு திசையில் ஜன்னல் வைப்பதால் வருமானம் பெருகுமா?என்பது பற்றி இங்க கூறப்பட்டுள்ளது.

|

வடக்கு பக்கமாக ஜன்னல் வைத்து அமைத்து கட்டப்பட்ட வீடுகளுக்கு தனி சிறப்பு இருக்கிறது என வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர். அதிலும், முக்கியமாக, வடக்கு பக்கமாக குறைந்த பட்சம் இரண்டு அடி காலியான இடம் விட்டு காம்பவுண்ட் கட்டும் வீடுகளுக்கு சிறப்பு அதிகம் என்றும் கூறப்படுகிறது.

வடக்கு திசைக்கு அதிபதி குபேரன் என குறிப்பிடப்படுகிறது. சோமன் தான் குபேரனின் அதிதேவதை. குபேர கடாட்சம் விரும்பும் நபர்கள் வீட்டில் வடக்கு ஜன்னல் அமைத்து கட்டுவது நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நிதி குவியல்கள்!

நிதி குவியல்கள்!

மஹாபத்மம், பத்மம், சங்கம், மகரம், கச்சபம், முகுந்தம், குந்தம், நீலாகர்வம் எனும் ஒன்பது வித நிதிக் குவியல்கள் குபேரனிடம் இருக்கின்றன. இவற்றில் சங்கமம், பத்மமும் முதல் நிலை தகுதி பெரும் நிதிகள் என குறிப்பிடப்படுகின்றன.

கோடீஸ்வர பூதங்கள்!

கோடீஸ்வர பூதங்கள்!

சங்கநிதி, பத்மநிதி என்பவர்கள் தஞ்சை பெரிய கோவிலும் நுழைவாயில் பகுதியில் இருபுறமும் அமைந்திருக்கும் கோடீஸ்வர பூதங்கள் ஆவர்கள். இதை எளிதாக நீங்கள் கவனிக்க முடியும்.

கோயில் வழக்கம் !

கோயில் வழக்கம் !

கோயில்களில் கோபுரங்களின் ஈசானிய மூலையில் இருந்து வாயுள் மூளைக்கு வருகிற பகுதியில் தான் குபேரனின் சிற்பங்கள் அமைந்திருக்கும். இது தான் வழக்கம்.

அதே போல வீடுகளில் கூட பண வைக்கும் பெட்டி, பை, பீரோ போன்றவற்றை வடக்கு திசை நோக்கி வைத்தால் நல்ல பலன் கிடைக்கும் என வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர்.

பாரம்!

பாரம்!

வடக்கு திசையில் வீட்டின் பொது சுவர் இருப்பது உங்கள் தோளில் நீங்களே பாரம் ஏற்றி வைத்துக் கொள்வது போல. இது எந்த திசை நோக்கி வாசல் கொண்டிருக்கும் வீடுகளுக்கும் பொருந்தும்.

வடக்கில் ஒளிவீச வேண்டும்!

வடக்கில் ஒளிவீச வேண்டும்!

நீங்கள் வசிக்கும் வீட்டின் வாசல் எத்திசை நோக்கி இருப்பினும், வடக்கு திசையில் சூரிய வெளிச்சம் படும்படி அமைக்க வேண்டும். இதற்கு ஏற்ப வடக்கு திசையில் ஜன்னல் அமைப்பது வீட்டின் வருமானத்தை பெருக செய்யும் என வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: home வீடு
English summary

Vastu Rule of North Faced Window and Its Economical Benefits

Vastu Rule of North Faced Window and Its Economical Benefits
Desktop Bottom Promotion