For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க பாத்ரூமை சுத்தி கப்பு அடிக்குதா? அதைப் போக்க இதோ சில ட்ரிக்ஸ்...

|

சிலரது வீடுகளில் கழிவறை மற்றும் குளியலறையைச் சுற்றி கடுமையான துர்நாற்றம் வீசும். என்ன தான் பினாயில் போட்டு கழுவினாலும், சிறிது நேரம் கழித்து மீண்டும் துர்நாற்றம் வீசத் தொடங்கும். பலருக்கு இதை எப்படி தடுப்பது மற்றும் போக்குவது என்று தெரியாது.

யாருக்குமே கழிவறை மற்றும் குளியலறையை சுத்தம் செய்யப் பிடிக்காது தான். இருந்தாலும், வாரத்திற்கு ஒருமுறை அதனை சுத்தம் செய்தால் தான், துர்நாற்றம் வீசுவது தடுக்கப்படுவதோடு, கிருமிகளால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதைத் தடுக்க முடியும்.

இக்கட்டுரையில் வீடு மற்றும் கழிவறை, குளியலறையில் வீசும் துர்நாற்றத்தைத் தடுப்பதற்கான மற்றும் அழகாக வைத்துக் கொள்வதற்கான சில எளிய வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஷவர்

ஷவர்

உங்கள் ஷவர் அசிங்கமாக உள்ளதா? அப்படியெனில் ஷவரில் உள்ள அழுக்குகளைப் போக்க, ஆப்பிள் சீடர் வினிகர் உதவும். அதற்கு ஒரு பிளாஸ்டிக் கவரில் ஆப்பிள் சீடர் வினிகரை ஊற்றி, அதனை ஷவரில் ரப்பர் பேண்ட் பயன்படுத்திக் கட்ட வேண்டும்.

முக்கியமாக இப்படி கட்டும் போது, ஆப்பிள் சீடர் வினிகரில் ஷவர் முழுமையாக மூழ்கி இருக்குமாறு செய்யுங்கள். பின் ஒரு மணிநேரம் கழித்து, அதனை தேய்த்துக் கழுவினால், ஷவர் பளிச்சென்று புதிது போன்று மின்னும்.

வாஷிங் மெஷின்

வாஷிங் மெஷின்

வாஷிங் மெஷினை சுத்தம் செய்ய ஓர் எளிய வழியென்றால், வாஷிங் மெஷினில் சுடுநீரை நிரப்பி, அதில் 1/4 கப் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து சில நிமிடங்கள் ஓட வைத்து, பின் அணைத்துவிட வேண்டும். 1 மணிநேரம் கழித்து மீண்டும் நன்கு வேகமாக ஓட வைத்து, நீரை வெளியேற்றினால் வாஷிங் மெஷின் அழகாக புதிது போல் காட்சியளிக்கும்.

தரை மற்றும் டைல்ஸ்

தரை மற்றும் டைல்ஸ்

தரை அசிங்கமாக கறையுடன் இருந்தால், 1/2 கப் பேக்கிங் சோடாவில், 1/4 கப் ஹைட்ரஜன் பெராக்ஸைடு மற்றும் 1 டீஸ்பூன் சோப்பு தூள் பயன்படுத்தி கலந்து, தரையில் ஊற்றி தேய்த்து கழுவ தரை பளிச்சென்று மாறும்.

பாத் டப்/குளியல் தொட்டி

பாத் டப்/குளியல் தொட்டி

குளியல் தொட்டியில் உள்ள அழுக்கை முழுமையாக வெளியேற்ற, கிரேப் ஃபுரூட் மற்றும் கல் உப்பு பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு கிரேப் ஃபுரூட்டை இரண்டாக வெட்டி, குளியல் தொட்டியில் உப்பைத் தூவி, பின் பாதி கிரேப் ஃபுரூட்டைக் கொண்டு தேய்த்து, பின் கழுவ வேண்டும்.

இதே முறையை காய்கறி வெட்டும் பலவையிலும் பயன்படுத்தினால், நல்ல பலன் கிடைக்கும்.

சின்க்/ பாத்திரம் கழுவும் தொட்டி

சின்க்/ பாத்திரம் கழுவும் தொட்டி

நீங்கள் பாத்திரம் கழுவும் தொட்டியில் துரு பிடித்திருந்து, அதை நீக்க வேண்டுமானால், இம்முறை உதவியாக இருக்கும். அதற்கு எலுமிச்சை சாற்றில் பொட்டாசியம் பைட்ரேட் சேர்த்து கலந்து, டூத் பிரஷ் கொண்டு தொட்டியில் தேய்த்து, பின் நீரால் கழுவ வேண்டும்.

கழிவறை

கழிவறை

உங்கள் கழிவறையை சுத்தமாக்குவதற்கு நேச்சுரல் வழி வேண்டுமானால், எலுமிச்சை, பேக்கிங் சோடா மற்றும் ஆப்பிள் சீடர் வினிகர் கலந்த கலவையால் சுத்தம் செய்யுங்கள். இதனால் கழிவறையில் உள்ள அழுக்குகள் நீங்குவதோடு, கழிவறையும் துர்நாற்றமின்றி இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Tricks To Clean Your Bathroom Fast And Easily

Here are some simple tricks to clean your bathroom fast and easily. Read on to know more...
Story first published: Thursday, July 7, 2016, 15:27 [IST]
Desktop Bottom Promotion