For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாஷிங் மெஷினில் துவைக்கிறீர்களா? கவனம் தேவை

பல நேரங்களில், நாம் நமக்கு உதவி புரியும் இயந்திரங்களை பயன்படுத்தும் பொழுது, நாம் வசதியாக சில அடிப்படை விதிகளை மறந்து விடுகின்றோம். அவை துணி சுருங்குதல் அல்லது பாழாவது போன்றவற்றில் முடிவடைகின்றது.

By Batri Krishnan
|

வாஷின் மெஷின் உங்களின் வாழ்க்கையை எளிதாக மாற்றி விட்டது என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை; ஆனால் அது உங்களின் விலையுர்ந்த ஆடைகளை பாழாக்கிக் கொண்டிருக்கிறது.

நீங்கள் உங்களின் விலையுர்ந்த துணிகளை பாதுக்காக்க வேண்டுமெனில் நீங்கள் உங்களின் துணி உலர்த்தியை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

Avoid dryer to dry cloths

எனவே, துணிகள் சுருங்குவது அல்லது பாழாவது போன்றவற்றை தவிர்க்கும் பொருட்டு, நீங்கள் துணி உலர்த்தியைப் பயன்படுத்தும் பொழுது கடைப்பிடிக்க வேண்டிய சில அடிப்படை விதிகள் உள்ளன. அவைகளைப் பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. குளிக்கும் துணிகள் :

1. குளிக்கும் துணிகள் :

குளிக்கும் துணிகள் பொதுவாக சூரியக் குளியலுக்காக வெப்பமான சூழ்நிலையில் அணியப்படுகிறது. இத்தகைய துணிகளை ஒரு துணி துவைக்கும் இயந்திரத்தில் சலவை செய்யும் பொழுது, அவற்றின் தரம் மாறி விடும்.

இது தவிர அத்தகைய துணிகளின் நிறத்தை இழந்து விடும். மேழும் அவைகள் மோசமான வடிவத்திற்கு மாறி விடுவதால் அவைகளை அதன் பிறகு பயன்படுத்த இயலாது.

2. ஜீன்ஸ் :

2. ஜீன்ஸ் :

ஜீன்ஸை, துணி உலர்த்தும் இயந்திரத்தில் சலவை செய்யும் பொழுது, டெனிம் முற்றிலும் அழிந்து விடுகின்றது.

பெரும்பாலான டெனிம் துணிகளை, இயந்திரத்தில் துவைக்கும் பொழுது அவைகளின் நெகிழும் தன்மை மறைந்து போகின்றன. அதோடு அவைகளின் பளபளப்பும் அழியத்தொடங்குகின்றன.

எனவே டெனிம் துணிகளை துணி உலர்த்தும் இயந்திரத்தில் துவைக்காமல் கைகளால் துவைப்பது மிகவும் நல்லது.

நீங்கள் உங்களின் டெனிம் துணியின் நிறத்தை பாதுகாக்க நினைத்தால் அதை டீ அல்லது காபியில் ஊற வைத்து துவைக்க வேண்டும்.

அவ்வாறு செய்ய விரும்பவில்லை எனில் நீங்கள் ஒரு தேக்கரண்டி உப்பை தண்ணீரில் கலந்து அதில் உங்களின் டெனிமை ஊற வைத்து அதன் பின்னர் துவைக்க வேண்டும்.

 3. கேஷ்மியர் ஆடைகள்

3. கேஷ்மியர் ஆடைகள்

ஒவ்வொரு பெண்ணின் கனவு என்பது நல்ல மற்றும் கவர்ச்சிகரமான கேஷ்மியர் ஆடைகளாகத்தான் இருக்கும். ஒரு சிறிய தவறு உங்களின் கேஷ்மியர் ஆடைகளை முற்றிலும் அழித்து விடும்.

அடுத்த முறை நீங்கள் உங்களின் கேஷ்மியர் ஆடைகளைத் தொடும் பொழுது அது மிகவும் பழமையாகத் தோன்றினால், அதை கைகளால் துவக்க தொடங்குங்கள்.

அதற்குப் பதில் இயந்திரத்தில் துவைத்தால் பழையது மேழும் பழையதாகி விடும். நீங்கள் கேஷ்மியர் ஆடைகளை லேசான சோப்பு பயன்படுத்தி மிகவும் மென்மையாக துவைக்க வேண்டும். .

4. சாக்ஸ் :

4. சாக்ஸ் :

சாக்ஸ்களை ஒரு முறை இயந்திரத்தில் துவைத்த பிறகு அது பயனற்றதாகி விடுகின்றது. ஏனெனில் சாக்ஸ் அதன் நெகிழும் தன்மையை இழந்து விடுகின்றது.

ஆகவே சாக்ஸை ஒரு பொழுதும் இயந்திரத்தில் துவைக்காதீர்கள்.

சாக்ஸை கைகளால் துவக்க நேரம் இல்லாதவர்கள் கண்ணிப் பைகளை பயன்படுத்தலாம்.

கண்ணி பைகள் மற்ற துணிகளைபோன்றது. ஆனால் கண்ணிப் பைகளின் உள்ளே வைக்கப்பட்ட சாக்ஸ் துணிகள் இயந்திரத்தில் துவைக்கும் பொழுது அதன் நெகிழும் தன்மை அப்படியே இருக்கும்.

 5. ஜிப்பர்கள் :

5. ஜிப்பர்கள் :

ஜிப்பர்களை துணி உலர்த்தும் இயந்திரத்தில் துவைப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். ஏனெனில் ஜிப் திறந்து மென்மையான துணிகளை பாழாக்கி விடும்.

நீங்கள் ஒரு இயந்திரத்தில் ஜிப்பர்கள் கண்டிப்பாக துவைக்க வேண்டுமெனில், ஜிப்பை பூட்டி வைத்து துவக்க வேண்டும். உங்களால் முடிந்தால் உங்களின் ஜிப்பர்களை தயவுசெய்து கைகளால் துவையுங்கள்.

6. துண்டுகள் :

6. துண்டுகள் :

நீங்கள் தினசரி குளித்த பின்னர் துண்டுகளை ஒவ்வொருநாளும் உபயோகிக்கின்றீர்கள். சோப்பு அல்லது சலவை தூள் வைத்து துண்டுகளை சலவை செய்யும் பொழுது அவற்றில் சுருக்கம் ஏற்படலாம்.

துண்டுகளை சுருங்கிவிடாமல் தடுக்க அவைகளை சோப்பிற்கு பதில் வினிகர் அல்லது சமையல் சோடா பயன்படுத்தி கைகளால் துவைக்க வேண்டும்.

7. டைட்ஸ் :

7. டைட்ஸ் :

நீங்கள் எப்போதாவது உங்களின் இறுக்கமான கால் சட்டை உண்மையில் முன்பை விட இறுக்கமாக இருப்பதை உணர்ந்துள்ளீர்களா?

மென்மையான இந்த வகை துணிகள் நீங்கள் இயந்திரத்தில் துவைக்கும் பொழுது சுருங்கி விடும்.

நீங்கள் இயந்திரத்தில் துவைத்தது மட்டுமே இதற்கு காரணமாக இருக்கலாம். எனவே இந்த வகை துணிகளை இயந்திரத்தில் துவைப்பதற்கு பதில் கைகளால் துவைப்பது மிகவும் நல்லது.

பிரா :

பிரா :

பிரா மிகவும் மென்மையானது மற்றும் நெகிழ்வுத்தன்மை கொண்டது, எனவே இவைகளை இயந்திரத்தில் துவைப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

துணி உலர்த்தி வெளியிடும் வெப்பம் பொதுவாக ப்ராவின் நெகிழும் தன்மையை அழித்து அவைகளை நீளமாக்கிவிடும். எனவே நீங்கள் உங்களின் ப்ராவை இயந்திரத்தில் துவைப்பதை தவிர்த்து இவைகளை கைகளால் துவைத்து அவைகளை தரையில் உலர்த்த வேண்டும்

9. அழகுபடுத்தப்பட்ட ஆடைகள்

9. அழகுபடுத்தப்பட்ட ஆடைகள்

நாம் ஒவ்வொருவரும் எம்ப்ராயடரி மற்றும் கற்கள் வைத்து அழகுபடுத்தப்பட்ட ஆடைகளை மிகவும் விரும்புகின்றோம்.

ஆனால், இந்த பிரத்தியேக ஆடைகளின் பராமரிப்பு என்று வரும் பொழுது அவைகளை இயந்திரத்தில் உலர்த்தி நாம் மிகப் பெரிய தவறை புரிகின்றோம். எனவே இத்தகைய துணிகளை கைகளால் துவைத்து தரையில் உலர்த்த வேண்டும்.

10. ரன்னிங் ஷூ

10. ரன்னிங் ஷூ

ரன்னிங் ஷூக்களை சலவை செய்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவ்வாறு செய்வதால் அதன் குஷனிங் அழியக் கூடும் மற்றும் துணி வலுவிழந்து விடும்.

இது தவிர, ஒரு சலவை இயந்திரத்தில் உருவாகும் வெப்பம் ஷுக்களில் உள்ள ரப்பரை சுருக்கி காலணிகளை அழித்து விடும்.

எனவே, நீங்கள் துணி உலர்த்தும் இயந்திரத்தை அடுத்தமுறை பயன்படுத்தும் பொழுது நீங்கள் மேலே குறிப்பிட்டுள்ள விதிகளை கண்டிப்பாக பின்பற்றுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Avoid dryer to dry cloths

The things you should not do for your cloths,
Desktop Bottom Promotion