Latest Updates
-
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது!
குளிர் காலத்தில் வீட்டை சுத்தப்படுத்துவதற்கான சில டிப்ஸ்...
நீங்கள் வாழ்வில் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் வாழ உங்கள் இல்லத்தை சுத்தமாக வைப்பது அவசியம். ஆனால் குளிர் காலத்தில், வீட்டை சுத்தப்படுத்த, கூடுதல் கவனம் தேவை. தீவிரமான தட்ப வெப்ப நிலை மாற்றத்தின் காரணமாக, கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. குளிர் காலம் முடிந்து, வெப்ப நிலை மாறும் போது, மீண்டும் சுத்தப்படுத்த வேண்டிய வேலைகள் அதிகரிக்கும். பனிகட்டியால் சூழப்பட்ட செருப்புகள், கார் மற்றும் சகதி, ஈரப்பதம் போன்ற குளறுபடிகளால் குளிர் காலங்களில் வீட்டை தூய்மை செய்வது கடினமானது. உங்கள் வீட்டில் உள்ள கண்ணாடி ,பர்னிச்சர் மற்றும் ஜன்னல்களில் பனிமூட்டம் படிந்து விடுகிறது. ஈரப்பதத்தில் இருந்து வீட்டை காக்க நீங்கள் சில உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
வெளியில் நிலவும் கடுமையான குளிரில் இருந்து உங்கள் வீட்டை காக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுப்பது என சம்பித்து நிற்கிறீர்களா? பிறகு வீட்டில் உள்ள அனைத்து பொருட்களையும் மாற்றி அடுக்க முயலுவீர்கள். பர்னிச்சர், குஷன், மிதியடிகள் மற்றும் திரை சீலைகள் போன்றவற்றின் இடங்களை மாற்றி அடுக்குவீர்கள். ஆனால் இந்த மாற்றத்தால் சுத்தம், சுகாதாரம் போன்றவற்றில் எந்த மாற்றமும் ஏற்படபோவதில்லை.
குளிர் காலங்களில், பல விஷயங்களில் உங்களுடைய மேற்பார்வை அவசியம். குளிர் கால நேரங்களில், வீட்டை அழகாகவும், தூய்மையாகவும் வைத்திருப்பது ஒன்றும் கடினமான காரியம் அல்ல. சில டிப்ஸ் மற்றும் வழிகளை பின்பற்றுவதன் மூலம் எளிதில் சுத்தப்படுத்தலாம். அதற்கான வழிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

தரையை சுத்தப்படுத்துதல்
உங்கள் அறைகளில் நீர் சத்து மிகுந்து ஈரப்பதம் நிலவினால், அது பல சிக்கல்களுக்கு வழி வகுத்து விடும். வீட்டில் குழந்தைகள் இருந்தால், தரையை உலர்வாக வைப்பது மிகவும் அத்தியாவசியமாகும். அவர்கள் எதிர்பாராமல் விழுவதை தவிர்க்க இது அவசியமாகும். உலர்ந்த மாப் மூலம் தரையை நன்கு துடைத்துவிட வேண்டும்.

ஜன்னல்களை சுத்தப்படுத்துதல்
குளிர் காலத்தில் இல்லத்தை தூய்மைபடுத்துவதில் மிகவும் முக்கியமான டிப்ஸ், ஜன்னல் கண்ணாடிகளை சுத்தப்படுத்துதலே ஆகும். ஜன்னல்களில் பொதுவாக காற்று மற்றும் குளிர் அதிக அளவில் மோதுகிறது. உங்களது அறையில் ஹீட்டர் உபயோகிப்பதன் மூலம், ஜன்னல்களில் படிந்த பனியானது எளிதில் உருகி விடும்.

பர்னிச்சர்களுக்கு பாலிஷ் செய்தல்
குளிர்காலத்தில் மரத்தால் ஆன பர்னிச்சர்களுக்கு பாலிஷ் செய்வதன் மூலம், பூஞ்சைகளின் தாக்கத்திலிருந்து காக்கலாம். எனவே, குளிர் காலம் துவங்குவதற்கு முன்னமே, மர சாமான்களுக்கு பாலிஷ் செய்வது நல்லது.

கண்ணாடிக் கதவுகளை கழுவுதல்
சமயலறை போன்ற நெருப்பு உபயோகிக்கும் இடங்களின் அருகில் கண்ணாடி கதவுகள் இருப்பின், அவற்றில் புகை எளிதில் படிந்து விடும். இதனால் சூரிய ஒளி அறைக்குள் புகுவது தடுக்கப் படுகிறது. இதனால் கண்ணாடி கதவுகளை உட்புறமாக நன்கு தேய்த்து கழுவ வேண்டும். இதுவும் மிக முக்கியமான டிப்ஸ் ஆகும்.

முகம் பார்க்கும் கண்ணாடியை சுத்தப்படுத்துதல்
உங்கள் கண்ணாடி உங்களை முழுவதுமாக பிரதிபலிக்கவில்லை என உணருகிறீர்களா? அப்படியானால், உங்கள் கண்ணாடியில், நீராவி படிந்துள்ளது. அதை ஒரு உலர்ந்த செய்தி தாளை வைத்து துடைத்து, முகத்தில் பூசும் பவுடரை தேய்த்து, பின் துடைக்க வேண்டும். இதனால்,கண்ணாடியை சுத்தப்படுத்தலாம்.

குளிக்கும் அறையை சுத்தப்படுத்துதல்
குளியலறையை சுத்தமாகவும், உலர்வாகவும் வைத்துக் கொள்ள வேண்டும் .இதுவே குளிர்காலத்தில் இல்லத்தின் சுத்தத்திற்கு தேவையான மிக முக்கிய டிப்ஸ். குளியலறையில் உள்ள டைல்ஸ்களை எலுமிச்சை எண்ணெய் கொண்டு தேய்த்து கழுவினால், பூஞ்சைகள் உருவாவதை தவிர்க்கலாம்.

மிதியடிகளை சுத்தப்படுத்துதல்
பெரும்பாலும் மிதியடிகளில் ஈரப்பதத்தின் காரணமாக பூஞ்சைகளும், பாக்டிரியாக்களும் தாக்குகின்றன. இதனால் குளிர் காலத்தில் மிதியடிகளை அடிக்கடி அலசி சுத்தம் செய்ய வேண்டும்.

துணி அலமாரிகளை சுத்தப்படுத்துதல்
ஆடைகளை அடுக்கும் தட்டுகளை முதலில் சுத்தம் செய்ய வேண்டும். ஆடைகளை அடுக்குவதற்கு முன், அலமாரி தட்டுகளில் செய்தி தாளை விரித்து பின் அடுக்க வேண்டும். குளிர் காலத்திற்கான சுத்தப்படுத்துதலில், இது முக்கியமான அம்சம்.

குளிர் காலத்திற்கு பயன்படும் போர்வைகளை துவைத்தல்
குளிர் காலத்திற்கான, வீட்டை தூய்மைபடுத்தலில், போர்வைகளை துவைத்து வைத்தல் அத்தியாவசியமான ஒன்று. இது உங்கள் படுக்கையின் சுத்தத்திற்கு மிகவும் தேவை. இதன் மூலம் ஆஸ்த்துமா, அலர்ஜி போன்றவை ஏற்படாமல் தவிர்க்கலாம்.

திரைகளையும், திரை சீலைகளையும் சுத்தப்படுத்துதல்
திரை சீலைகளும், திரைகளும் பூஞ்சைகள் மற்றும் பாக்டிரியாக்களால் பாதிக்கப்பட்டு கெட்ட நாற்றத்தை ஏற்படுத்துகின்றன. குளிர் காலத்திற்கான தூய்மைபடுத்தலில், திரைசீலைகளையும் சுத்தப்படுத்துவது இன்றியமையாதது.



Click it and Unblock the Notifications