For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பட்டாசுக்களால் தரையில் ஏற்பட்ட கறைகளைப் போக்க சில வழிகள்!!!

By Maha
|

தீபாவளி பண்டிகையின் போது அனைவரும் பல்வேறு பட்டாசுக்களை விட்டு குதூகலமாக இருந்திருப்போம். அப்படி சந்தோஷமாக பட்டாசுக்களை வீட்டின் முன்பும், மாடியிலும் வெடித்ததால் தரையில் கருப்பாக கறைகளானது படிந்திருக்கும். இதனால் தரையே கேவலமாக இருக்கும். மேலும் அப்படி படிந்துள்ள கறைகளை வெறும் நீர் கொண்டு போக்குவது என்பது சுலமானது அல்ல.

ஆனால் வீட்டில் இருக்கும் ஒருசில பொருட்களைப் பயன்படுத்தி தரையை சுத்தம் செய்தால், பட்டாசுக்களால் ஏற்பட்ட கறைகளை எளிதில் நீக்கலாம். இங்கு தரையில் ஏற்பட்ட பட்டாசுக் கறைகளைப் போக்க சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் பார்ப்போமா!!!

சோப்புத் தண்ணீர்

Ways To Remove Cracker Burns From Your Terrace

சில நேரங்களில் வெறும் தண்ணீரைக் கொண்டு தரையை சுத்தம் செய்தாலும் கறைகளானது போகாமல் இருக்கும். அந்த சமயங்களில் கறைப் படிந்த இடத்தில் சோப்பு நீரை தெளித்து சிறிது நேரம் ஊற வைத்து, பின் தேய்த்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

எலுமிச்சை

கறைகளானது கடுமையாக இருந்தால், எலுமிச்சையைப் பயன்படுத்தலாம். ஏனெனில் எலுமிச்சையில் உள்ள அமிலமானது, கடுமையான கறைகளையும் எளிதில் நீக்கும்.

ப்ளீச்சிங் பவுடர்

ப்ளீச்சிங் பவுடர் கூட அருமையான ஒரு பொருள். எனவே கறைப் படிந்த இடத்தில் ப்ளீச்சிங் பவுடரை தூவி 2-3 மணிநேரம் கழித்து, துடைப்பம் கொண்டு நன்கு தேய்த்து கழுவினால், கறைகள் அகலும்.

மண்ணெண்ணெய்

தரையில் படிந்துள்ள கடுமையான கறைகளை எளிதில் நீக்க மண்ணெண்ணெய் பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு மண்ணெண்ணெயை கறையுள்ள இடத்தில் தெளித்து துணியால் துடைத்து எடுக்க வேண்டும். மேலும் சிலர் மண்ணெண்ணெயை மற்ற கறைகளைப் போக்கவும் இதனைப் பயன்படுத்துவார்கள்.

English summary

Ways To Remove Cracker Burns From Your Terrace

Here are some effective ways to remove cracker stains from your terrace. Read on...
Story first published: Monday, October 27, 2014, 17:27 [IST]
Desktop Bottom Promotion